கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினைகள் தீர உதவும் கோ தானம்!!

அனைவரும் ஏதோ ஒரு வகையில் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதாரண மனிதர்கள் வரை, ஞானியர்கள் வரை அனைவரும் கடன் தீர வேண்டும் என்று தான் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். சாதாரண மனிதர்கள் பணத்தால் ஏற்பட்ட கடனை அடைக்க அருள் செய்யும் படி இறைவனை வேண்டுகிறோம். பசியோடு கூட உறங

By Prem Kumar · 4/8/2025

அனைவரும் ஏதோ ஒரு வகையில் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதாரண மனிதர்கள் வரை, ஞானியர்கள் வரை அனைவரும் கடன் தீர வேண்டும் என்று தான் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். சாதாரண மனிதர்கள் பணத்தால் ஏற்பட்ட கடனை அடைக்க அருள் செய்யும் படி இறைவனை வேண்டுகிறோம். பசியோடு கூட உறங்கலாம், கடனோடு உறங்காதே என்பது ஆன்மிகம் காட்டும் அறிவுரை. பொதுவாக நம் வீட்டில் எவ்வளவு தான் பணம் தந்தாலும் அதற்கு செலவுகளும் வந்து கொண்டே தான் இருக்கும். மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் கடன், வியாதி போன்ற கர்மவினைகள் அவர்களின் வாழ்நாள் முழுவதும் துரத்திக் கொண்டே இருக்கும். அதிலிருந்து தப்பிக்க நம் முன்னோர்கள் ஜோதிட ரீதியாக கடன் பிரச்சனைகளை தீர்க்க சிறந்த பலன்களை கூறியுள்ளார்கள். அது என்ன‌ பரிகாரம் என்ன இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.

கோ மாதாவின் முக்கியத்துவம்

ஸ்கந்த புராணம், விஷ்ணு புராணம் போன்ற புராணங்களில் கூறப்படுவது போல், கோ மாதாவின் உடலில் 33 கோடி தேவதைகள் குடியிருப்பதாக நம்பப்படுகிறது. கண்களில் சூரியன் மற்றும் சந்திரன், காதுகளில் அசுவினி தேவதைகள், நாக்கில் சரஸ்வதி தேவி, மார்பகத்தில் விஷ்ணு, நாபியில் பிரம்மா, கால்களில் ஹிமவான், கங்கை மற்றும் யமுனை போன்ற தீர்த்தங்கள், இடுப்பில் கந்தர்வர்கள் மற்றும் அப்ஸராசுகள், முதுகில் நாக தேவர்கள், வாலில் சணீஸ்வர பகவன், குடல் மற்றும் உள் உறுப்புகளில் யக்ஞம் மற்றும் வேத ஹோமங்கள் இருக்கின்றன என்று கூறப்படுகிறது. எனவே கோ மாதாவை வழிபடுவது, எல்லா தேவதைகளையும் வழிபடுவது போன்றதாக கருதப்படுகிறது.

கோ தானம்

கோ தானம் வேதம், புராணங்கள், சாஸ்திரங்கள் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் மிக உயர்ந்த புண்ணியத்தைக் கொடுக்கும் தானமாக கூறப்பட்டுள்ளது. கோ தானம் செய்வதன் மூலம் நாம் இந்த ஜென்ம பவங்களை விலக்கி, மேலான ஆத்ம சுத்திக்கு செல்லலாம். இறப்புக்குப் பின் வைகுண்டம் அல்லது சிவலோகம் போன்ற மோக்ஷ பாதைகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. கோ தானம் செய்பவர்கள் பசுவை சரியாக பராமரிக்கக்கூடிய சக்தி படைத்தவராக இருக்கு வேண்டும். தானம் செய்ய வேண்டிய பசு கன்றுடன் கூடியதாக இருக்க வேண்டும். குறிப்பாக, முதல் கன்றாக இருந்தாலே நல்லது. வியாதி இல்லாமல் ஆரோக்கியமாக உள்ள பசுவையே தானம் செய்ய வேண்டும்.

எந்த நாளில் கோ தானம் செய்ய வேண்டும்?

கோ தானம் செய்ய விரும்புவர்கள் சித்திரை மாதத்தில் வளர்பிறை அல்லது தேய்பிறையில் வரும் சதுர்த்தியன்று விரதமிருந்து பசுவை தானம் செய்யலாம். அல்லது பவித்ர ஏகாதசி, பித்ரு பக்ஷம் நாட்கள், கார்த்திகை மற்றும் பங்குனி மாதங்களில் வரும் சுப தினங்கள், பிரதமை, சதுர்தசி, பூர்ணிமா போன்ற நாட்களில் கோ தானம் செய்தால் இரட்டிப்பு புண்ணியம் கிடைக்கும். பித்ரு தோஷ நிவாரணம், ஆத்ம சாந்தி மற்றும் மோட்சப் பெற வேண்டி கோ தானம் செய்பவர்கள் சுபஹோரையில் சுத்தமான மனதுடன் தானம் செய்தால் மிகுந்த புண்ணியம் கிடைக்கும்.

கோ தானம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்

தானங்களில் பசு தானம் மிக விசேஷமாக கருதப்படுகிறது. பசு தானம் செய்பவன் தனது முன்னோர்களை மோட்சத்திற்கு அனுப்புவதாக கூறப்பட்டுள்ளது. சுப காரியங்கள் வெற்றிகரமாக நடக்கவும், தனது வம்சம் சிறப்புற விளங்கவும் ஒருவர் பசு தானம் செய்யலாம். ஒருவர் தான் இறக்கப் போகிறோம் என்று தெரிந்தவுடன் தனக்காக தானே பசு தானம் செய்யலாம். ஒருவர் இறக்கும் தருவாயில் கோ தானம் செய்வதால் எம பயம் விலகும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோ தானம் செய்வதால் ராகு-கேது தோஷம், நவகிரஹ சாபம் போன்ற கர்ம பிரச்சனைகள் விலகும். கோ தானம் செய்தவனுக்கு அடுத்த ஜென்மத்தில் ஏழை படுதல், நோய், துக்கம் ஆகியவை வராது, உயர்ந்த குடும்பத்தில் பிறந்து, சுக வாழ்வு அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் கோ தானம் செய்யும் போது கடன் பிரச்சனை தீரும், நிதிப்பற்றாக்குறை சீராகும். சிவபெருமானுக்கு அத்தியந்தப் பிரியமான புண்ணிய செயல் இந்த கோ தானம் ஆகும். சிவனுக்குரிய இந்த கோ தானம் செய்தால் சிவபெருமான் அதனை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்று, தனது திருவருளை வழங்குவார்.

இதனையும் படியுங்கள் : பசு மாட்டிற்கு இந்த 1 பொருளை தானம் கொடுத்தால் லட்சக்கான கடனும் தீரும்!

Recipes AMP · Quick view
View full