அடுத்தமுறை இறால் வாங்கினால் கோங்குரா இறால் ப்ரை இப்படி செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

கடல் உணவுகள் அனைத்திலுமே ஒமேகா-3 அதிகம் இருக்கிறது. எனவே சிக்கன், மட்டனை விட, கடல் உணவுகள் மிகவும் ஆரோக்கியமானவை. அதிலும் இறால் உடலுக்கு வலிமையைத் தரக்கூடியது. அசைவப் பிரியர்களின் உணவில் முக்கியமாக இருப்பது கடல் உணவுகளே. அதிலும் இறால் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனை

By Prem Kumar · 18/2/2024

கடல் உணவுகள் அனைத்திலுமே ஒமேகா-3 அதிகம் இருக்கிறது. எனவே சிக்கன், மட்டனை விட, கடல் உணவுகள் மிகவும் ஆரோக்கியமானவை. அதிலும் இறால் உடலுக்கு வலிமையைத் தரக்கூடியது. அசைவப் பிரியர்களின் உணவில் முக்கியமாக இருப்பது கடல் உணவுகளே. அதிலும் இறால் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அத்தகைய இறாலை பலரும் மசாலா செய்து தான் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அதனைக் கொண்டு ஆந்திரா ஸ்டைலில் கோங்குரா இறால் செய்து சாப்பிடலாம்.

இந்த ஆந்திரா ஸ்டைல் கோங்குரா இறால் அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த கோங்குரா இறால் ரெசிபி தெலுங்கு மக்களின், குறிப்பாக கோதாவரி மாவட்டங்களின் சிறப்பு உணவாகும். கோங்குரா இறால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகவும் புகழ் பெற்ற உணவு வகை. இது இந்தியா தவிர பாகிஸ்தானிலும் மிகவும் பிரபலம்.

சாதம், சப்பாத்தி, பரோட்டா, முக்கியமாக பிரியாணியுடன், சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். இந்த செய்முறை மிகவும் எளிமையானதும் கூட. நீங்கள் ஆந்திரா ரெசிபி பிரியர் என்றால், இந்த வாரம் இதை முயற்சித்துப் பாருங்கள். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இந்த கோங்குரா இறால் குழம்பு ருசியாக இருக்கும்.

Recipes AMP · Quick view
View full