நல்ல சம்பளத்தில் நிரந்தரமான வேலை கிடைக்க வேண்டுமா ? இப்படி ஒரே ஒரு அகல் விளக்கு மட்டும் ஏற்றுங்கள் போதும்!

இந்த உலகில் ஒரு மனிதனுக்கு இந்த இரண்டும் இருந்து விட்டால் போதும், அவனை விட பெரும் அதிர்ஷ்டசாலிகள் யாரும் இருக்க மாட்டார்கள். முதலில் ஒரு மனிதனுக்கு பணம் அவசியம் தேவை இரண்டாவதாக நல்ல வருமானத்தில் ஒரு நிரந்தர வேலை இந்த இரண்டும் சரியாக இருக்கும் ஒருவனை தான் இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளு

By Prem Kumar · 25/9/2023

இந்த உலகில் ஒரு மனிதனுக்கு இந்த இரண்டும் இருந்து விட்டால் போதும், அவனை விட பெரும் அதிர்ஷ்டசாலிகள் யாரும் இருக்க மாட்டார்கள். முதலில் ஒரு மனிதனுக்கு பணம் அவசியம் தேவை இரண்டாவதாக நல்ல வருமானத்தில் ஒரு நிரந்தர வேலை இந்த இரண்டும் சரியாக இருக்கும் ஒருவனை தான் இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளும், அவனை தான் மதிக்கும். அதனால் இத்தனை நாட்கள் நல்ல சம்பளத்தில் நிரந்தரமான வேலை கிடைக்காதா என்று ஓடிக் கொண்டிருந்த உங்களுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கும் பணம் சேராத உங்களிடம் பணம் சேருவதற்கும் என்ன செய்ய வேண்டும் என்பதனை இந்த ஆன்மீகம் குறித்து தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

அரச மரம் பரிகாரம்

உங்களுக்கு நல்ல சம்பளத்தில் ஒரு நிரந்தரமான வேலை கிடைப்பதற்கு ஒரு சிறிய எளிமையான பரிகாரம் செய்ய வேண்டும். நாம் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்வதற்கு சனிக்கிழமை அன்று காலை 6.00 மணி முதல் 7:00 மணிக்குள் செய்து முடிக்க வேண்டும். அப்படி நீங்கள் செய்யும் இந்த பரிகாரத்தை ஒரு அரச மரத்தின் அடியில் தான் செய்ய வேண்டும். அதனால் பரிகாரத்திற்கு தேவையான அனைத்தையும் நீங்கள் பரிகாரம் செய்ய நினைக்கும் நாளுக்கு முந்தைய நாள் இரவே தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

பரிகாரம் செய்ய தேவையானவை

மேலும் இந்த பரிகாரம் செய்ய நமக்கு பணங்கற்கண்டு தேவைப்படும். இந்த பனங்கற்கண்டு உங்கள் வீட்டில் அருகில் உள்ள மளிகை கடைகள் அல்லது நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இதை தவிர இந்த பரிகாரம் செய்ய உங்களுக்கு ஒரு சொம்பு, ஒரு அகல் விளக்கு, நல்லெண்ணெய், பஞ்சு திரி அத்துடன் ஒரு கைப்பிடி பச்சரிசியை தேவைப்படும் அரிசியை நீங்கள் பரிகாரம் செய்யும் நாளுக்கு முந்தைய நாள் இரவே ஊறவைத்து காலையில் தண்ணீரை வடித்து அதை மிக்ஸியில் சேர்த்து சிறிது கொரகொரப்பாக அரைத்து அதனுடன் இனிப்பிற்காக வெல்லம் அல்லது சர்க்கரை இந்த இரண்டு பொருட்களில் ஒரு பொருள்களை சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் நாம் பரிகாரம் செய்வதற்கு தேவையான
பொருட்கள் எடுத்து கொள்ளுங்கள்.

பரிகாரம்

அதன் பின்பு பரிகாரம் செய்யும் சனிக்கிழமை நாளில் காலையில் எழுந்து சுத்த பத்தமாக குளித்துவிட்டு உங்கள் வீட்டின் பூஜை அறையில் பூஜை செய்து விளக்கேற்றி வைத்துவிட்டு நீங்கள் பரிகாரம் செய்ய தயாராக வைத்திருக்கும் பொருட்களை எடுத்துக்கொண்டு உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் அரச மரத்திற்கு சென்று விடுங்கள். நீங்கள் பரிகாரம் செய்யும் தேர்ந்தெடுத்துள்ள அரசமரம் கோவில் அரச மரமாக இருந்தால் இன்னும் சிறப்பானதாக இந்த பரிகாரம் இருக்கும்.

பிராத்தனை செய்து கொள்ளுங்கள்

இப்பொழுது நீங்கள் வைத்திருக்கும் சொம்பு நிறைய தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள் அந்த தண்ணீரில் நீங்கள் வாங்கி வைத்திருக்கும் பணம் இருக்கு இல்லை ஒழித்து சேர்த்துக் கொள்ளுங்கள் இந்த பணங்கற்கண்டு சேர்த்தவுடன் தண்ணீரின் நிறம் மாற வேண்டும். அந்த அளவிற்கு பணங்கற்கண்டு எடுத்துக்கொண்டு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு அரச மரத்தின் கிழக்கு பக்கம் பார்த்தவாறு நின்று கொண்டு இந்த தண்ணீரை அரச மரத்தின் வேர்க்கு ஊற்ற வேண்டும். அப்படி நீங்கள் இந்த தண்ணீரை அரசமரத்துக்கு ஊற்றும் பொழுது உங்களுக்கு நல்ல சம்பளத்தில் ஒரு நிரந்தரமான வேலை கிடைக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு ஊற்றுங்கள்.

அகல் விளக்கு ஏற்றவும்

அரச மரத்தின் வேருக்கு தண்ணீர் ஊற்றியதும் அந்த அரச மரத்திலிருந்து ஏழு அரசு இலைகளை எடுத்து அந்த இலைகளை ஒன்றின் மீது ஒன்றாக வைத்து அதன் மேல் நீங்கள் கொண்டு சென்ற அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றுங்கள். பிறகு அரச மரத்தை தொட்டு வணங்கி எட்டு முறை சுற்றி வாருங்கள் இதன் பின் நீங்கள் அரைத்து கொண்டு வந்த பச்சரிசி மாவை அரச மரத்தடியில் வைத்து விட்டு வாருங்கள்.

பணவரவும் அதிகரிக்கும்

இந்த பரிகாரத்தை நீங்கள் சரியாக சனிக்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் மட்டும்தான் செய்ய வேண்டும் இந்த பரிகாரத்தை மாலை நேரங்களில் செய்யக்கூடாது இப்படி இந்த பரிகாரத்தை நீங்கள் தொடர்ந்து செய்து வரும்போது உங்களுக்கு நிச்சயமாக நல்ல சம்பளத்தில் நிரந்தரமான வேலை கிடைக்கும் இதன் மூலமாக உங்கள் வீட்டில் பண வரவு என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கும் முழு நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் இந்த பரிகாரத்துடைய முழு பலனும் உங்களுக்கு கிடைக்கும்.

Recipes AMP · Quick view
View full