பச்சை மிளகாய் சிக்கன் லெக் பிரை இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

சிக்கன் பிரியாணில யாருக்காவது லெக் பீஸ் கிடைச்சுதுனா அவங்க ரொம்ப ரொம்ப லக்கி அப்படின்னு சொல்லுவாங்க அந்த அளவுக்கு லெக் பீஸ் அப்படினா ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். லெக் பீஸ் வச்சு பெரும்பாலும் பிரியாணி தான் செய்வாங்க அதுக்கு அப்புறமா ஃப்ரை பண்ணுவாங்க. அந்த வகையில இன்னைக்கு

By Prem Kumar · 6/4/2026

சிக்கன் பிரியாணில யாருக்காவது லெக் பீஸ் கிடைச்சுதுனா அவங்க ரொம்ப ரொம்ப லக்கி அப்படின்னு சொல்லுவாங்க அந்த அளவுக்கு லெக் பீஸ் அப்படினா ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். லெக் பீஸ் வச்சு பெரும்பாலும் பிரியாணி தான் செய்வாங்க அதுக்கு அப்புறமா ஃப்ரை பண்ணுவாங்க. அந்த வகையில இன்னைக்கு நம்ம எப்பவும் போல லெக் ஃபிரை பண்ணாம கொஞ்சம் வித்தியாசமா புதினா இலைகள், கொத்தமல்லி இலைகள், பச்சை மிளகாய் எல்லாமே சேர்த்து ஒரு சூப்பரான பச்சை மிளகாய் லெக் பிரை செய்ய போறோம். எப்போமே ரெட் கலர்ல சிக்கன் லெக் ப்ரை சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இந்த மாதிரி கிரீன் கலர்ல காரத்துக்கு வெறும் பச்சை மிளகாய் மட்டும் சேர்த்து சூப்பரான இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

இதுக்கு தேவையான பொருட்களை எல்லாம் மிக்ஸியில் போட்டு அரைக்காமல் வீட்ல அம்மிக்கல் இருந்தா அதுல சேர்த்து இடிச்சு செய்யலாம் இடிக்கல் இருந்தா கூட அதுல போட்டு இடிச்சு செய்யலாம். இது எதுவுமே இல்ல அப்படின்னா மிக்ஸி ஜார்ல போட்டு கொரகொரப்பா அரைச்சு இந்த ரெசிபியை செய்யலாம் அரிசி மாவு சேர்க்கிறதால நல்லா மொறுமொறுப்பா இருக்கும். லெக் வாங்கி அதுல நல்லா கோடு போட்டு அதுக்குள்ள நல்ல மசாலா இறங்குற மாதிரி மசாலா தடவி மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்க வேண்டும். அப்பதான் உள்ள எல்லாம் நல்லா வெந்து சாப்பிடுவதற்கு சூப்பராக இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை ஒரு தடவை செஞ்சு பாருங்க சிக்கன் பிரியாணி செஞ்சுட்டு அதுக்கு சைட் டிஷ் ஆக இந்த ரெசிபியை செய்து பார்க்கலாம் கண்டிப்பாக சுவையாக இருக்கும்.

இதனையும் படியுங்கள் : சீஸி சிக்கன் குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு கொடுங்க!!

Recipes AMP · Quick view
View full