Advertisement
ஸ்வீட்ஸ்

தித்திக்கும் சுவையில் நிலக்கடலை குலோப்ஜாமுன் இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

பொதுவாக நாம் வீடுகளில் சாதாரண நாட்களில் பலகாரங்கள் செய்வது கிடையாது. ஆனால் பண்டிகை நாட்கள் என வந்துவிட்டால் போதும் நாம் விரும்பி சாப்பிடும் பலகாரங்களை குடும்பத்துடன் செய்து குடும்பத்துடனே சாப்பிட்டு அந்த பண்டிகை நாட்களை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறோம். ஆனால் தற்போது வீடுகளில் பலகாரங்கள் செய்வது குறைந்து வருகிறது ஆனால் இந்த தீபாவளி பண்டிகைக்கு உங்கள் குடும்பத்துடன் இந்த நிலக்கடலை குலோப் ஜாமூன் ரெசிபி செய்து சாப்பிட்டு இந்த பண்டிகையை கொண்டாடுங்கள்.

இதையும் படியுங்கள் : நாவில் பட்ட உடன் கரையும் வாழைப்பழ அல்வா செய்வது எப்படி ?

Advertisement

ஆம், இன்று சுவையான நிலக்கடலை குலோப் ஜாமுன் ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம் குலோப் ஜாமுன் என்றால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள் அனைவருக்கும் பிடித்தமான ஒரு இனிப்பு. ஆகையால் இன்று நிலக்கடலை குலோப் ஜாமுன் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

நிலக்கடலை குலோப் ஜாமுன் | Groundnut Gulab Jamun Recipe in Tamil

Print Recipe
தற்போது வீடுகளில் பலகாரங்கள் செய்வது குறைந்து வருகிறது ஆனால் இந்த தீபாவளி பண்டிகைக்கு உங்கள் குடும்பத்துடன் இந்த நிலக்கடலை குலோப் ஜாமூன் ரெசிபி செய்து சாப்பிட்டு இந்த பண்டிகையை கொண்டாடுங்கள். ஆம், இன்று சுவையான நிலக்கடலை குலோப் ஜாமுன் ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம் குலோப் ஜாமுன் என்றால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள் அனைவருக்கும் பிடித்தமான ஒரு இனிப்பு.
Course sweets
Cuisine Indian, TAMIL
Keyword Gulab Jamun, குலோப் ஜாமுன்
Prep Time 20 minutes
Cook Time 30 minutes
Total Time 50 minutes
Servings 6 People
Calories 137

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 பெரிய பாத்திரம்

Ingredients

குலோப் ஜாமுன்

  • 1 ½ கப் நிலக்கடலை
  • 250 ML பால்
  • 1 ½ கப் மைதா
  • 15 முந்திரி பருப்பு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 சிட்டிகை பேக்கிங் சோடா
  • 1 சிட்டிகை கேசரி பவுடர்

ஜீரா செய்ய

  • ¼ KG சர்க்கரை
  • 3 ஏலக்காய்
  • தண்ணீர் தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நாம் வைத்திற்கும் நிலக்கடலைகளை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பின்பு வருத்த நிலக்கடலையினா தோல் பகுதிகளை நீக்கி கொள்ளவும்.
    Advertisement
  • அதன்பின்பு ஒரு பவுளில் பாலை ஊற்றி அதனுடன் நான் வறுத்துவைத்த நிலக்கடலை மற்றும் முந்திரி பருப்புகளை சேர்த்து ஒரு 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு பாலில் ஊற வைத்த நிலக்கடலை மற்றும் முந்திரி பருப்புகளை மட்டும் தனியாக எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுது போல் அரைத்து கொள்ளுங்கள். பின்பு ஒரு பவுலில் நாம் அரைத்த நிலக்கடலை விழுதை சேர்த்து கொள்ளவும்.
  • Advertisement
    பின் நாம் அரைத்த விழுதுடன் மைதா மாவு, ஏலக்காய் பொடி, கேசரி பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின்பு சிறிது தண்ணீர் சேர்த்து உருண்டை பிடிக்கும் பதத்திற்கு வரும்வரை பிசைந்து அதன் பின் குலோப் ஜாமுனுக்கு தேவையான அளவு உருண்டையை மென்மையாக பிடித்துக் கொள்ளுங்கள்.
  • பின் கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் நாம் பிடித்த உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து குலோப் ஜாமுன் ஜீரா தயார் செய்து கொள்ளுங்கள். ஜீரா செய்யும் போது அதனுடன் ஏலக்காயும் தட்டி சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பின் ஜீரா செய்து முடித்தவுடன் நாம் எண்ணெயில் பொறித்த குலோப் ஜாமுன் உருண்டைகளை ஜீராவில் சேர்த்து ஊற வையுங்கள். ஜீராவில் குலோப் ஜாமுன் நன்கு ஊறியதும் சாப்பிடுவதற்கு பரிமாறிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான நிலக்கடலை குலோப் ஜாமுன் தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 20கிராம் | Calories: 137kcal | Carbohydrates: 46g | Protein: 8.3g | Fat: 19g | Saturated Fat: 4.5g | Cholesterol: 22.8mg | Sodium: 18mg | Potassium: 435mg | Sugar: 36g | Calcium: 3.4mg

English Overview: groundnut gulab jamun is one of the most important sweet in india. groundnut gulab jamun recipe or groundnut gulab jamun seivathu eppadi or groundnut gulab jamun in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Advertisement
Prem Kumar

Recent Posts

இனி காலை உணவாக மொறு மொறுவென்று இந்த பாலக் கீரை அடை தோசை செய்து பாருங்கள் இதன்‌ சுவையை விவரிக்க வார்த்தைகளே இருக்காது!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

20 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 05 மே 2024!

மேஷம் இது மிக அழாகான மற்றும் சிறப்பான நாளாகும். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஆதரவு தருவதால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய…

3 மணி நேரங்கள் ago

குரு பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட…

12 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு…

14 மணி நேரங்கள் ago

எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும்.…

15 மணி நேரங்கள் ago

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

20 மணி நேரங்கள் ago