Advertisement
சைவம்

ஆந்திரா குண்டூர் கார சட்னி இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! சும்மா ஒரே மாதிரியே சட்னி வைக்காதீர்கள்!

Advertisement

வணக்கம் நண்பர்களே பெரும்பாலும் இட்லி தோசைக்கு சாம்பார் சட்னி வைத்து சாப்பிடுவோம். சட்னி னு எடுத்துக்கிட்டோம் அப்படின்னா அதுல பல வகை இருக்கு. தேங்காய் சட்னி தக்காளி சட்னி, மல்லி சட்னி புதினா சட்னி, கார சட்னி இப்படி வித விதமா சட்னி இருக்கு. பெரும்பாலும் எல்லாரும் விரும்புறது கார சட்னி.

இதையும் படியுங்கள் : தட்டு கடை காரசாரமான தண்ணீர் கார சட்னி ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

அதுவும் தோசைய நல்லா முருகலா ஊற்றி கார சட்னி வச்சு சாப்பிட்டால் அறுசுவை தான். காரச் சட்னி நாலே எல்லாருக்கும் நினைவுக்கு வருவது மிளகாய் வத்தல் வெங்காயம் வதக்கி அரைச்சு செய்றது தான். ஆனா இந்த பதிவுல நாம என்ன பாக்க போறோம் அப்படின்னா ஆந்ரா குண்டூர் கார சட்னி எப்படி வைக்குறதுனு பார்க்க போறோம். வாங்க சட்னி செய்றதுக்கு என்ன செயல்முறை என்னென்ன பொருள் வேணும் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

ஆந்ரா குண்டூர் கார சட்டினி | Andhra Guntur Kara Chutney

Print Recipe
வணக்கம் நண்பர்களே பெரும்பாலும் இட்லி தோசைக்கு சாம்பார் சட்னி வைத்து சாப்பிடுவோம். சட்னி னு எடுத்துக்கிட்டோம் அப்படின்னா அதுல பல வகை இருக்கு. தேங்காய் சட்னி தக்காளி சட்னி, மல்லி சட்னி புதினா சட்னி, கார சட்னி இப்படி வித விதமா சட்னி இருக்கு. பெரும்பாலும் எல்லாரும் விரும்புறது கார சட்னி அதுவும் தோசைய நல்லா முருகலா ஊற்றி
Advertisement
கார சட்னி வச்சு சாப்பிட்டால் அறுசுவை தான். காரச் சட்னி நாலே எல்லாருக்கும் நினைவுக்கு வருவது மிளகாய் வத்தல் வெங்காயம் வதக்கி அரைச்சு செய்றது தான். ஆனா இந்த பதிவுல நாம என்ன பாக்க போறோம் அப்படின்னா ஆந்ரா குண்டூர் கார சட்னி எப்படி வைக்குறதுனு பார்க்க போறோம். வாங்க சட்னி செய்றதுக்கு என்ன செயல்முறை என்னென்ன பொருள் வேணும் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Advertisement
Course Breakfast, dinner
Cuisine chutney, சட்னி
Keyword Kara chutney
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 4 People

Equipment

  • 1 வானொலி

Ingredients

  • 15 பூண்டு
  • 15 சின்ன வெங்காயம்
  • 10 வர மிளகாய்
  • புளி எலுமிச்சை அளவு
  • உப்பு தேவையான அளவு
  • தண்ணீர் தேவையான அளவு
  • 2 tsp நல்லெண்ணெய்
  • 1 tsp கடுகு
  • கருவேப்பிள்ளை தேவையான அளவு

Instructions

  • முதலில் எடுத்து வைத்துள்ள பூண்டை கல்லில் வைத்து தட்டி எடுத்துக் கொள்ளவும். பூண்டு இன்னும் அதிகமாக சேர்த்தால் சுவையும் அதிகமாக இருக்கும். அடுத்து சின்ன வெங்காயத்தை தட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • ஜாரில், ஊற வைத்த வரமிளகாயை சேர்த்து அதோடு எலுமிச்சை அளவு புலி, தேவையான அளவு உப்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு சேர்த்து பொரிய விடவும், அதோடு கருவேப்பிலை சேர்த்து பொரிய விடவும், இடிச்சு வைத்த பூண்டை சேர்த்து நன்கு வதங்கிய பிறகு, வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை நன்றாக வதக்கி எடுக்கவும்.
  • பூண்டும்,வெங்காயமும் நன்கு வதங்கிய பிறகு மிளகாய், புளி பேஸ்ட்டை சேர்த்துக் கொள்ளவும். கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு எடுத்தால் ஆந்திர குண்டூர் காரச் சட்னி தயார்.
Advertisement
Prem Kumar

Recent Posts

கோதுமை ரவை வெண்பொங்கல் ஒருமுறை இப்படி செய்து பாருங்க! காலை டிபனுக்கு பக்காவாக இருக்கும்!

தென்னிந்திய சமையலில் காலை உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இட்லி, தோசை, பூரி, கிச்சடி, பொங்கல், வடை, சாம்பார் போன்ற…

29 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 04 மே 2024!

மேஷம் இன்று அதிகம் சாப்பிடாதீர்கள். பொருளாதாரப் பக்கம் வலுப்பெற வாய்ப்புள்ளது. இன்று வீடு பராமரிப்பு அல்லது மாற்றம் தொடர்பான திட்டங்களை…

3 மணி நேரங்கள் ago

கிவி தர்பூசணி வாங்கி சூப்பரான கிவி தர்பூசணி மாக்டெயில் இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!

கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. ஆனால், நம்மில் பலர் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம்.…

13 மணி நேரங்கள் ago

குருபகவான் மற்றும் சூரிய பகவானின் சேர்க்கை நடைபெறும் மே மாதத்திற்கான ராசி பலன்கள்

மே மாதத்தில் குரு பெயர்ச்சி பலன்கள் ஏற்கனவே பல ராசிகளுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் மே மாதத்தில்…

15 மணி நேரங்கள் ago

ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இந்த சூப்பரான இட்லி மாவு போண்டா செஞ்சு சாப்பிடுங்க!

மாலை நேரத்தில் எப்பவுமே டீ காபியோட ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிட்டால் நல்லா இருக்கும் அப்படின்னு தோணும் ஆனா கடைகள்ல…

15 மணி நேரங்கள் ago

வெறும் 11 நாட்களில் நீங்கள் நினைத்த பணம் கிடைக்க இந்த 1 பொருளை இந்த இடத்தில் மட்டும் வையுங்கள்!

பணக்கஷ்டம் நீங்கி பணம் பலமடங்கு அதிகரிப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். கஷ்டப்பட்டு…

16 மணி நேரங்கள் ago