குரு உச்ச ஆட்டம், இனி இந்த ராசிகளுக்கு பொற்காலம் தான்!!
நவகிரகங்களிலேயே குரு பகவான் தான் மிகவும் மங்களகரமானவர். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும் பொழுது அனைத்து ராசிகளுக்கும் அதனுடைய தாக்கம் ஏற்படும். சில கிரகங்கள் தங்கள் ராசியை மிக விரைவாக மாற்றிக் கொள்ளும். சில ராசிகள் சில வருடங்கள் ஒரே ராசியில் இருக்கும். ஜோதி
நவகிரகங்களிலேயே குரு பகவான் தான் மிகவும் மங்களகரமானவர். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும் பொழுது அனைத்து ராசிகளுக்கும் அதனுடைய தாக்கம் ஏற்படும். சில கிரகங்கள் தங்கள் ராசியை மிக விரைவாக மாற்றிக் கொள்ளும். சில ராசிகள் சில வருடங்கள் ஒரே ராசியில் இருக்கும். ஜோதிடத்தில், குரு பகவான் என அழைக்கப்படும் வியாழன் ஒரு வருடத்திற்கு ஒரு முறை தனது ராசியை மாற்றிக் கொள்கிறார்.
ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறக்கூடிய குரு பகவானால் அந்த ராசிக்கு பலவிதமான நன்மைகள் நடக்கும். ஜோதிடத்தின் படி, ஒன்பது கிரகங்களிலும் குரு கிரகம் மிகவும் முக்கியம் வாய்ந்த கிரகமாகும். எனவே, இந்த கிரகத்தின் ராசி பெயர்ச்சி அல்லது நட்சத்திர பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் குரு மிருகசீரிட நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை அறிந்து கொள்வது அவசியம். ஆகஸ்ட் 20 ஆம் தேதி மாலை 5:22 மணிக்கு குரு மிருகசீரிட நட்சத்திரத்தில் நுழைவது அனைவரின் ஆசைகள் நிறைவேறும். இந்த மாற்றம் ஐந்து ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். குரு ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷம்
மிருகசிரா நட்சத்திரத்தில் குரு பகவான் பெயர்ச்சி அடைவதால் மேஷ ராசிக்காரர்கள் பெரிய அளவில் நன்மை அடைவீர்கள். ஏனெனில் இந்த பெயர்ச்சி மேஷ ராசியின் இரண்டாவது வீட்டில் நடக்கப் போகிறார், இதனால் நீங்கள் எடுக்கும் அனைத்தும் முயற்சிகளிலும் வெற்றியை பெறுவீர்கள். உங்களின் தன்னம்பிக்கை உயரும். வாழ்க்கையில் முன்னேற வேகம் காட்டுவது நல்லது. மனக்குழப்பம் நீங்கும். தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நன்மை தரும் லக்னத்தில் குரு பகவான் பெயர்ச்சி அடைகிறார். இது ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானத்தை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையை சந்தீப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது. உங்கள் புத்திக்கூர்மை உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி நல்ல பலன்களையும், பணப் பலன்களையும் தரும். இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் எதிர்பாராத திடீர் நிதி ஆதாயத்தையும், பதவி உயர்வையும் மற்றும் சம்பள உயரத்தையும் பெறுவீர்கள். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருக்கும்.
விருச்சிகம்
குரு நட்சத்திர பெயர்ச்சி விருச்சிக ராசியின் ஏழாவது வீட்டில் நடக்க உள்ளது. இதனால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதிய வழிகளில் இருந்து பண ஆதயத்தை தரும். சக ஊழியர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். வாழ்க்கையில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் உழைப்பது அவசியம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடக்கும். பிள்ளைகள் மகிழ்ச்சியடைய தேவையானவற்றை செய்வீர்கள்.
மகரம்
குரு நட்சத்திர பெயர்ச்சி மகர ராசியின் ஐந்தாம் வீட்டில் நடக்க உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், மகர ராசிக்காரர்கள் குருவின் முழுமையான ஆசீர்வாதத்தை பெறுவார்கள். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். பயணங்கள் செல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகும் சுக்கிரனால் இந்த ராசிக்காரர்களின் கனவு நிறைவேறும்!