2025ம் ஆண்டு நடக்கவிருக்கும் குரு பெயர்ச்சியால் தொழில் மற்றும் செல்வம் அதிகமாக பெற போகும் ராசிக்காரர்கள்!!

2024 ஆம் ஆண்டு முடியப் போகிறது. இன்னும் சில நாட்களில் புத்தாண்டு தொடங்கும். ஜோதிட சாஸ்திரப்படி, புத்தாண்டின் தொடக்கத்தில் இருக்கும் கிரகங்களின் நிலை 12 ராசிகளையும் பாதிக்கிறது. இந்த புத்தாண்டில் குரு பகவானும் முக்கிய ஜோதிட மாற்றங்களை அடையவுள்ளார். 2025 ஆம் ஆண்டில் புதன் பகவானை அத

By ·

2024 ஆம் ஆண்டு முடியப் போகிறது. இன்னும் சில நாட்களில் புத்தாண்டு தொடங்கும். ஜோதிட சாஸ்திரப்படி, புத்தாண்டின் தொடக்கத்தில் இருக்கும் கிரகங்களின் நிலை 12 ராசிகளையும் பாதிக்கிறது. இந்த புத்தாண்டில் குரு பகவானும் முக்கிய ஜோதிட மாற்றங்களை அடையவுள்ளார். 2025 ஆம் ஆண்டில் புதன் பகவானை அதிபதியாக கொண்ட மிதுன ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாக உள்ளார். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். இவர்களுக்கு ராஜயோகம் ஆரம்பமாகும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

ரிஷப ராசி

குருபகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதாவது ரிஷப ராசிக்கு இரண்டாம் இடமான தனஸ்தானத்தில், தன அதிபதியான குருவின் சஞ்சாரம் நடக்க உள்ளது. இதன் காரணமாக உங்கள் ராசிக்கு பல வகையில் சாதகமான பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கு மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். நிதி நிலை மேம்படும். தாம்பத்திய வாழ்க்கை நல்லபடியாக நடக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.

சிம்ம ராசி

2025 இல் நடக்கும் குரு பெயர்ச்சி காரணமாக சிம்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் குருவின் மாற்றம் நடக்கிறது. இதனால் நீங்கள் செய்யக்கூடிய வேலை, தொழில், வியாபாரத்தில் மிகச் சிறப்பான லாபத்தைப் பெறுவீர்கள். எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக கிடைக்கும். புதிய வேலைகளில் வெற்றி கிடைக்கும். முதலீட்டு வாய்ப்புகள் இருக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்க்கும். புதிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். திருமணமானவர்களின் உறவுகள் வலுவாக இருக்கும்.

துலாம் ராசி

குருவின் மிக சிறப்பான பார்வை பலன் தரக்கூடிய இடம் துலாம் ராசி. ராசிக்கு 9ஆம் இடத்தில் குருவின் சஞ்சாரம் நடப்பதால் பலவிதத்தில் நன்மை அடைவீர்கள். குருவின் தாக்கத்தால் உங்கள் வேலையில் சிறப்பான வெற்றியும், திட்டங்கள் சரியாக செயல்படுத்தவும் முடியும். உங்களது தன்னம்பிக்கை அதிகமாகும். உத்தியோகத்தில் உங்களின் செயல்பாடுகளால் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். உங்கள் கடின உழைப்புக்கு வெகுமதி கிடைக்கும். குடும்பத்திலும் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.

தனுசு ராசி

குருபகவானின் மற்றொரு சிறப்பான பார்வை தரக்கூடிய இடம் ஏழாம் வீடான தனுசு ராசி. உங்கள் ராசி அதிபதியான குரு பகவான் ஏழாம் இடத்தில் சஞ்சரிப்பதால் இதற்கு நன்மை அடைவீர்கள். ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான பொழுதை செலவிடுவீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த பெயர்ச்சி மாணவர்களுக்கு நன்றாக இருக்கும். வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண வாழ்க்கை நன்றாக நடக்கும்.

கும்ப ராசி

கும்ப ராசி சேர்ந்தவர்களுக்கு ஏழரை சனியின் கடைசி பகுதி நடக்க உள்ள 2025ம் ஆண்டில், குரு பகவான் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதன் காரணமாக புதுமண தம்பதிகளுக்கு குழந்தைப்பேறு பாக்கியம் உண்டாகும். எந்த ஒரு வேலையைச் செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவது பற்றி யோசிக்கலாம். நிதி நெருக்கடியில் உள்ளவர்களுக்கு இப்போது நிவாரணம் கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.

இதனையும் படியுங்கள் : 2025 சனிப்பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் சில ராசிகள்!

Recipes AMP · Quick view
View full