Advertisement
ஆன்மிகம்

சந்திரன், குரு சேர்க்கையால் இனி வரும் காலங்களில் ராஜ வாழ்க்கை வாழ போகும் ராசிக்காரர்கள் யார் யார் ?

Advertisement

சந்திரனும் குருவும் சேர்ந்து இருந்தாலோ அல்லது சந்திரனுக்கு குரு 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானங்களில் இருந்தாலும் இது கஜகேசரி யோகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த உச்சபட்ச யோகமானது அந்த ராசிக்காரர்களுக்கு ராஜபோக வாழ்க்கையை கொடுக்கும். கஜகேசரி யோகம் என்பது என்றால் என்ன ? கஜம் என்றால் யானை கேசரி என்றால் சிங்கம் 1000 யானைகள் வந்து ஒரு சிங்கத்திடம் போர் புரிந்தாலும் சிங்கம் வெற்றி பெறும். அதே போல் எந்த பக்கத்தில் இருந்து பிரச்சனை வந்தாலும் அத்தனை பிரச்சனைகளையும் சிங்கம் போல் நின்று எதிர்த்து வெற்றி பெறுவீர்கள் என்பது அர்த்தம். ஒருவரது ஜாதகத்தில் தசா புத்திகள் எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் ஏழரை சனி , அஷ்டமர்த்த சனி, கண்டக சனி, பாதகாதிபதி தசாபுத்திகள் நடந்தாலும் இந்த கஜகேசரி யோகம் இருந்தால் அனைத்தையும் தாண்டி பல வெற்றிகளை பெறலாம்.

கஜகேசரி யோகம் பலம் வாய்ந்ததாக இருக்க பெறுவதற்கு சந்திரன் மற்றும் குருவின் ஆதிக்கம் உச்சமும் அல்லது நீச்சமோ பெற்றிருக்கக் கூடாது. கஜகேசரி யோகம் ஒருவது ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால் அவர்கள் பெயர், புகழ், ஆதிக்கம், நன்மதிப்பு, நுண்ணறிவு, இறந்த பிறகும் அழியா புகழ் , நன்மக்கள் பெரும் செல்வம், தலைமை தாங்கும் ஆற்றல், ஏழு தலைமுறைக்கான செல்வம் அனைத்தையும் பெற்றிருப்பார்கள். கஜகேசரி யோகம் பெற்றவன் பல கோடி மக்களை ஆட்சி செய்யும் மன்னனாகவும், மக்களை வசீகரம் செய்யும் ராஜ வசியம் பெற்றவனாகவும் இருப்பான். இப்படிப்பட்ட கஜகேசரி யோகம் எந்த ராசிகளுக்கு நல்ல பலன்களை கொடுக்க இருக்கிறது என்பதை பார்க்கலாம். வியாழன் தற்போது மேஷ ராசியை கடக்கிறது. அக்டோபர் 28ஆம் தேதி சந்திரன் மேஷ ராசியில் நுழைய இருக்கிறது . ஆகையால் இந்த இரண்டு கோள்களின் சேர்க்கை கஜகேசரி யோகத்தை கொடுக்க இருக்கிறது . அப்படி இந்த கஜகேசரி யோகத்தை பயன்பெறப்போகும் அந்த மூன்று ராசிகள் எவை என்று பார்க்கலாம்.

Advertisement

மேஷம்

இந்த குரு சந்திரன்

Advertisement
சேர்க்கையால் ஏறப்போகும் உங்களுக்கு பல சாதகமான பலன்களை கொடுக்க இருக்கிறது. வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். புதிய வேலைக்கான வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தொழிலில் நல்ல லாபம் முன்னேற்றம் கிடைக்கும். பிள்ளைகளால் நல்ல செய்திகள் வந்து சேரும். தங்களில் புதிய திட்டங்களுக்கு வெற்றி உண்டு. கூட்டு முயற்சியில் லாபம் கிடைக்கும். உங்களது நம்பிக்கை பெருகும். புதிய
Advertisement
முதலீடுகளில் லாபம் பெருகும். வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் பிரகாசமாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு கஜகேச யோகம் வருமானத்தையும் லாபத்தையும் அதிகரிக்க இருக்கிறது. காரணம் இந்த யோகம் ராசியில் இருந்து வருமானம் மற்றும் லாபத்தை அதிகரிக்கும் ஸ்தானத்தை உருவாக்க போகிறது. இந்த நேரத்தில் உங்கள் வருமானத்தில் புதிய மாற்றம் உண்டாகும். புதிய வருமானங்கள் வருவதற்கான ஆதாயம் உண்டு. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் . உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி ஆதாயம் உண்டு. ஏற்றுமதி இறக்குமதி வேலையில் நல்ல லாபங்கள் கிடைக்கும். புதிய வேலைகள் கிடைக்கும். பழைய முதலீடுகளிலும் நல்ல லாபங்கள் கிடைக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த கஜகேசரி யோகம் சாதகமான பலன்களை கொடுக்க இருக்கிறது. ஏனெனில் இந்த கஜகேசரி யோகம் உங்களது ராசியிலிருந்து பத்தாவது வீட்டில் அமைய இருக்கிறது. அதிர்ஷ்டம் அதிகரிக்க போகிறது. உங்களுக்கு ஒருபோதும் செல்வங்கள் குறையாது. புதிய வேலைக்கான திட்டங்களை தொடங்க ஆரம்பிப்பீர்கள். இந்த நேரத்தில் புதிய வேலைகளில் நல்ல முன்னேற்றங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய முன்னேற்றங்கள் கிடைக்கும். பதவி உயர்வுகள் கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கும். வெளியிடத்தில் மரியாதை கூடும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் அல்லது சமய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

10 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

20 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

1 நாள் ago