குக் வித் கோமாளியில் ரோசினி செய்த ஹரியாலி சிக்கன் ரெசிபி இது தான் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!
சிக்கன் கிரேவி இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. இவை அசைவ பிரியர்கள் மட்டுமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவாக இருக்கிறது என்றால் அது மிகை அல்ல. சிக்கன் கிரேவியை இந்தியாவிலேயே வெவ்வேறு இடங்களில் அங்கங
சிக்கன் கிரேவி இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. இவை அசைவ பிரியர்கள் மட்டுமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவாக இருக்கிறது என்றால் அது மிகை அல்ல. சிக்கன் கிரேவியை இந்தியாவிலேயே வெவ்வேறு இடங்களில் அங்கங்கு இருக்கும் சமையல் முறைக்கு ஏற்ப சிறு சிறு மாற்றங்களோடு மக்கள் செய்து சுவைக்கிறார்கள்.
அந்த வகையில் பஞ்சாபி உணவுகளின் சுவை சைவ பிரியர்களுக்கும் சரி, அசைவ பிரியர்களுக்கும் சரி மிகவும் பிடித்தமான ஒன்று. அதனாலேயே பெரும்பாலுமான உணவு பிரியர்களின் பிடித்தமான உணவுகளில் இந்த காம்பினேஷன் கட்டாயம் இடம் பிடித்திருக்கும். பஞ்சாபி உணவின் மசாலா நாவை சுண்டி இழுக்கும். தூக்கலான மசாலா சேர்த்த நாட்டுக்கோழி குழம்பு, ஆட்டுக்கறிக் குழம்பு, இறால் என அசைவத்தில் மெனு வரிசைக்கட்டி நிற்கும்.
ஹரியாலி சிக்கன் என்பது கொத்தமல்லி இலைகள், புதினா இலைகள் மற்றும் பச்சை மிளகாய் போன்ற புளிப்பும் காரமுமான பொருட்களின் கலவையில் ஹரியாலி சிக்கன் மாரினேட் செய்து தயாரிப்பது. இந்த சிக்கன் கிரேவி சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். இந்த சிக்கன் கிரேவியின் ஸ்பெஷல் என்னவென்றால் பெயரை கேட்டதும் பலரது நாவில் எச்சில் ஊற வைக்கும் சுவை கொண்ட இவை உடம்புக்கு மிகவும் நல்லது. குறிப்பாக இது பேச்சுலர்கள் செய்யும் வகையில் சுலபமான செய்முறையைக் கொண்டது.