மழை காலத்தில் சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட மூலிகை ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சலி, காய்ச்சல் அனைத்தும் பரந்தே விடும்!!

சமையல் என்பது ஒரு பெரிய கலை, எல்லோருக்கும் குழம்பு வைப்பதற்கு அவ்வளவு எளிதில் வந்துவிடாது. புதிதாக சமையல் செய்பவர்கள் கற்று கொள்ளும் முதல் குழம்பு ரசம் தான். ரசம் என்பது தென்னிந்திய மக்களின் உணவு வகைகளில் மிகவும் முக்கியமான ரெசிபி ஆகும். இதை எல்லா தருணங்களிலும் பொதுவாக எல்லா வீடு

By Prem Kumar · 28/9/2025

சமையல் என்பது ஒரு பெரிய கலை, எல்லோருக்கும் குழம்பு வைப்பதற்கு அவ்வளவு எளிதில் வந்துவிடாது. புதிதாக சமையல் செய்பவர்கள் கற்று கொள்ளும் முதல் குழம்பு ரசம் தான். ரசம் என்பது தென்னிந்திய மக்களின் உணவு வகைகளில் மிகவும் முக்கியமான ரெசிபி ஆகும். இதை எல்லா தருணங்களிலும் பொதுவாக எல்லா வீடுகளிலும் இதைச் செய்து மகிழ்வர். ரசம் என்பது காரமான சுவையுடன் நாக்கை சொட்டை போடச் செய்யும் புளிப்பு சுவையுடன் இருக்கும். இதை அப்படியே சுடச்சுட உள்ள சாதத்தில் ஊற்றி சாப்பிடும் போது இதன் சுவையே தனி தான். ஒரு சிலர் எல்லா குழம்பையும் நன்றாக வைப்பார்கள், ரசம் வைப்பதில் மட்டும் சொதப்பி விடுவார்கள்.

ரசம் பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும் அதை சுவையாக வைப்பது மிகவும் கடினம். ரசத்தை பக்குவமாக வைத்து இறக்கினால் தான் சுவையாக இருக்கும். அந்த வகையில் இந்த பதிவில் எப்படி பக்குவமாக, ருசியாக மற்றும் ஆரோக்கியமான முறையில் மூலிகை ரசம் வைக்கலாம் என்று தெரிந்து கொள்ளலாம். இந்த ரசம் வைப்பது மிகவும் எளிதானது மற்றும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது துவரம் பருப்பு மற்றும் ரசம் பொடியைப் இந்த சூடான மற்றும் சுவையான ரசம் குளிர்ச்சியான குளிர்காலம் மற்றும் மழை நாட்களுக்கு சரியான தேர்வாகும். பொதுவாகவே சளி மற்றும் இருமல் பிரச்சினை சிறியர்கள் முதல் பொரியவர்கள் வரையில் அனைவரும் எதிர்கொள்ளும் முக்கிய உடல் உபாதைகளுள் ஒன்றாகும்.

மழைகாலம் தொடங்கி விட்டாலே எங்கு பார்த்தாலும் குழந்தைகளுக்கு சளி, இருமல், தொண்டை வலி, தலை பாரம் என தொடர்ந்து வந்துக் கொண்டே இருக்கும். அவற்றில் இருந்து விடுபடவும், அவை வராமல் தடுக்கவும் இந்த மூலிகை ரசத்தை வாரம் ஒருமுறையாவது உங்கள் வீட்டில் வைத்து கொடுங்கள். முக்கியமாக இந்த மூலிகை ரசம் குழந்தைகளுக்கு ஏற்றது. காரணம் இந்த ரசத்தில் மருத்துவ குணங்கள் பல நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன, அவை சளி, காய்ச்சல், ஆஸ்துமா போன்ற பொதுவான நோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. சரி வாங்க இந்த மூலிகை ரசத்தை எப்படி வைப்பது என தெரிந்துக் கொள்ளலாம்.

இதனையும் படியுங்கள் : குக் வித் கோமாளி தர்பூசணி துளசி ரசம் இப்படி செய்து பாருங்க! புது விதமான சுவையில்!

Recipes AMP · Quick view
View full