Advertisement
உடல்நலம்

சில நோய்களுக்கு வீட்டு மருத்துவம்….

Advertisement

சிறு சிறு உடல் உபாதைகளுக்கு மருத்துவரை அணுகுவது அவசியம் ஆகாது.உணவே மருந்து என்பர் .அவ்வகையில் நம் வீட்டில் உள்ள பொருட்களே மருத்துவ குணம் நிறைத்தது. வீட்டில் உள்ள பொருள் கொண்டு மருத்துவம் செய்வது பாரம்பரியமாக செய்து வருவதால், இந்த மருத்துவம் பாட்டி வைத்தியம் என்றும் கூறப்படுகிறது.

வயிற்றுக்கடுப்பு

Advertisement

மாமரத்தின் வேர்ப்பட்டயை 50 கிராம் எடுத்து, இடித்து, ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் நீ விட்டு 200 மில்லியாக சுண்டக்காய்ச்சி வடி கட்டி வேளைக்கு ஒன்று அல்லது ஒன்றரை அவுன்ஸ் வீதம் பருக வேண்டும், இதனால் வயிற்றுக்கடுப்பு விலகும்.மற்றும் ரத்த பேதி, பித்த வாந்தி, பெரும்பாடு ஆகியவை குணமாகும்.

ஒழுகும் ரணங்கள்

ஊமத்தன் இலைச்சாறு 500கிராம், தேங்கய் எண்ணெய் 200கிராம், மயில் துத்தம் 20 கிராம் எடுத்துக் கொள்ளவேண்டும். ஊமத்தன் இலைச் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி, ஓரளவு சாறு சுண்டியவுடன் துத்தத்தை பொடித்துச் சேர்த்து தைலத்தை பக்குவமாக வடித்துக் கொள்ளவும். இதை வெளிப்பூச்சாக மட்டும் உபயோகிக்கலாம், காது நோய்க்கு காதில் சில துளிகள் விடலாம்.

குழந்தைகளின் கபம், மாந்தம்

ஆமணக்கு எண்ணெய் அரை லிட்டர், இளங்கொழுந்து சாறு 1 லிட்டர், கருஞ்சீரகத்தூள் 15 கிராம், கோரோசனை ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவேண்டும். இதில் கோரோசனை

Advertisement
நீங்கலாக மற்றவற்றை ஒன்று சேர்த்து காய்ச்சி தைலப்பக்குவத்தில் வடித்துக் கொண்டு கடைசியாக கோரோசனத்தை பொடித்துப் போட்டு நன்றாக கலக்கிக்கொள்ளவும், தாய்ப்பாலுடன் 8 மிலி தைலைம் சேர்த்து ஒரு வேளை கொடுக்கவும்.

மண்டைக்குத்தல் உடல் வலி:

மிளகாய் 750கிராம், தண்ணீர்

Advertisement
12 லிட்டர், மிளகு 8 கிராம், நல்லெண்ணெய் 175 கிராம், ஆகியவற்றில் மிளகாயைத் தண்ணீரில் சேர்த்து, அடுப்பிலேற்றி ஒன்றரை லிட்டராக சுண்டக்காய்ச்சிக் கொள்ளவேண்டும். தூள் செய்த மிளகுடன் நல்லெண்ணெயைக் கலந்து தைலம் போன்று வடித்து வெளி உபயோகத்திற்கு மட்டும் பயன்படுத்தவும்.

குடல் கிருமிகள்

குப்பை மேனி இலை 100 கிராம், ஆமணக்கு எண்ணெய் 400 கிராம் எடுத்துக் கொண்டு எண்ணெயில் இலையைச் சேர்த்துக் காய்ச்ச வேண்டும். எண்ணெய் மிதக்கும் போது இறக்கி, இலைகளை அரைத்து எண்ணெயில் கலந்து கொள்ளவேண்டும், வேளைக்கு ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி வீதம் இரண்டு வேளைகள் சாப்பிட குணமாகும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான முட்டை கோலா உருண்டை ஒரு தடவை இப்படி செய்து பாருங்க!

பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது…

2 மணி நேரங்கள் ago

ஆட்டி படைக்கும் அக்னி நட்சத்திரம் இன்னும் 2 வாரம் ரொம்ப ஜாக்கிரதையாக இருங்கள்

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

2 மணி நேரங்கள் ago

மாம்பழ மாதுளை மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக,மாதுளை சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

2 மணி நேரங்கள் ago

டிபன் பாக்ஸில் வைத்து கொடுத்து விட ஒரு குடைமிளகாய் சாதம் செய்து கொடுத்தால், அனைத்தும் காலியாகி விடும்!!!

பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் குழந்தை மற்றும் பெரியவர்களுக்கு தினமும் சாம்பார் சாதம் ,லெமன் சாதம்,தயிர் சாதம் , புளியோதரை…

4 மணி நேரங்கள் ago

நெத்திலி மீன் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

மீன் குழம்பு வீட்டில் வச்சாலே பல வீட்டுக்கு அந்த வாசனை போகும். ஒரு சூப்பரான மீன் குழம்போட வாசனை பக்கத்தில்…

5 மணி நேரங்கள் ago

சனி பெயர்ச்சியால் உருவான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை, மகிழ்ச்சி பொங்கும்!!

ஜோதிடத்தின் படி சனி பகவான் 2023 ஆம் ஆண்டு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பெயர்ச்சி ஆனார். அவர்…

5 மணி நேரங்கள் ago