இந்த ராசிகாரர்கள் எல்லாம் அடுத்தவர்களிடம எளிதில் ஏமாற்று போவார்களாம்!

ஒருவரின் ஜாதகம் பைத்து அவர் எப்பேர்பட்ட குணமுடையவர் அவர் வாழ்க்கையை எப்படி வாழ போகிறாய்? அவருடைய வாழ்க்கையில் எப்போது எந்தெந்த துன்பங்கள் வரும் என்பதை நாம் ஜோதிடர்கள் எளிதில் சொல்லிவிடுவார்கள் அதை போன்று ஒருவரின் ராசியை வைத்தே அவர் என்ன குணம் உடையவர் அவர்களுக்கு பிடித்தது என்ன பி

By ·

ஒருவரின் ஜாதகம் பைத்து அவர் எப்பேர்பட்ட குணமுடையவர் அவர் வாழ்க்கையை எப்படி வாழ போகிறாய்? அவருடைய வாழ்க்கையில் எப்போது எந்தெந்த துன்பங்கள் வரும் என்பதை நாம் ஜோதிடர்கள் எளிதில் சொல்லிவிடுவார்கள் அதை போன்று ஒருவரின் ராசியை வைத்தே அவர் என்ன குணம் உடையவர் அவர்களுக்கு பிடித்தது என்ன பிடிக்காதது எனவும் கூறிவிடலாம், அந்த வகையில் மிக எளிதில் ஏமாந்து போகக்கூடிய ராசிக்காரர்கள் யார் ? யார் ?என்று இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

கடக ராசி

கடக ராசிக்காரர்கள் அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்களால் இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களிடம் நாசுக்காகவே நடந்து கொள்வார்கள். மற்றவர்களாலும் ஆளப்படுவார்கள். ஆனால் இவர்கள் மோசமான காதல் முறிவை தாங்கிக் கொள்ள மாட்டார்கள். இவர்கள் மற்றவர்களிடம் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிரியும் போது தான் இத்தனை நாட்கள் நாம் அளவுக்கு அதிகமாக நம்பிக்கை வைத்து ஏமாற்றப்பட்டோம் என்பதையே உணர்வார்கள்.

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்கள் காதலித்து ஏமாற்றம் அடைவார்களாம். இவர்களை சுற்றி இருக்கும் நண்பர்கள் உறவினர்கள் எவ்வளவு எச்சரித்தாலும் இவர்கள் அந்த காதலின் மீது நம்பிக்கை கொண்டுள்ளவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள் ஒருவரை காதலிக்கும் போது காதலிப்பவரை கண்மூடித்தனமாக நம்பியே ஏமாற்றமடைந்து நாளடைவில் காதல் தோல்வியை சந்திப்பார்கள்.

மீனம் ராசிக்காரர்கள்

இந்த மீன ராசிக்காரர்கள் மற்றவர்களால் அதிகம் புண்படுத்தப்படுவது மட்டுமில்லாமல் தன்னை புண்படுத்தியவர்களுடன் இனி மேல் பழக்க வழக்கம் வைக்க கூடாது பழகக் கூடாது என உறுதி மொழி எடுத்துக் கொண்டாலும். இவையெல்லாம் இறுதியில் மறந்து விட்டு அவர்களை மன்னித்து அவர்களது நல்ல குணத்தை மட்டுமே நம்பி மீண்டும் மீண்டும் ஏமாந்து போவதில் வல்லுநர்கள்.

துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்கள் மிகவும் கருணை உள்ளம் கொண்டவர்களாக மற்றும் நம்பகத்தன்மை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். இந்த துலாம் ராசிக்காரர்கள் தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் குழம்பிய மனதுடேனே இருப்பவர்கள். அதனால் மற்றவர்கள் எப்போதும் இவர்களை எளிதிலன ஏமாற்றி விடுவார்கள். இவர்கள் ஏமாற்றப்படுவது போன்று தோன்றினால் அதற்கான காரணம் குறித்து அலசி ஆராய்வார்கள்.

தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலித்தனம் இருந்தவர்களாக இருந்தாலும் அப்பாவியாக காட்சியளிப்பவராக இருப்பார்கள். தனுசு ராசிக்காரர்கள் தன்னை சுற்றி இருப்பவர்கள் எப்போதும் நட்புடன் பழக வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால் எப்படி எதிர்பார்ப்பது இந்த ராசிக்காரர்களுக்கு சரியாக இருக்காது. மேலும் பயணம் மேற்கொள்ளும் போது தன்னை சுற்றி இருப்பார்களுடன் பழகும் போது சற்று எச்சரிக்கையாக பழகுவது மிகவும் நல்லது.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை