கடன் தீர்க்கக்கூடிய கொள்ளு பருப்பு!!

வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்தாலும் கடன் பிரச்சனையை சமாளிக்க முடியாமல் பலரும் திணறுவார்கள். கடன் பிரச்சினையை நமக்கு கொடுக்கக் கூடியவர் நவகிரகங்களில் ஒருவரான கேது பகவான். கேது பகவானை சாந்தப்படுத்தி கடன் பிரச்சினைகளிலிருந்து மீள்வதற்கு என்னென்ன செய்ய வேண்டும் எ

By Prem Kumar · 11/4/2025

வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்தாலும் கடன் பிரச்சனையை சமாளிக்க முடியாமல் பலரும் திணறுவார்கள். கடன் பிரச்சினையை நமக்கு கொடுக்கக் கூடியவர் நவகிரகங்களில் ஒருவரான கேது பகவான். கேது பகவானை சாந்தப்படுத்தி கடன் பிரச்சினைகளிலிருந்து மீள்வதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

கேது பகவான்

கடன் பிரச்சினையை உண்டாக்கக்கூடிய கேது பகவான் நம் ஜாதகத்தில் அமர்ந்து நம்மை ஆட்டிப் படைத்து கொண்டிருப்பார். வேண்டாம் என்று சொன்னாலும் கூட நம்மை கடன் வாங்க வைத்து ரசிப்பார் இவரை சரிகட்டி விட்டால் கடன் பிரச்சனையில் இருந்து மீண்டு விடலாம். எதிர்பாராத நேரத்தில் சிக்கலில் மாட்டிவிட்டு கடன் என்னும் அஸ்திரத்தை நம் மீது எரியக்கூடிய கேது பகவானுக்கு உரியதானியம் கொள்ளு பருப்பு. நவதானியங்களில் ஒன்றான கொள்ளு பருப்பு ஏராளமான சத்துக்கள் நிறைந்தது தீராத கடன்கள் தீருவதற்கு கொள்ளு பருப்பை தானம் செய்யலாம்.

கொள்ளு பருப்பு தானம்

பதினாறு நாட்கள் அதிகாலையில் எழுந்து சூரிய பகவான் உதிக்கும் நேரத்திற்குள் குளித்து முடித்துவிட்டு கையில் கொஞ்சமாக கொள்ளு பருப்பை வைத்து சூரியனைப் பார்த்து நமஸ்காரம் செய்துவிட்டு 27 முறையை நம் தலையை சுற்ற வேண்டும். இது நம்முடைய கிரக தோஷங்களை நீக்கக்கூடிய எளிய பரிகாரம். கேது பகவானால் வரக்கூடிய துன்பங்கள் நீங்கி கேதுவின் அருள் கிடைக்கும் அற்புத பரிகாரம். கொள்ளு தானியங்களை பறவைகளுக்கு தானம் செய்ய வேண்டும். சூரிய பகவானுடைய வாகனமான குதிரைகளுக்கும் கொள்ளு பருப்பை தானம் செய்யலாம் அருகில் குதிரை இருந்தால் கொள்ளு தானம் செய்துவர கடன் தொல்லை நீங்கும். அருகில் குதிரைகள் இல்லை என்றால் பறவைகளுக்கு தானம் செய்யலாம்.

கேது பகவானுக்கு விளக்கு

சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த தானியமான கொள்ளு பரப்பை ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்வதன் மூலம் கேது பகவானுடைய அருள் கிடைக்கும். கேது பகவானுடைய அருள் மேலும் கிடைப்பதற்கு நவகிரக கோவிலுக்கு சென்று கேது பகவானுக்கு விளக்கு ஏற்று வைத்து மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். கொள்ளு தானத்தை ஏழை எளியவர்களுக்கு மாதம் ஒரு முறையாவது செய்து வர கேது வாயில் ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சனைகளும் இருந்து போகும். நவகிரக கோவிலுக்கு செல்லும்போது கொள்ளு பருப்பை வாங்கி வேக வைத்து அதில் சுண்டல் செய்து அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுத்து வரலாம். இதையெல்லாம் செய்தால் நிச்சயமாக உங்களுடைய கடன் சீக்கிரமே அடைந்து விடும்.

இதனையும் படியுங்கள் : கடன் தீர்க்கும் தோரண கணபதி வழிபாடு!!

Recipes AMP · Quick view
View full