வீட்டில் பண மழையாக பொழிய பணம் வைக்கும் பீரோ இப்படி தான் இருக்க வேண்டும்!
நம் அணைவரும் சம்பளம் வாங்கியவுடன் பணம் எந்த பக்கம் போகிறது என்று தெரியாமல் வருடம் முழுவதும் உழைத்து கொண்டே இருக்கின்றனர். பணம் சம்பாதிப்பதற்காக கஷ்டப்பட்டு உழைத்தாலும், மாத கடைசியில் பற்றாக்குறை என்ற நிலையிலேயே பெரும்பாலானவர்களின் வாழ்க்கை போய் கொண்டிருக்கிறது. அனைவரும் பணம் சம
நம் அணைவரும் சம்பளம் வாங்கியவுடன் பணம் எந்த பக்கம் போகிறது என்று தெரியாமல் வருடம் முழுவதும் உழைத்து கொண்டே இருக்கின்றனர். பணம் சம்பாதிப்பதற்காக கஷ்டப்பட்டு உழைத்தாலும், மாத கடைசியில் பற்றாக்குறை என்ற நிலையிலேயே பெரும்பாலானவர்களின் வாழ்க்கை போய் கொண்டிருக்கிறது. அனைவரும் பணம் சம்பாதித்தாலும், அந்த பணத்தை சேமித்து வைத்து, பெருக வைக்கும் சூட்சமம் ஒரு சிலருக்கு மட்டுமே கை வந்த கலையாக இருக்கும்.
வருமானத்தை பெருக்குவதற்கான வழிகள் தெரிந்தாலும் தெய்வீக அருள், நம்மை சுற்றி நேர்மறை ஆற்றல்கள் இருந்தால் மட்டுமே பணத்தை சேமிக்கவும், பெருக்கவும் முடியும். அந்த நேர்மறை ஆற்றல்களை நம்மை சுற்றி அதிகரிக்க செய்து, வரும் வருமானத்தை பெருக செய்வதற்கு சில எளிய மாற்றங்களை வீட்டில் செய்தாலே போதும்.
பணம் வைக்கும் பீரோ
நம்முடைய வீட்டில் பணம் பெருக்குவதற்கு நம் வீட்டில் வைத்திருக்கக்கூடிய பீரோ சரியான திசையில் அமைய வேண்டும். பொதுவாக ஒருவருடைய வீட்டில் செல்வம் அதிகம் நிலைக்காமல் இருந்தால் அவருடைய வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்கக்கூடிய ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என அர்த்தம். இப்படி நம்முடைய வீடுகளில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலை உண்டாக்கக்கூடிய விஷயங்களை சிறுதளவு மாற்றி அமைத்தாலே நம்முடைய வீட்டில் செல்வம் பெருக தொடங்கும்.
நம்மில் பலரும் நம்முடைய வீட்டில் வைத்திருக்கக்கூடிய பீரோவின் மேற்பகுதியில் தேவையில்லாத பொருட்களை வைத்திருப்போம். அதுமட்டுமல்லாமல் பீரோவை நல்ல அழகாக சுத்தமாக வைக்காமல் இருப்போம். இப்படி இருப்பது எதிர்மறை ஆற்றல்களை உண்டாக்கும் என்று சொல்கிறார்கள். இந்த செல்வம் இருக்கக்கூடிய இடம் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். உங்களுடைய பீரோவின் மேல் தேவையில்லாத ஏதாவது பொருட்களை நீங்கள் வைத்திருந்தால் அதை உடனடியாக அகற்றி அந்த இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
போட்டா ஆல்பம்
அதுபோல பீரோவின் உள்ளே தேவையில்லாமல் இருக்கக்கூடிய பொருள்களை எல்லாம் வைத்திருக்கக்கூடாது. பீரோவின் உள்ளே உள்ள பகுதிகளையும் மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஒரு சிலர் வீட்டில் உள்ள பீரோவில் போட்டோ ஆல்பத்தை வைத்திருப்பார்கள். இந்த போட்டோ ஆல்பத்தில் இறந்த உங்களுடைய முன்னோர்களின் படங்கள் இருந்தால் அதை அகற்றுவது நல்லது.
மரபெட்டி
நீங்கள் உங்களுடைய பீரோவில் பணம் மற்றும் நகைகளை வைக்கும்பொழுது மரத்தாலான பெட்டகத்தில் வைப்பது சிறந்தது. அதை தவிர்த்து துணியில் நீங்கள் பொதிந்து வைக்கலாம். பிளாஸ்டிக்கில் பணம் மற்றும் நகைகளை வைப்பது நல்லதல்ல. இது உங்களுக்கு செல்வம் அதிகம் வருவதை குறைக்க தொடங்கும் என சொல்லப்படுகிறது.
அது போல வெள்ளியிலான பொருட்களை வைக்கும் பொழுதும் தங்கத்திலான பொருளை தனியாகவும், பணத்தை தனியாகவும், வெள்ளியில் செய்த பொருட்களை தனியாகவும் வைப்பது சிறந்தது. பணம் மற்றும் தங்க நகைகளை வைக்கக்கூடிய பீரோ உங்களுடைய வீட்டில் சரியான திசையில் இருக்க வேண்டும். அப்போது தான் செல்வம் அதிகம் வந்து சேரும்.
பீரோ வைக்கும் திசை
உங்களுடைய பீரோவை நீங்கள் வீட்டில் தென்மேற்கு திசையில் வைக்க வேண்டும். இதுவே சிறந்தது. இந்த இடத்தில் வைக்கும் பொழுது இது அதிக நேர்மறை ஆற்றல்களை ஈர்த்து உங்களுடைய பணம், செல்வத்தை அதிக அளவு உங்களுக்கு கொண்டு வந்து கொடுக்கும். இந்த திசையில் வைக்க இயலாதவர்கள் வடமேற்கு திசையில் வைக்கலாம். அதுபோல வீட்டில் பீரோவை வைக்கும்போது சுவரோடு சேர்த்து வைக்கக் கூடாது.