இந்த கோடை வெயிலுக்கு சற்று இதமாக நுங்கு மாம்பழ மில்க் ஷேக் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
காலநிலைக்கேற்ப இயற்கையாக கிடைக்கும் காய், கனிகளை உண்டு வந்தால் நம் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். கோடைகாலத்தில் வெப்பத்தை தணிக்க நமக்கு பல்வகையான பழங்களும், காய்களும் கிடைக்கின்றன. வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்னி பழம், நுங்கு மற்றும் இளநீர் ஆகியவற்றை கோடையில் பருகினால் உடல்
காலநிலைக்கேற்ப இயற்கையாக கிடைக்கும் காய், கனிகளை உண்டு வந்தால் நம் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். கோடைகாலத்தில் வெப்பத்தை தணிக்க நமக்கு பல்வகையான பழங்களும், காய்களும் கிடைக்கின்றன. வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்னி பழம், நுங்கு மற்றும் இளநீர் ஆகியவற்றை கோடையில் பருகினால் உடல் சூட்டைக் குறைக்க முடியும். இவை அனைத்துமே மிக எளிதில் எல்லோருக்கும் கிடைக்கும். அதிலும் நுங்கு கோடையில் குளிர்ச்சியைத் தரும் மிகச் சிறந்த பானம்.
பனைமரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கானது நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் இது அம்மை போன்ற நோய் ஏற்படமால் தடுக்கும் தன்மை கொண்டது. அதோடு அல்லாமல் நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. மேலும் இது நீர் வகையை சேர்ந்த உணவு என்பதால் இது உடலில் இருக்கும் கொழுப்பினை அகற்றி உடல் எடையை குறைக்க வழி வகுக்கிறது. நுங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.
ஆனாலும் குழந்தைகளை சாப்பிட வைக்க சவாலாக இருக்கும் அம்மாக்கள் நுங்கை மில்க் ஷேக்கை செய்து கொடுக்கலாம். இதன் மூலம் குழந்தைகளுக்கு வேண்டிய ஆரோக்கியம் தடையில்லாமல் கிடைக்கும். மில்க் ஷேக் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு பானம். பால் விரும்பி குடிக்காத குழந்தைகள் கூட அந்த பாலினை மில்க் ஷேக் ஆக செய்து கொடுக்கும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவர். பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது.
உடல் சூட்டை தணிக்க நமக்கு கம்பங்கூழும், கேப்பைக்கூழும், பழைய சோறும் என்பது போன்று குழந்தைக்கு குளிர்ச்சியளிக்க கேழ்வரகு மில்க் ஷேக் போதும். அதனால் நுங்கு மற்றும் மாம்பழம் கொண்டு மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு மில்க் ஷேக் செய்து கொடுங்கள். இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். கடைகளில் வாங்குவதை காட்டிலும் சுவையாகவும் அதே சமயத்தில் ஆரோக்கியமாகவும் இருக்கும். சுவையான இந்த நுங்கு மாம்பழ மில்க் ஷேக் நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.
இதனையும் படியுங்கள் : கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக்