12 ராசிகளுக்குமான சூரிய பெயர்ச்சி பலன்கள்!!

ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. அந்த வரிசையில் ஜோதிடத்தில், சூரியன் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறார். இவர் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு

By ·

ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. அந்த வரிசையில் ஜோதிடத்தில், சூரியன் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறார். இவர் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பிரவேசிக்கிறார். இந்த வழியில், சூரியன் சில நேரங்களில் தனது நட்பு ராசிக்குள் நுழைகிறது, சில சமயங்களில் எதிரி ராசியில் இடம்பெயர்கிறது. அந்த வகையில் வரும் அக்டோபர் 17-ஆம் நாள், சூரியன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு குடியேறுகிறார். சூரியனின் துலாம் ராசி சஞ்சாரத்தால் எந்த ராசிக்காரர்கள் எதிர்மறையான மற்றும் நேர்மறையான பலன்களை அனுபவிக்க உள்ளனர் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசியினருக்கு கூட்டணி மற்றும் கூட்டாண்மையில் வெற்றி கிடைக்கும் காலமாக இது பார்க்கப்படுகிறது. உங்கள் ஜாதகத்தில் 7-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வரும். பணியிடத்தில் மூத்த அதிகாரிகளிடம் இருந்து அழுத்தங்களை எதிர்கொள்ளலாம்.‌ உங்கள் துணையுடன் சண்டைகள் வரலாம். சில சமயங்களில் எதிர்மறையான செய்திகள் கிடைக்கும். தாயாரின் ஆரோக்கியத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சொத்து சார்ந்த விஷயங்களில் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம் அப்படி எடுத்தால் சொத்து சார்ந்த விஷயங்கள் பாதகமாக இருக்கலாம்.

ரிஷபம்

ரிஷப ராசியினரின் ஜாதகத்தில் 6-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வரும். உடல் நலனில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். சவால்களை சமாளித்து மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி காண்பீர்கள். பூர்வீக சொத்து தொடர்பாக இதுநாள் வரை நீடித்த பிரச்சனைகளில் இருந்து தீர்வு காண்பீர்கள். ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் உங்கள் நாட்டம் அதிகரிக்கும். உயர் கல்வி படிக்க விரும்பும் நபர்களின் விருப்பங்கள் நிறைவேறும். உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது. திருமணம் முடித்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் தொடர்பான நல்ல செய்தி கிட்டும்.

மிதுனம்

மிதுன ராசியினர் வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொண்டு வரும் ஒரு கிரக நிலை மாற்றமாக இந்த சூரியன் பெயர்ச்சி பார்க்கப்படுகிறது. மாணவர்களின் செயல் திறன் மேம்படும், பள்ளி தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெறுவார்கள். சொத்து விவகாரம் சார்ந்த வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கலாம். சுப காரியங்களுக்கான அறிகுறிகளை காண்பீர்கள்‌. செலவுகளை சமாளிக்க போதுமான வருமானம் கிடைக்கும்.‌ தன்னம்பிக்கையுடன் சவால்களை எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்.

கடகம்

கடக ராசியில் சஞ்சாரம் செய்யும் சூரியன், கடக ராசியினர் வீட்டில் மகிழ்ச்சியான தருணங்களை கொண்டு வருகிறார். நிதி ரீதியாகவும் எதிர்பார்த்த மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் நிகழும். வருவுக்கு அதிகமாகவே செலவுகளும் அதிகரிக்கும். தொழில் மற்றும் வணிக உறவுகளில் கவனம் செலுத்த வேண்டி வரும். குடும்பம் மற்றும் வீடு தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திருமணமானவர்களுக்கு இந்த காலக்கட்டம் சற்று சவாலானதாக இருக்கலாம். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசியினரின் வாழ்க்கையில் தடுமாற்றம் அதிகரிக்கும் ஒரு காலமாக இது பார்க்கப்படுகிறது. உங்கள் தன்னம்பிக்கை குறையும், வீட்டில் பிரச்சனைகள் அதிகரிக்கும். முடிவுகளை எடுப்பதில் சிரமம் ஏற்படலாம். பேசும் வார்த்தைகள் சில உங்கள் விருப்பங்களுக்கு மாறான முடிவுகளை அளிக்கலாம். உங்கள் உடல் நலத்திலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். காய்ச்சல், தலைவலி, சோர்வு போன்ற உடல்நலப் பிரச்சனைகள் வரலாம். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

கன்னி

கன்னி ராசியினரின் பேச்சாற்றல் மற்றும் நிதி நிலையை பாதிக்கும் ஒரு கிரக நிலை மாற்றமாக இது பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் நிதி சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் உங்கள் சேமிப்புகளை பாதிக்கும். அநாவசிய செலவுகளை தவிர்த்திடுங்கள். முடிந்தளவுக்கு சிக்கனமாக இருப்பது, எதிர்பார்த்த பலன்களை கொண்டு வரும். உறவினர்களுடன் சண்டைகள் வரலாம். குடும்ப உறவுகளில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம். பணியிடத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

துலாம்

தொழில் வாழ்க்கையில் காணப்படும் போட்டிகள் உங்களை சோர்வடையச் செய்யலாம். நெருங்கிய நண்பர்களுடன் வாக்குவாதங்கள், மனஸ்தாபங்கள் வந்துச் செல்லலாம். உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க போதுமான ஓய்வு எடுக்க முயற்சி செய்யுங்கள். துணையுடன் சிறு சிறு பிரச்சனைகள் உருவாகலாம். வயிறு சார்ந்த பிரச்சனைகள் வாட்டி வதைக்கலாம். இந்த காலகட்டத்தில் வேலையிழப்புகள் அல்லது பிற சங்கடங்களை சந்திக்க நேரிடும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கக்கூடும். எதிரிகள் உங்களுக்கு எதிராக சதித் திட்டங்கள் தீட்டலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினரின் ஜாதகத்தில் 12-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வரும். உயர் கல்விக்காக வெளிநாடு செல்வீர்கள்.‌ திடீர் வருமானம் அதிகரிக்கும், உங்கள் நிதி நிலையும் சிறப்பாக மாறும். உங்கள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். கடன் கொடுத்த இடத்தில் கேட்காமலேயே பணம் திரும்ப கிடைக்கும்.‌ குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பணியாற்றும் நபர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் முயற்சிகள் வெற்றிகளை தேடி தரும். மன அமைதிக்காக கோவில், தியான மடங்களுக்கு செல்வீர்கள்.

தனுசு

சாகச பிரியர்களான தனுசு ராசியினர் வாழ்க்கையில் இந்த சூரியன் பெயர்ச்சி, அவர்களின் ஜாதகத்தில் 11-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வருகிறது. பெற்றோர் ஆதரவை பெறுவீர்கள். குடும்ப உறவுகள் மத்தியில் ஆக்கப்பூர்வமான உரையாடல்கள் அதிகரிக்கும். சமூகத்தில் நற்பெயர், மதிப்பும் – மரியாதையும் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் பணியை பாராட்டுவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும். அரசு ஊழியர்களுக்கு இது சிறப்பான ஒரு காலமாக இருக்கும். மருத்துவ செலவுகள் சற்று அதிகரிக்கும் நிலையிலும், செலவுக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.

மகரம்

மகர ராசியினரின் தொழில் வாழ்க்கையில் எதிர்பார்த்த முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை கொண்டு வரும் ஒரு காலமாக இது பார்க்கப்படுகிறது. பணியிடத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழும், கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை இடையில் சமநிலை உண்டாகும்.‌ புது மனை, வீடு வாங்குவதற்கான வாய்ப்பு அதிகம், பழைய சொத்து சார்ந்த விவகராங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். அரசு வேலைக்காக காத்திருக்கும் நபர்களுக்கும் நல்ல முடிவு கிடைக்கும். ‌வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல் நலன் மேம்படும்.

கும்பம்

கும்ப ராசியினர் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் இந்த சூரியன் பெயர்ச்சி, கல்வித்துறையில் சிறந்து விளங்கும் வாய்ப்புகளை கொண்டு வரும். அரசு உதவித் தொகையுடன் வெளிநாட்டில் உயர் கல்வி படிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். தங்கள் துறையில் சிறந்து விளங்கும் ஒரு காலமாக இது அமையும். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும் காலம் இது. வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு, குடும்பத்தினர் உதவியாக இருப்பார்கள். பெற்றோர் நலன் வேண்டி, ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

மீனம்

மீன ராசியினரின் வாழ்க்கையில் போட்டிகள் அதிகரிக்கும். குறிப்பாக, தொழில் வாழ்க்கையில் போட்டிகள் அதிகரிக்கும் ஒரு காலமாக இது பார்க்கப்படுகிறது. வழக்கமான பணிகளில் சிறந்து விளங்குவீர்கள். ஆன்மீகம் தொடர்பான விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும்.‌ தொழிலில் உண்டாகும் சவால்களை உங்கள் நேர்த்தியான சிந்தனைகளால் வென்று காட்டுவீர்கள். உங்கள் வாழ்க்கையை உங்கள் விருப்பத்தின் படி கட்டமைக்க ஏதுவான ஒரு காலமாக இது அமையக்கூடும். குழந்தைகள் வழியே நற்செய்தி வந்து சேரும்.

இதனையும் படியுங்கள் : 12 ராசிகளும் தானம் செய்ய வேண்டிய பொருட்கள்

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை