தோஷங்களை நீக்கக் கூடிய தூப பரிகாரம்!!
முன் ஜென்மத்தின் கர்ம வினைகளின் அடிப்படையில் நாம் செய்த பாவத்தின் அடிப்படையிலும் சிலருக்கு ஜாதகரீதியாகவே நிறைய தோஷங்கள் இருக்கும். அந்த தோஷங்களை நீக்குவதற்கு நாம் நிறைய பரிகாரங்களை செய்திருப்போம் ஆனால் தோஷங்கள் நிவர்த்தி ஆகியிருக்கவே இருக்காது. ஒரு சிலருக்கு வாழ்நாள் பாவங்களால் க
முன் ஜென்மத்தின் கர்ம வினைகளின் அடிப்படையில் நாம் செய்த பாவத்தின் அடிப்படையிலும் சிலருக்கு ஜாதகரீதியாகவே நிறைய தோஷங்கள் இருக்கும். அந்த தோஷங்களை நீக்குவதற்கு நாம் நிறைய பரிகாரங்களை செய்திருப்போம் ஆனால் தோஷங்கள் நிவர்த்தி ஆகியிருக்கவே இருக்காது. ஒரு சிலருக்கு வாழ்நாள் பாவங்களால் கூட தோஷங்கள் உண்டாகி இருக்கும் நிறைய தோஷங்கள் உள்ளது. அந்த தோஷங்களை எல்லாம் நிவர்த்தி செய்வதற்கு தோஷங்களால் ஏற்பட்ட பிரச்சனைகளில் இருந்து வெளியே வருவதற்கு ஒரு தூப பரிகாரத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
எதிர்மறை ஆற்றல்
வீட்டில் நறுமணம் எந்த அளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி விட்டாலே வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து வீடு மகிழ்ச்சியாக இருக்கும். அதனால் தான் காலை மாலை என இரு வேலைகளிலும் வீட்டில் தீபம் ஏற்றி ஊதுபத்தி சாம்பிராணி போன்றவற்றை ஏற்றி வழிபாடு செய்கிறோம்.
சாம்பிராணி தூபம்
சாம்பிராணி தூபத்தை நாம் வீட்டில் போடும்போது ரெடிமேட் சாம்பிராணியை பயன்படுத்தாமல் ஒரு சில பொருட்களை சேர்த்து தூபம் தயார் செய்து போடலாம் இது அளவில்லா பலனை நமக்கு கொடுக்கும். சில மூலிகை பொருட்களை வைத்து தூபம் தயார் செய்வதற்கு நாட்டு மருந்து கடைகளில் ஒரு சில பொருட்களை நாம் வாங்க வேண்டும். நாட்டு மருந்து கடைகளில் சென்று வெண்கடுகு மற்றும் கருப்பு குங்கிலியம் போன்ற பொருட்களை வாங்கி வரவேண்டும். இந்த இரண்டு பொருட்களும் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை விளக்கி நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து வீட்டில் காலை மாலை என இருவேளைகளிலும் தூபம் போடும்போது நல்ல பலன் கிடைக்கும் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலும் நீங்கும். வீட்டில் மட்டுமில்லாமல் வியாபாரம் செய்யும் இடத்திலும் போடுவதன் மூலம் தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.
தூபம் போட வேண்டிய நேரம்
இந்த தூபத்தை ஞாயிற்றுக்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் மாலை 6:30 மணிக்கு மேல் போடும்போது தோஷ நிவர்த்தி நன்றாகவே இருக்கும். புதிதாக எந்த தோஷமும் ஏற்படாமலும் இருக்கும் இந்த இரண்டு பொருட்களையும் வைத்து முழு நம்பிக்கையோடு இந்த தூபத்தை இயற்கையான முறையில் போட்டு பாருங்கள் நிச்சயமாக நல்லதே நடக்கும். இது இரண்டும் சாதாரண பொருட்கள் கிடையாது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கக்கூடிய தோஷத்தை நிவர்த்தி செய்யக்கூடிய பொருட்கள் எனவே நம்பிக்கையோடு செய்யுங்கள்.
இதனையும் படியுங்கள் : பணக்கஷ்டம் தீர முருகனுக்கு ஒரு ரூபாய் பரிகாரம்!!