மீனத்தில் பயணிக்கும் சனி பகவானால் 2027 வரை இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம் தான்!!
நவகிரகங்களில் மிக முக்கியமானவராகவும், நீதிமானாக திகழ்பவர் சனி பகவான். பலருக்கும் சனி பகவான் என்றால் ஒரு வித அச்ச உணர்வு ஏற்படுவதுண்டு. ஜோதிடத்தைப் பின்பற்றாதவர் கூட சனி பெயர்ச்சியின் போது அவரின் ராசிக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க ஆர்வம் காட்டுவர். சனி பகவான் கஷ்ட
நவகிரகங்களில் மிக முக்கியமானவராகவும், நீதிமானாக திகழ்பவர் சனி பகவான். பலருக்கும் சனி பகவான் என்றால் ஒரு வித அச்ச உணர்வு ஏற்படுவதுண்டு. ஜோதிடத்தைப் பின்பற்றாதவர் கூட சனி பெயர்ச்சியின் போது அவரின் ராசிக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க ஆர்வம் காட்டுவர். சனி பகவான் கஷ்டத்தை மட்டுமல்ல, அளவில்லாத நன்மைகளையும் வழங்கக் கூடியவர். நாம் செய்துள்ள நன்மை-தீமைகளின் அடிப்படையிலேயே சனி பகவான் நமக்கு தரும் பலன்களும் அமையும். தற்போது, சனி பகவான் மீனத்தில் பயணித்து வருகிறார். 2027 வரை இதே ராசியில் பயணிப்பார். மீனத்தில் பயணித்து வரும் சனி பகவான் 5 ராசிகளுக்கு சிறப்பு ஆசிகளை வழங்குவார். 2027 வரை சனி பகவான் எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பு ஆசிகளைப் தருவார் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
ரிஷபம்
சனி பகவான் தற்போது ரிஷப ராசியின் பதினொன்றாவது வீட்டில் பயணித்து வருகிறார். சனி பகவான் 2027 வரை இந்த வீட்டில் இருப்பார். இந்த நேரத்தில், வருமானம் அதிகரிக்கும். வேலை மற்றும் வணிகத்தில் லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் இருக்கும். நிலுவையில் உள்ள பணிகள் வெற்றிகரமாக முடிவடையும். திருமண வாழ்க்கையில் அமைதி நிலவும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கக்கூடும். செல்வம் பெருகக்கூடும். வியாபாரிகள் பெரும் லாபம் ஈட்டக்கூடும்.
கடகம்
சனி பகவான் தற்போது கடக ராசியின் ஒன்பதாவது வீட்டில் பயணித்து வருகிறார். சனி பகவான் 2027 வரை இந்த வீட்டில் இருப்பார். உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். தெய்வ வழிபாட்டிலும் ஈடுபடுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான ஆரம்பகட்ட வேலைகளைத் துவக்குவீர்கள். வருமானத்தை அதிகரிக்க பல வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக மாறக்கூடும். முதலீடுகளில் லாபம் இருக்கலாம். மனம் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும்.
துலாம்
சனி பகவான் இந்த நேரத்தில் துலாம் ராசியின் ஆறாவது வீட்டில் பயணித்து வருகிறார். 2027 வரை சனி பகவான் இந்த வீட்டில் இருப்பார். கோபத்தை குறைத்து, நிதானமாக செயல்பட்டால் உங்கள் வேலைகளில் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி இருக்கும். புதிய நட்புகளால் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். நிதி ஆதாயம் கிடைக்கும். கடன்களிலிருந்து விடுதலை பெறுவீர்கள். நிலுவையில் உள்ள பணிகள் நிறைவடையும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
விருச்சிகம்
சனி பகவான் இந்த நேரத்தில் விருச்சிக ராசியின் ஐந்தாவது வீட்டில் பயணித்து வருகிறார். 2027 வரை சனி பகவான் இந்த வீட்டில் இருப்பார். உத்தியோகத்தில் நெருக்கடிகள் குறையும். அரசியல்வாதிகள், மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான பொழுதை அனுபவிப்பீர்கள். இந்த நேரத்தில் திருமணம் நடக்கலாம். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பரிபூரண ஆதரவும் உதவியும் கிடைக்கும். உங்களின் பணியிடத்தில் களங்கங்கள் தீரும்.
மகரம்
சனி பகவான் இந்த நேரத்தில் மூன்றாவது வீடான மகர ராசியில் பயணித்து வருகிறார். சனி பகவான் 2027 வரை இந்த வீட்டில் இருப்பார். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் மரியாதை அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. சிலருக்கு வெளியூர், வெளிநாட்டில் வேலை சார்ந்த வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. சொத்து வாங்கும் யோகம் உள்ளது.
இதனையும் படியுங்கள் : 2025 சனி குரு ராகு கேது பெயர்ச்சிகள்