வார ராசிபலன் 5 ஜனவரி 2025 முதல் 12 ஜனவரி 2025 வரை!!
மேஷம் இந்த வாரம் மேஷ ராசிக்காரர்கள் எதிலும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். பிள்ளைகளின் படிப்புக்கு இடையூறு உண்டாகலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை அழுத்தும். கடுமையாக உழைத்து கணிசமாக லாபம் பெறுவீர்கள். வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். இந்த வாரம் வீட்டில் சின்ன சின்ன பிரச்சன
மேஷம்
இந்த வாரம் மேஷ ராசிக்காரர்கள் எதிலும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். பிள்ளைகளின் படிப்புக்கு இடையூறு உண்டாகலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை அழுத்தும். கடுமையாக உழைத்து கணிசமாக லாபம் பெறுவீர்கள். வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். இந்த வாரம் வீட்டில் சின்ன சின்ன பிரச்சனைகள் தலை தூக்கி தலைவலியை கொடுக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத நல்ல மாற்றங்களை பணியிடங்களில் சந்திப்பார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் எதிர்காலம் குறித்த நல்ல வழிகாட்டுதல்களைப் பெறுவர்.
ரிஷபம்
இந்த வாரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்கள் நிறைந்ததாக இருக்கும். ஆன்லைன் வர்த்தகங்கள் லாபம் தரும். அலைச்சலால் உடல் சோர்வு உண்டாகும். திட்டம் போட்டு சேமிப்பை உயர்த்துவீர்கள். வியாபாரிகள் புதிய சாதனை படைப்பார்கள். வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். போட்டி பந்தயங்கள் சாதகமாக அமையும். தந்தையாருக்கு உடல்நிலை கோளாறு ஏற்படலாம். புதிய முதலீடு செய்து தொழில் விரிவாக்க பணிகளை மேற்கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் உத்தியோகம் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளின் தொடர்பு மூலம் நன்மைகளை பெறுவார்கள்.
மிதுனம்
இந்த வாரம் மிதுன ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்கள் நிறைந்ததாக இருக்கும். இந்த வாரம் உறவினர்கள் குடும்பத்துக்குள் கலகத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். பூர்வீக சொத்தில் வில்லங்கம் ஏற்பட்டு நீதிமன்றம் செல்வீர்கள். புதிய வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டுவீர்கள். குடும்பத்தை விட்டு வெளியூர் பயணம் செல்வீர்கள். பிள்ளைகளால் சில பிரச்சனைகள் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
கடகம்
இந்த வாரம் உங்களுக்கு பல வகையான நன்மைகளை கொண்டு வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு உங்களைத் தேடி வரும். எதிர்பாராத இடத்திலிருந்து தொழிலுக்கு தேவையான உதவி கிடைக்கும். தனியார் ஊழியர்கள், அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு பெறுவார்கள். வெளிவட்டார செல்வாக்கை வசீகரமான பேச்சால் உயர்த்திக் கொள்வீர்கள். வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
சிம்மம்
இந்த வாரம் நீங்கள் படிப்படியாக முன்னேற துடிப்பாக வேலை செய்வீர்கள். தனியார் துறை ஊழியர்கள் சொத்து வாங்குவார்கள். வேலை தேடியவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். சிறு வியாபாரிகள், சில்லறை வணிகர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். குடும்பத்தில் நல்ல காரியம் நடப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்வீர்கள். காதல் கை கூடி வரும். சுற்றத்தாருடன் ஒற்றுமையை பேணுவீர்கள். ஒரு சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக் குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும்.
கன்னி
இந்த வாரம் கன்னி ராசிகாரர்கள் முதலீடுகளை அதிகரித்து தொழிலில் துடிப்புடன் இறங்குவீர்கள். வியாபாரத்தை விரிவு படுத்த நண்பர்கள் உதவுவார்கள். திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சகோதரியின் திருமணத்தை பேசி முடிப்பீர்கள். தாயாரின் பேச்சைக் கேட்டு குடும்பத்தில் மனைவி பிரச்சனையை கிளப்புவார். பொறுப்பான சில காரியங்கள் உங்களைத் தேடி வரும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனையும் லாபமும் கிடைக்கும்.
துலாம்
இந்த வாரம் துலாம் ராசிக்காரர்களின் பொருளாதாரம் மேம்படும். திடீரென்று வியாபாரத்திற்கு அரசாங்க வாய்ப்புகள் கிடைக்கும். அதை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீண்ட நாளாக தொந்தரவு செய்த நோய் அகலும். அதிகமாக செலவு செய்து ஆடம்பரமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இந்த வாரம் எந்த காரியத்தையும் யோசித்து செய்யுங்கள். திருமண முயற்சிகள் பலிதமாகும். உறவினர்கள் அனுசரனையாக இருப்பார்கள். உடல் நலனில் அக்கறை அவசியம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
விருச்சிகம்
இந்த வாரம் விருச்சிக ராசிக்காரர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். நீண்ட காலமாக வராத கடன் வசூலாகும். மனைவியாலும் பிள்ளைகளாலும் சின்ன சின்ன பிரச்சனைகள் உண்டாகி மனதை காயப்படுத்தும். வெளிநாட்டு பயணம் மேற்கொள்வீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் சிறப்பாக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் களைகட்டும். குழந்தை பாக்கியம் கிட்டும். குடும்பத்தில் மற்றவர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் குடும்ப விஷயத்தில் மற்றவர்களைத் தலையிட அனுமதிக்கவேண்டாம்.
தனுசு
இந்த வாரம் தனுசு ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். இந்த வாரம் புதிய முதலீடுகளை தவிர்க்கவும். தேவையில்லாமல் அடுத்தவர் காரியங்களில் தலையிடாதீர்கள். இந்த வாரம் பொதுநல காரியங்களில் ஈடுபட்டு செல்வாக்கை உயர்த்தி கொள்வீர்கள். கடுமையான வார்த்தைகளை உபயோகித்தால் உறவுகள் சிதறிப் போகும். பிள்ளைகளால் செலவு அதிகரிக்கும். கணவன் – மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. ஒரு சிலருக்கு குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.
மகரம்
இந்த வாரம் மகர ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகமாக இருக்கும். எதிர்கால நன்மைக்காக பொருளாதார சேமிப்பை உயர்த்துவீர்கள். தங்க நகைகள் வாங்குவீர்கள். தாய் வழி சொத்து கைக்கு வருவது தள்ளி போகும். அரசாங்க ஒப்பந்தங்கள் மூலமாக புதிய வேலை வாய்ப்புகளை பெறுவீர்கள். தனியார் ஊழியர்கள் உழைப்பின் மகத்துவத்தை முதலாளிகளுக்கு உணர்த்துவார்கள். கட்டுமானத்துறை தொழிலாளர்கள் கொஞ்சம் சிரமத்தை எதிர் நோக்குவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். சிறியதாக தொடங்கிய தொழிலை பெரிய நிலைக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்வீர்கள். புதிய வீடு கட்டி குடி செல்வீர்கள். சிலர் வேலை காரணமாக ஊர் விட்டு ஊர் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். எதிர்பாராத வகையில் பணம் வந்து மேன்மையை ஏற்படுத்தும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அதனால் மனதில் சோர்வு உண்டாகும்.
மீனம்
இந்த வாரம் மீன ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். நினைத்த காரியத்தை நிறைவேற்ற புதிய பாதையில் இறங்குவீர்கள். திருமண பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக நடக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். இந்த வாரம் வெளியில் இருக்கும் மரியாதை வீட்டில் கிடைக்காது. பழைய கடன்கள் தொல்லை தரக்கூடும் என்பதால், எச்சரிக்கை அவசியம். தாயாருக்கு சிறிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே பரஸ்பரம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
இதனையும் படியுங்கள் : 2025ல் 12 ராசிகளும் செய்ய வேண்டிய பரிகாரங்கள்