வார ராசிபலன் 04 ஜனவரி 2026 முதல் 10 ஜனவரி 2026 வரை!!

மேஷம் இந்த வாரம் எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். செல்வாக்கு உயரும். பயணங்கள் அனுகூலம் தரும். சிலருக்கு நீண்ட தூரப் பயணம் ஏற்படலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு. பங்குச்சந்தை முதலீடுகள் லாபம் தரும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். சிலருக்கு ஊ

By ·

மேஷம்

இந்த வாரம் எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். செல்வாக்கு உயரும். பயணங்கள் அனுகூலம் தரும்.  சிலருக்கு நீண்ட தூரப் பயணம் ஏற்படலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு. பங்குச்சந்தை முதலீடுகள் லாபம் தரும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். சிலருக்கு ஊதிய உயர்வு வேலை மாற்றத்தால் ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் நல்ல வாய்ப்புகள் உண்டு. அரசியலில் உள்ளவர்களுக்குச் செல்வாக்கு அதிகரிக்கும். திடீர் பதற்றங்கள் படபடப்பு உருவாகும். பிறர் விஷயங்களில் தலையிட்டு கருத்து சொல்ல வேண்டாம். இட மாற்றங்களும் வெளியூர் பயணங்களும் உண்டு. பயணங்களும், மன அலைச்சலும் உருவாகும். 

ரிஷபம் 

ரிஷப ராசியினர் சகிப்புத்தன்மையுடன் செயல்பட வேண்டிய வாரம். நிதானமாக முடிவெடுங்கள். வார இறுதியில் மன நிம்மதி கூடும். மற்றவர்களுக்கு வாக்குறுதி அளிப்பதில் நிதானம் தேவை. எதிர்பாராத செலவுகள் வர வாய்ப்புள்ளதால், செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கலில் தெளிவு அவசியம். பணத்தட்டுப்பாட்டை சமாளிக்க சேமிப்பில் கவனம் செலுத்தவும். நிதி வசதி அதிகரிக்கும். தொழில் சீராக நடைபெறும். ஓரளவு லாபம் உண்டு. அகலக்கால் வைத்து மாட்டிக் கொள்ள வேண்டாம். இல்லறத்தில் சிறுசிறு பிரச்னைகளும் வாக்கு வாதங்களும் வரும். சுபகாரிய முயற்சிகளில் சிற்சில பிரச்னைகள் உண்டு. 

மிதுனம் 

இந்த வாரம் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் வாழ்க்கையில் நல்ல மாற்றம் தரும். துணையிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உறவினர் வட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும். காதல் உறவுகள் இனிக்கும். பழைய கடன்கள் வசூலாகும், நிதிநிலை உயரும். அரசாங்க அனுகூலங்கள் உண்டு. போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். மூத்த சகோதரர்களால் மன சங்கடமான சில நிகழ்வுகள் நேரலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையில்லாத கற்பனையான அச்சங்கள் மனதில் உருவாகும். வார்த்தைகளில் கவனம் தேவை. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதங்களில் ஈடுபட வேண்டாம்.

கடகம் 

இந்த வாரம் மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வீட்டைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபடுவீர்கள். எதிர்ப்புகளைச் சமாளிக்கும் திறமை கூடும். விருந்தினர்கள் வருகை உண்டு. எதிர்பாராத பண வரவு உண்டாகும். கடன் சுமை குறையும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் குறைவு இருக்காது. கொடுக்கல் வாங்கல்கள் சுலபமாகவே இருக்கும். தொழில் வணிகம் சீராக நடைபெறும். ஆனால், முயற்சிகள் சற்று கூடுதலாக செய்ய வேண்டும். யாருடனும் பகைமை பாராட்ட வேண்டாம். பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதி வாதங்களில் ஈடுபட வேண்டாம். 

சிம்மம் 

இந்த வாரம் தைரியமும், தன்னம்பிக்கையும் உச்சத்தில் இருக்கும். சமூகத்தில் கௌரவ பதவிகள் தேடி வரும். அரசு காரியங்கள் தடையின்றி முடியும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்ற அதிகச் செலவுகள் செய்ய நேரிடலாம். நீண்ட காலச் சேமிப்புத் திட்டங்களைத் தொடங்குவீர்கள். கலைத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்களும் வாய்ப்புகளும் கிடைக்கும். ‌புதிய முதலீடுகளில் கூடுதல் கவனம், எச்சரிக்கை தேவை. எதிர்பாராத மருத்துவ செலவுகளைத் தடுக்க முடியாது. வருமானம் இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். பேச்சில் நிதானமும் கவனமும் தேவை என்பதை மறந்துவிட வேண்டாம்.

கன்னி 

இந்த வாரம் எதையும் ஆராய்ந்து செயல்படுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பயணங்கள் மூலம் லாபம் உண்டு. புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். வீடு, வாகனச் சேர்க்கை கைகூடும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகளுக்குப் பெரும் மதிப்பு கிடைக்கும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. கொடுக்கல் வாங்கல்கள் சுலபமாக நடைபெறும். கொடுத்த கடன் வந்துவிடும். வேலை மற்றும் வணிகத்தில் மகிழ்ச்சியான முன்னேற்றங்களும் வாய்ப்புகளும் ஏற்படும். கலைத்துறையினர் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கும். சில வாய்ப்புகள் கைநழுவிப் போகும். பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

துலாம் 

இந்த வாரம் ஆடம்பரச் செலவுகள் கூடும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. வாகனப் பயணங்களில் நிதானம் தேவை. வாழ்க்கைத் துணையின் மூலம் நிதி ஆதாயம் உண்டு. சுப நிகழ்ச்சிகளில் முதன்மைப் பங்கு வகிப்பீர்கள். உங்கள் பேச்சுத் திறமையால் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பீர்கள். வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைத்து விடும். எந்தப் பிரச்னைகளையும் நெஞ்சுரத்தோடு எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். சில பொருள்கள் காணாமல் போகும் வாய்ப்புகள் உண்டு என்பதால் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். சுபகாரிய முயற்சிகளில் தற்காலிகமான தடங்கல்கள் உண்டு. ‌

விருச்சிகம் 

இந்த வாரம் விடாமுயற்சியால் வெற்றி பெறுவீர்கள். உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். வார்த்தைகளில் நிதானம் மிகவும் அவசியம். புதிய நபர்களிடம் குடும்ப ரகசியங்களைப் பேச வேண்டாம். பணப்புழக்கம் சீராக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் குறையும். வெளிநாட்டு உத்தியோகம் சாதகமாக அமையும். தொழில்நுட்ப துறையில் பணிபுரியும் நண்பர்களுக்கு ஏற்றம் உண்டு. சிலர் பணத்தை ஜாக்கிரதையாகச் செலவு செய்ய வேண்டும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தலை எடுக்கும்.

தனுசு 

இந்த வாரம் தடைகள் விலகும். மற்றவர்களுக்கு உதவி செய்து பாராட்டு பெறுவீர்கள். முக்கிய முடிவுகளில் பெரியவர்களின் ஆலோசனை பெறுவது நல்லது. பெரியவர்களின் ஆசி கிட்டும். நிதிநிலை மிகச் சிறப்பாக இருக்கும். வங்கிச் சேமிப்பு உயரும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மேலதிகாரிகளிடம் ஆதரவு உண்டு நிர்வாகத்தினரின் சலுகைகள் உண்டு புதிய வேலைக்கு முயற்சி செய்யும் வெற்றி கிடைக்கும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். புதிய பொறுப்புகள் தரப்படும். முதலீடுகள் உடனடி பலன் கிடைக்காது என்பதால் முதலில் தயக்கம் இருக்கும். மூன்றாம் மனிதர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.

மகரம் 

மகர ராசியினருக்கு வேகமும் விவேகமும் கூடும் வாரம். இழந்த வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சுப செலவுகள், மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உறவினர்கள் தேடி வருவார்கள். குடும்பத்தில் நிலவிய கசப்புணர்வுகள் நீங்கி அமைதி நிலவும். பணப்புழக்கம் சீராக இருந்தாலும் செலவுகளில் கட்டுப்பாடு தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். வணிகத்திலும் தொழிலிலும் சிறப்பு உண்டு. வழக்குகள் சாதகமாகும். பங்காளிப் பிரச்னைகள் சுமுகமாக முடியும் வாய்ப்பு உண்டு. உடல்நல விஷயத்தில் கவனம் தேவை. எந்த உபாதைகளையும் அலட்சியப்படுத்த வேண்டாம். 

கும்பம் 

இந்த வாரம் பொறுப்புகள் கூடும். துணிச்சலாகச் செயல்பட்டு மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழ்வீர்கள். நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டு. நண்பர்கள் வட்டாரத்தில் செல்வாக்கு கூடும். பழைய கடன்கள் அடையும். இல்லத்துணையுடன் கருத்து வேறுபாடு வராமல் பொறுமை கடைப்பிடிக்கவும். உத்தியோகத்தில் உழைப்பு அங்கீகரிக்கப்படும். தாய் தந்தையரின் உதவி கிடைக்கும். நண்பர்கள் உதவுவார்கள். திருத்தல தரிசனம் உண்டு. மனதில் நிம்மதி இருக்கும். ஆற்றலோடு காரியத்தைச் செய்வீர்கள். சிந்தனை பளிச் சென்று இருக்கும். கணவன் அல்லது மனைவியின் ஆரோக்கியத்திலும் சிறு பிரச்னைகள் வரும். 

மீனம் 

ஞானமும் பக்தியும் அதிகரிக்கும். பிறருக்கு வழிகாட்டும் இடத்தில் இருப்பீர்கள். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் விரிவடையும். தொழில் வெற்றி, பணிச்சுமை உண்டு. உறவினர்கள் மத்தியில் நன்மதிப்பு கூடும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். புதிய முதலீடுகள் லாபம் தரும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் வேலை உத்தியோகச் சிறப்பு அங்கீகரிக்கப்படும். அரசியலில் உள்ளவர்களுக்கு புதிய பதவிகள் வந்து சேரும். சிலருக்கு தேவையற்ற செலவுகளை செய்ய வேண்டி இருக்கும். கொஞ்சம் கவனம் இருந்தால் தப்பிக்கலாம். மருத்துவச் செலவுகள் ஏற்படலாம்.

இதனையும் படியுங்கள் : 2026 ராகு கேது பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்

Recipes AMP · Quick view
View full