வார ராசிபலன் – 25 ஜனவரி 2026 முதல் 31 ஜனவரி 2026 வரை!!

மேஷம் மேஷ ராசியினருக்கு இந்த வாரம் உங்கள் அதிகாரம் மேலோங்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். பல சிக்கல்கள் விலகும்.தொழில் ரீதியாக இருந்த நீண்ட நாள் கனவுகள் நனவாகும். தொழில் முனைவோர்கள் பெரிய அளவிலான முதலீடு செய்யத் திட்டமிடலாம். பண வரவுகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். சுப காரியத் தடைக

By ·

மேஷம் 

மேஷ ராசியினருக்கு இந்த வாரம் உங்கள் அதிகாரம் மேலோங்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். பல சிக்கல்கள் விலகும்.தொழில் ரீதியாக இருந்த நீண்ட நாள் கனவுகள் நனவாகும். தொழில் முனைவோர்கள் பெரிய அளவிலான முதலீடு செய்யத் திட்டமிடலாம். பண வரவுகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். சுப காரியத் தடைகள் விலகும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு மாறும் யோகமும் சிலருக்கு உண்டு. வாழ்க்கையில் புதிய மாற்றங்களை உணருவீர்கள். எதிரிகள் இருந்தாலும்கூட உங்கள் முயற்சிகளை அவர்களால் எதிர்க்க முடியாது. எந்தக் காரியமும் அதிக அலைச்சலுக்கு பின்னாலும், அதிகமான செலவுக்கு பின்னாலும்தான் நடைபெறும். 

ரிஷபம் 

ரிஷப ராசியினருக்கு தெய்வ அனுகூலமும் பித்ருக்களின் ஆசியும் நிறைந்த வாரமாக அமையும். சமூகத்தில் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களின் நட்பு கிடைப்பதுடன், கௌரவம் உயரும். தொழில் மற்றும் வணிகத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் லாபம் பெருகும். ‌திறமைக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு உண்டு. தாய் வழிச் சொந்தங்கள் கை கொடுக்கும். சுப காரியத் தடைகள் விலகும். வெகு நாளாக கிடப்பில் போடப்பட்ட விஷயம் சாதகமாக நடக்கும். இப்போதைக்கு பெரிய அளவில் எதிலும் முதலீடு செய்ய வேண்டாம். மனதில் எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் இருக்கும். 

மிதுனம் 

மிதுன ராசிக்கு இந்த வாரம் மிகுந்த எச்சரிக்கையுடனும், நிதானத்துடனும் செயல்பட வேண்டிய காலமாகும். புதிய கடன் பெற்று பழைய கடனை தீர்ப்பீர்கள். மறைமுக சவால்கள் தோன்றினாலும், ஆழமான சிந்தனை மூலம் அவற்றை முறியடிக்கலாம். புதிய முதலீடுகளை தவிர்ப்பது அவசியம். வருமானத்தைப் பெருக்கும் வழிகள் கிடைக்கும். அசையா சொத்துக்களின் சேர்க்கையும் உண்டு. கடன் பிரச்னை கட்டுக்குள் இருக்கும். சிலருக்கு மன உளைச்சல் வரும். வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் சிற்சில நெருக்கடிகள் இருந்து கொண்டே இருக்கும். சில விஷயங்கள் உங்கள் சகிப்புத் தன்மையைச் சோதிக்கும்.

கடகம் 

கடக ராசி அன்பர்களுக்கு கூட்டுத் தொழில் மற்றும் சமூக உறவுகளில் மிகுந்த கவனம் தேவை. நண்பர்கள் விஷயத்தில் கவனம் அவசியம். குடும்ப வாழ்க்கையில் வாழ்க்கைத் துணையின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வது நல்லிணக்கத்தைத் தரும். நீங்கள் எதிர்பார்த்த நன்மைகள் தடையில்லாமல் கிடைக்கும். நெருக்கடிகள் குறையும்.  குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அவ்வப்பொழுது ஆரோக்கியத்தில் பிரச்னைகள் வந்து செல்லும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல் விஷயங்களிலும், அபிப்பிராயம் சொல்வதிலும் எச்சரிக்கையுடன் இருக்கவும்.

சிம்மம் 

சிம்ம ராசிக்கு எதிரிகளை முறியடிக்கும் வல்லமை பெருகும். சட்ட ரீதியான சிக்கல்களில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். அரசியல் தொடர்புகள் அனுகூலமாக அமையும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தன்னம்பிக்கையை அதிகரிக்கும். முயற்சிகள் பலிக்கும். தொழில் வணிகத்தில் மந்த நிலை மாறும். உடன் பிறந்தவர்கள் கை கொடுப்பார்கள். தேவையற்ற விவகாரங்களில் உங்கள் கருத்துக்களைச் சொல்ல வேண்டாம். எந்த வேலை முக்கியமோ அந்த வேலைக்கு முன்னுரிமை கொடுத்துச் செய்யுங்கள் அது உங்களுக்கு நல்லது.

கன்னி 

கன்னி ராசியினருக்கு இந்த வாரம் சாதகமான பலன்களைத் தரும். புத்திசாலித்தனமான முடிவுகளால் காரிய சித்தி உண்டாகும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் வந்து சேரும். முதலீடுகள் மூலம் லாபம் பெருகும். நண்பர்களும் உறவினர்களும் துணை நிற்பார்கள். வணிகத்தில், விற்பனையில் இருந்த மந்த நிலை மாறி உற்சாகம் கிடைக்கும். சகோதர ஒற்றுமை அதிகரிக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் ஒரு முடிவுக்கு வரும். உங்கள் பேச்சு உங்களுக்கு சில நேரங்களில் எதிரிகளை உருவாக்கும் அதனால் கவனமாக இருக்கவும். கவனமாக இருங்கள். தேவையற்ற பேச்சுக்களில் நேரத்தை செலவிட வேண்டாம்.

துலாம் 

துலாம் ராசிக்காரர்களுக்கு வீடு, வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், தாய்வழி உறவுகளின் ஆதரவும் கிட்டும். உத்தியோகத்தில் வேலைப்பளு இருந்தாலும், அதற்கான அங்கீகாரம் கிடைக்கும். பொருளாதாரத்தில் சிரமங்கள் இருக்காது. காரியத் தடைகளும் தாமதங்களும் விலகும். வெளிநாட்டுத் தொடர்புகளால் நன்மை உண்டு. வேலை பார்ப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. சிலருக்கு மனப்புழுக்கம் அதிகரிக்கும். வாய் விட்டு வெளியில் சொல்ல முடியாத சில சங்கடங்கள் ஏற்படலாம்.

விருச்சிகம் 

விருச்சிக ராசியினருக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். இளைய சகோதரர்களுடனான உறவு வலுப்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கிளைகளைத் தொடங்க வாய்ப்புகள் அமையும். எந்தக் காரியத்தையும் துணிச்சலோடு செய்யும் ஆற்றல் பிறக்கும். தள்ளிப்போன காரியங்கள் முடிந்துவிடும். கடன் படிப்படியாகக் குறையும். சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வரலாம். முன்கோபம் உங்களுக்குப் பிரச்னைகளைத் தரும். வீண் அலச்சலைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். 

தனுசு 

தனுசு ராசியினருக்கு இந்த வாரம் நிதி ரீதியான வலுவைத் தரும். பேச்சாற்றல் மூலம் காரியங்களைச் சாதிப்பீர்கள். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். புதிய முதலீடுகளில் ஆர்வம் காட்டுவீர்கள். கணவன் மனைவி உறவுகளில் கருத்து வேறுபாடுகள் அகலும். கடன் பிரச்னைகள் படிப்படியாக தீரும். தெய்வ பலமும் முன்னோர்கள் ஆசிர்வாதமும் உண்டு. செலவுகளில் கவனம் தேவை. குழப்பமான மனநிலையை தவிர்க்க முடியாது. தேவையற்ற குடும்ப பிரச்னைகளை அதிகப்படுத்த வேண்டாம். தந்தையுடன் கருத்து வேறுபாடு வேண்டாம். எதிலும் கவனமாகவும் பொறுப்புடனும் செயல்படுங்கள்.

மகரம் 

மகர ராசியினருக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாகும். உங்கள் தலைமைப் பண்பும், ஆளுமைத் திறனும் பிறரால் மதிக்கப்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் உங்கள் சொற்களுக்கு மதிப்பிருக்கும். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். பொருளாதார நிலையில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. வெகுகாலமாக தீர்க்கப்படாத பிரச்னை விரைவில் தீரும். உற்சாகமும் நம்பிக்கையும் பிறக்கும். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பணிச்சுமை அதிகரிக்கும். உற்சாகத்தைக் குறைக்கும் படியாக சில சம்பவங்கள் நடக்கலாம். சோம்பலால் சில வாய்ப்புகளை இழக்கும் படி நேரலாம். 

கும்பம் 

கும்ப ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் சுபச் செலவுகளும், ஆன்மீகச் சிந்தனைகளும் மேலோங்கும். புதிய பொருள் சேர்க்கை உண்டு. வெளியூர் அல்லது வெளிநாடு தொடர்பான முயற்சிகள் கைகூடும். வெளியூர் அல்லது வெளிநாடு தொடர்பான முயற்சிகள் கைகூடும். சுபகாரியத் தடைகள் விலகும். பதவி மாற்றங்கள் உண்டு. அதில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றமும் கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு வங்கி கடன் முதலிய வசதிகள் கிடைக்கும். குழந்தைக்காகக் காத்திருப்பவர்களுக்கு காலம் கனிந்திருக்கிறது. பணமும் செலவாகும். யாரையும் நம்பி எந்தக் காரியத்திலும் ஈடுபட வேண்டாம். உங்கள் சுய முயற்சி மட்டுமே தேவை.

மீனம் 

மீன ராசியினருக்கு இந்த வாரம் தொட்டதெல்லாம் துலங்கும் வாரமாக இது அமையும். பலருக்கு பொன் பொருள் வாகனச் சேர்க்கை உண்டு. பொருளாதார ரீதியாக எதிர்பாராத லாபங்கள் வந்து சேரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் திட்டமிடப்படலாம். எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி வெற்றி பெறுவீர்கள். உங்களை விட்டுப் பிரிந்தவர்கள் மெல்ல உங்களை நோக்கி வருவார்கள். தொழிலிலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு உண்டு. பணம் கொடுக்கல் வாங்கல்களில் எச்சரிக்கை தேவை. நீதிமன்ற வழக்குகளில் காலம் விரயமாகலாம். மேலதிகாரிகளை அனுசரிப்பது நல்லது.

இதனையும் படியுங்கள் : 2026 ராகு கேது பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்

Recipes AMP · Quick view
View full