வார ராசிபலன் – 29 ஜூன் 2025 முதல் 05 ஜூலை 2025 வரை!!
மேஷம் இந்த வாரம் அலைச்சல்களுக்கு பின்னர் காரிய வெற்றி ஏற்படும். தைரியஸ்தான சூரியன், லாப ஸ்தான ராகு நன்மைகளை தருவார்கள். தனியார் உத்தியோகஸ்தர்கள் இனிய சூழலில் பணியாற்றுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் ஆசிகளை பெறுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.கணவன் மனைவி உறவுகள் அன்பு கொண்டத
மேஷம்
இந்த வாரம் அலைச்சல்களுக்கு பின்னர் காரிய வெற்றி ஏற்படும். தைரியஸ்தான சூரியன், லாப ஸ்தான ராகு நன்மைகளை தருவார்கள். தனியார் உத்தியோகஸ்தர்கள் இனிய சூழலில் பணியாற்றுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் ஆசிகளை பெறுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.கணவன் மனைவி உறவுகள் அன்பு கொண்டதாக இருக்கும். எந்த காரியத்தையும் அவசரப்பட்டுச் செய்ய வேண்டாம். பூர்வீகச் சொத்துக்கள் பிரச்னையில் இழுபறி நீடிக்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். குடும்ப விஷயடத்தில் பிறர் தலையீட்டால் மனவருத்தம் நிகழலாம். பங்குச்சந்தை வியாபாரங்களில் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள். வீடு கட்டுவதற்கான முயற்சியை தொடங்குவீர்கள்.
ரிஷபம்
இந்த வாரம் புதிய நம்பிக்கைகள் ஏற்படும். தன ஸ்தான குரு, லாப ஸ்தான சனி மன விருப்பங்களை நிறைவேற்றுவார்கள். அரசு உத்தியோகஸ்தர்கள் நிர்வாகத்தின் பாராட்டு பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வேடிக்கை விளையாட்டுகளில் இருந்து விலகி பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும். இந்த வாரம் நல்ல முறையில் உங்கள் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். கணவன் மனைவி உறவுகள் அன்பு கொண்டதாக இருக்கும். தொழிலில் புதிய உத்வேகம் வரும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனமாகச் செல்லவும். சில நேரத்தில் ஒரு காரியத்தைச் செய்து விட்டு மாற்றிச் செய்திருக்கலாம் என்று தோனும் அதனால் சற்று பொறுமையாக இருக்கவும். புதிய வேலை வாய்ப்புகள் பெறுவீர்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும்.
மிதுனம்
இந்த வாரம் மனதில் புதிய எண்ணங்கள் உருவாகும். லாப ஸ்தான சுக்கிரன் ஆடை ஆபரண வண்டி வாகன சேர்க்கை ஏற்படுத்துவார். அரசு உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளை ஏற்று செயல்படுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தனித்திறமைகளை வெளிக்காட்டி பாராட்டு பெறுவார்கள். மன உளைச்சல், உழைப்பு காரணமாக அசதி ஏற்படும். சகோதர உறவுகளில் கவனம் தேவை. குடும்ப சிக்கல்கள் ஏற்படலாம். முக்கியமாக தந்தை பிள்ளைகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மனக்கசப்பு வரலாம். எழுத்துப் பூர்வமான உறுதி மொழிகளில் கவனம் தேவை. சில தடைகள் விலகும். வீட்டிற்குத் தேவையான சில பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. ஆன்மீகப் பெரியவர்களின் ஆசியால் நல்லது நடக்கும்.
கடகம்
இந்த வாரம் முயற்சிகளில் தடைகளை சந்தித்து வெற்றி பெறுவர். பனிரெண்டாம் இட சூரியன் குரு வெளிநாட்டு தொடர்புகளை தருவார்கள். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவை பெற்று செயல்படுவார்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவர். எதிர்பார்த்த அனுகூலமான விஷயங்கள் நடைபெறும். அடிக்கடி பிரயாணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. விருந்து கேளிக்கை முதலிய விஷயங்களில் நாட்டமும் வாய்ப்பும் கிடைக்கும். நற்செய்தி ஒன்று விரைவில் கிடைக்கும். வீடு கட்டுதல் நன்றாக நடைபெறும். கொஞ்சம் நிதானித்து செயல் பட்டால் சிக்கல்கள் குறையும். செலவுகளை குறைக்க வேண்டும். உடல்நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும். சிரமங்கள் இருந்தாலும் கூட சமாளித்து விட முடியும்.
சிம்மம்
இந்த வாரம் சமூக அந்தஸ்தும், மதிப்பும் அதிகரிக்கும். லாப ஸ்தானத்தில் உள்ள குரு சூரியன் அரசு தரப்பு நன்மைகளை தருவார்கள். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணி உயர்வை பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து திட்டமிட வேண்டிய காலகட்டம். நண்பர்கள் உதவி கிடைக்கும். வீடு கட்டும் எண்ணம் இருந்தால் உடனே செயல்படுத்துங்கள். உங்கள் சொல்லுக்கு குடும்பத்திலும் வெளியிலும் மரியாதை கிடைக்கும். வீட்டுக்குள் பிரச்னைகள் மட்டுப்படும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பளம் உயர்வு கிடைக்கலாம். தொழில் வியாபார போட்டிகள் அதிகரிக்கும். கடன் வாங்குவதை குறைத்துக் கொள்ள வேண்டும். மனைவி அல்லது கணவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்படலாம். உறவினர்களால் சிக்கலை சந்திப்பீர்கள்.
கன்னி
இந்த வாரம் நீண்ட நாள் கனவு பலிக்கும். லாப ஸ்தானத்தில் உள்ள ராசி அதிபதி வெற்றிகளை வழங்குவார். தனியார் துறை உத்தியோகஸ்தர்கள் கடன் பெற்று செலவுகளை சமாளிப்பர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வர். நீண்டகால நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை மாற்றத்தால் முன்னேற்றம் உண்டு. இடம் விட்டு இடம் மாறும் அமைப்பும் உண்டு. இந்த வாரம் எதைச் செய்தாலும் அது உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மையாய் முடியும். தொழிலில் உள்ள நண்பர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் காலம். வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வேலை தேடியவர்களுக்கு நல்ல செய்தி வரும். பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள்.
துலாம்
இந்த வாரம் தன வரவு அதிகரிக்கும். ராசியை பார்க்கும் ராசி அதிபதி மன விருப்பங்களை நிறைவேற்றுவார். தனியார் உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பை பெறுவர். பள்ளி கல்லூரி மாணவர்கள் கூடுதல் கவனத்தோடு பாடங்களை படிக்க வேண்டும். அலைச்சல் காரணமாக உடல் சோர்வு ஏற்பட்டு விலகும். பொருளாதாரம் நல்ல முறையில் உயரும். கலைஞர்களுக்கு அற்புதமான காலம். அரசாங்க உதவிகள் கிடைக்கும். விரோதிகள் அழிந்து போவார். சகோதர உறவுகளில் கவனம் தேவை. உடல்நிலை நெருக்கடியாக இருக்கலாம். எச்சரிக்கையாக இல்லாவிட்டால் சிறிய விபத்துக்கள் ஏற்படலாம். வியாபாரத்திற்கு தேவையான உதவி வெளியூரிலிருந்து கிடைக்கும். உறவினர்களால் குடும்பத்தில் பிரச்சனை உண்டாகும்.
விருச்சிகம்
இந்த வாரம் எண்ணிய காரியங்கள் நடந்தேறும். ராஜ்ய ஸ்தானத்தில் உள்ள ராசி அதிபதி கௌரவத்தை ஏற்படுத்துவார். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை கவனமாக செய்து வர வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வண்டி வாகனங்களில் நிதானமாக செல்வது அவசியம். அரசியலில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் ஏமாற்றத்தையும் தரும். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். போட்டியில் உள்ளவர் விலகுவார்கள். சிலர் சொந்தக் கட்டடத்திற்கு தொழிலை மாற்றுவார்கள். அற்புத அனுபவம் தரும் பயணங்களும் உண்டு. குழந்தைகள் விஷயத்தில் அதிக கவனம் தேவை. போட்டி பந்தயங்களில் உங்களுக்குத் தான் வெற்றி கிடைக்கும்.
தனுசு
இந்த வாரம் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். சூரியன், குரு ஆகிய கிரகங்கள் புதிய தொடர்புகளை ஏற்படுத்துவார்கள். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் புதிய மாற்றங்களை எதிர்கொள்வர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களோடு புதிய இடங்களுக்கு செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். மனைவியால், கணவனால் ஆதாயங்கள் உண்டு. குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். குழந்தை பாக்கியம் சித்திக்கும். பிள்ளைகளின் ஆசைகளை மனம் கோணாமல் பூர்த்தி செய்வீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவு செய்வீர்கள். ஆரோக்கியக் குறைவுகளும் ஏற்படும். ஆரோக்கியத்தை நன்கு பார்த்துக் கொள்ளுங்கள். சகோதரர்களை அனுசரித்துச் செல்லவும். ஆத்திரப்பட்டு அவசரப்பட்டு எந்த காரியமும் செய்ய வேண்டாம். இழுபரியாக இருந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
மகரம்
இந்த வாரம் சுறுசுறுப்பாக செயல்பட்டு காரிய வெற்றி அடைவர். சுக்கிரன், புதன் ஆகியோர் மன மகிழ்ச்சியையும், நண்பர்கள் மூலம் நன்மையையும் தருவார்கள். உத்தியோகஸ்தர்கள் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதுமையாக சிந்தித்து, திறமையாக செயல்படுவர். பொருளாதாரம் அற்புதமாக இருக்கும். கொடுக்கல் வாங்கல்களில் உள்ள பிரச்னைகள் தீரும். சுறுசுறுப்பும் புதிய சிந்தனைகளும் மகிழ்ச்சியும் உண்டாகும். சாதாரண பேச்சுக் கூட வேறு அர்த்தங்களில் எடுத்துக் கொள்ளப்பட்டு பிரச்னைகளைத் தரலாம். உடல்நிலையில் கவனம் தேவை. சகோதர உறவுகளில் கவனம் தேவை. அநாவசியமாக கடன் வாங்காதீர்கள். திருப்பி செலுத்த முடியாமல் சங்கடப்படுவீர்கள். அரசாங்க காரியங்களில் அலட்சியமாக இருக்க வேண்டாம்.
கும்பம்
இந்த வாரம் எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும். பஞ்சம ஸ்தானத்தில் உள்ள குரு பல வெற்றிகளை தருவார். தனியார் துறை உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவர். சிலருக்கு புதிய உத்தியோகம் கிடைக்கும். பணப் பிரச்னை குறையும். குழந்தைகளின் படிப்பிலும் ஆற்றலிலும் நல்ல திருப்பம் ஏற்பட்டு மகிழ்ச்சியைத் தரும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. எல்லா விஷயத்திலும் அதிக உழைப்பு தேவைப்படும். தேவையில்லாத வதந்திகளை நம்புவதால் அழுத்தமும் உண்டாகும். கேட்டவுடன் எதையும் நம்ப வேண்டாம். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் யாருடனும் வாக்குவாதம் செய்யாதீர்கள்.
மீனம்
இந்த வாரம் மனதிற்கு இனிய சம்பவங்கள் நிகழும். வாக்கு ஸ்தானத்தில் உள்ள சுக்கிரன் எடுத்த காரியத்தில் வெற்றியை அளிப்பார். அரசு உத்தியோகஸ்தர்கள் பணி சம்பந்தமான விஷயங்களை மட்டும் கவனிப்பது நல்லது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்வி மற்றும் பணி வாய்ப்புகள் உருவாகும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அது உங்களுக்கு உற்சாகத்தைத் தரும். சில நல்ல விஷயங்களை செய்வீர்கள். எதிர்பாராத வகையில் சில விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவாகும். பெற்றோர்களின் ஆதரவு உண்டு. சகோதரியின் திருமணத்தை முன் நின்று நடத்துவீர்கள். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தவும். பெரியவர்களுடைய ஆசிர் வாதமும் குலதெய்வ வழிபாடும் உதவும்.
இதனையும் படியுங்கள் : நடக்கவிருக்கும் குரு, புதன் மற்றும் சூரிய சேர்க்கை இனி இந்த ராசிகளுக்கு ராஜயோகம் தான்!!