வார ராசிபலன் 20 ஜூலை 2025 முதல் 27 ஜூலை 2025 வரை!!
மேஷம் இந்த வாரம் செவ்வாய் நட்பு வீட்டில் இருப்பதால், சுப காரியங்கள் நடக்கவும், வீடு மனை வாங்கவும் மேற்கொண்ட முயற்சிகள் நிறைவேறும்.அரசு ஊழியர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்கள் செய்முறை தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெறுவார்கள். பிரயாணங்களின் மூலம் வருமா
மேஷம்
இந்த வாரம் செவ்வாய் நட்பு வீட்டில் இருப்பதால், சுப காரியங்கள் நடக்கவும், வீடு மனை வாங்கவும் மேற்கொண்ட முயற்சிகள் நிறைவேறும்.அரசு ஊழியர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்கள் செய்முறை தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெறுவார்கள். பிரயாணங்களின் மூலம் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. வசதியான வாழ்க்கைக்காக சில பொருட்களை வாங்குவீர்கள். வேலை செய்யும் இடத்தில் நெருக்கடிகள் நீங்கும். ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கும். சிலருக்கு உடல்நல பிரச்னைகள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்பட்டு நிறைவேறும்.
ரிஷபம்
இந்த வாரம் ராசியில் உள்ள ராசி அதிபதி மனதில் புதிய மாற்றங்களை உருவாக்கி உற்சாகமாக செயல்படச் செய்வார். தனியார் துறை ஊழியர்கள் அலுவலகத்தில் மதிப்பு பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொழிற்கல்வியில் பயிற்சி பெறுவர். மனச் சஞ்சலங்கள் அகன்று தெளிவு உண்டாகும். எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். வார்த்தைகளில் வீரியம் இருக்கும். சகோதர கருத்து வேறுபாடுகள் மறையும். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். பொருளாதாரம் முன்னேற்றமாக இருக்கும். பெற்றோர் வழியில் பிரச்னைகள் வரலாம். தொழிலில் சில எதிர்பாராத பிரச்னைகள் வரலாம் அதனால் கவனமாக இருக்கவும்.
மிதுனம்
இந்த வாரம் நிதானமாக பேசி நடந்து கொள்வதன் மூலம் கடந்த கால சிக்கல்கள் விலகும். தனியார், அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்கள் வெளிநாட்டு உயர் படிப்பு குறித்து ஆர்வமாக விசாரித்து அறிந்து கொள்வர். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். எதிர்பார்த்த ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். சகோதர உறவுகள் சற்று பாதிக்கும். சொத்து பிரச்னைகள் ஏற்படலாம். திடீர் முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். அவசரப்பட்டு எவருக்கும் வாக்குறுதி எதுவும் தர வேண்டாம். வெளியிடங்களுக்குச் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்கவும்.
கடகம்
இந்த வாரம் லாபஸ்தான சுக்கிரனால் பல நன்மைகள் வந்து சேரும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் ஏற்படும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு போட்டித் தேர்வுகளில் பங்கேற்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். முயற்சியும் பொறுமையும் மட்டுமே உங்களுக்கு வரும் பலன்களை அதிகரிக்கச் செய்யும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைக்கும். பொருளாதாரம் சுமாராக இருப்பதால் சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டு விடாதீர்கள். கணவன் மனைவி பிரச்னைகளை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். உடல் நலனில் கவனம் செலுத்தவும்.
சிம்மம்
இந்த வாரம் 12-ல் உள்ள ராசி அதிபதியால் திடீர் பயணங்களும், சுப செலவுகளும் ஏற்படும். அரசு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு புதிய பொறுப்புகள் கூடும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதிய விஷயங்களை ஆர்வத்தோடு கற்று கொள்வார்கள். விருந்து கேளிக்கை என்று கலந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் உண்டு. நட்பு பாராட்டி மகிழ்ச்சி அடைவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது நன்கு ஆலோசித்து எடுப்பது நல்லது. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அத்தியாவசிய பொருள்களை வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பீர்கள். சிலருக்கு எதிர்பாராத நல்ல செயல்கள் நடந்து உற்சாகத்தைத் தரும். சிலருக்கு தொடர் பிரயாணங்களில் இருக்க வாய்ப்புண்டு. கவனக்குறைவான பேச்சால் சிக்கல் ஏற்படும்.
கன்னி
இந்த வாரம் 11-ல் உள்ள வக்ர ராசியதிபதி செலவை ஏற்படுத்தினாலும் அதற்கேற்ற தன வரவையும் தருவார். தனியார் ஊழியர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வெளியூர் பயணம் உண்டு. தொழில் லாபகரமாக இருக்கும். பொருளாதாரப் பிரச்னைகள் தீரும். உங்கள் திட்டங்களை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். குடும்ப பிரச்னைகள் தலைதூக்கும் என்பதால் கவனமாக இருக்கவும். உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். பழைய கடன்கள் தீருவதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எதையும் இப்போது எடுக்க வேண்டாம்.
துலாம்
துலாம் ராசியினருக்கு இந்த வாரம் அஷ்டம ஸ்தான ராசியதிபதி எதிர்பார்த்த பல விஷயங்களை நடத்தி வைப்பார். தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்கள் சுப நிகழ்வுகளில் கலந்து கொள்வர். அரசாங்க காரியங்கள் சிறப்புடன் நிறைவேறும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். பொருளாதாரத்தில் நல்ல ஏற்றம் உண்டு. குழந்தைகள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். தொழில் பிரச்னைகள் தலைதூக்கும் அதனால் தொழிலில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வேலைக்குச் செல்லும் அன்பர்கள் வேறு வேலைக்கு முயற்சி செய்யவேண்டாம். அலுவலகப் பணிகளிலும் கவனமாக இருப்பது அவசியம்.
விருச்சிகம்
இந்த வாரம் 10-ம் இடத்தில் உள்ள ராசி அதிபதி காரிய வெற்றியை வாரி வழங்குவார். வங்கி, அரசுத்துறை பணியாளர்களுக்கு பதவி உயர்வு உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கணினி தொழில்நுட்ப படிப்பில் இணைவர். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். தொழில்கள் முன்னேற்றப் பாதையை நோக்கி நகரும். குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். திருமண சுபகாரியங்கள் நிறைவேறும் வாய்ப்பு அதிகம். எச்சரிக்கையுடன் ஒவ்வொரு விஷயத்தையும் கையாளவும். பேச்சிலும் செயலிலும் கவனத்தோடு இருக்கவும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. சிலருக்கு திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சுபச் செலவாகவே இருக்கும்.
தனுசு
இந்த வாரம் 7-ம் இடத்தில் உள்ள ராசியதிபதி நண்பர்கள், கூட்டாளிகள் மூலம் ஆதாயம் தருவார். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்பும், பணியிட மாற்றமும் உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டில் திறமை காட்டுவர். காய்ச்சல் வந்து சிகிச்சையால் நீங்கும். நண்பர்களுடன் மனம் மகிழும் வகையில் சிரித்து மகிழ்வீர்கள். எதிர்பாராத நன்மைகள் கிடைக்க வாய்ப்புண்டு. நீங்கள் எதிர்பார்த்த திட்டங்கள் சில நிறைவேற வாய்ப்புண்டு. வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். நண்பர்களால் உதவிகள் உண்டு. சக வியாபாரிகளிடையே இணக்கமான சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவி இருவரும் அனுசரணையாக நடந்து கொள்ளவும். சிலருக்கு வெளியூர்ப் பயணங்களால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும்.
மகரம்
இந்த வாரம் 3-ல் உள்ள வக்ர ராசியதிபதி நிதானமாக செயல்பட வேண்டுமென சொல்லித் தருவார். தனியார், அரசு துறை பணியாளர்கள் உயரதிகாரி ஆதரவால் ஆதாயம் அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொழில்முறை சர்டிபிகேட் படிப்பை மேற்கொள்வர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கணவன் மனைவி உறவுகள் அதிக உரசல் இன்றி இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான தருணங்கள் உண்டு. வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகள் பற்றிய சந்தோஷமான செய்தி கிடைக்கும். மேலதிகாரிகளால் மனக்கஷ்டத்துக்கு உள்ளாவீர்கள். கடைசி நேரத்தில் நிகழ்ச்சிகளில் மாற்றங்கள் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமுக உறவு ஏற்படும்.
கும்பம்
இந்த வாரம் 5-ல் உள்ள குரு ராசியை பார்ப்பதாலும் எதிர்பார்த்த தனவரவு வந்து சேரும். தனியார் ஊழியர்கள் பணியில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொறியியல், மருத்துவ உயர் கல்வி பற்றிய வழிகாட்டுதல் கிடைக்கப் பெறுவர். திட்டமிட்ட காரியம் நடந்தேறும். உறவினர்களோடு மகிழ்ச்சியான தருணங்கள் உண்டு. முயற்சியின் பேரில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். கலைப் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புண்டு. புதிய வேலை ஒப்பந்தங்களின் மூலமாக சிறப்பு பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. கணவன் மனைவி உறவுச் சிக்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.
மீனம்
இந்த வாரம் 6-ல் உள்ள செவ்வாய் வீடுகளில் மராமத்து பணிகளை செய்ய வைப்பார். தனியார் துறை ஊழியர்களுக்கு உயர் அதிகாரி ஆதரவு கிடைக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்று மனம் மகிழ்வர். சிலருக்கு எதிர்பாராத சன்மானம் விருதுகளும் கிடைக்க வாய்ப்புண்டு. எதையும் தைரியமாகவும் துணிச்சலோடும் எதிர்கொள்வீர்கள். சுபகாரியங்கள் செய்யும் பொழுது சிறிய தடைகள் ஏற்படலாம். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. பூர்விகப் பிரச்னைகளில் மனக்குழப்பம் ஏற்படும். நண்பர்களால் ஏமாற்றங்கள் வரலாம். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டியது மிக முக்கியம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.
இதனையும் படியுங்கள் : நடக்கவிருக்கும் குரு, புதன் மற்றும் சூரிய சேர்க்கை இனி இந்த ராசிகளுக்கு ராஜயோகம் தான்!!