வார ராசிபலன் – 27 ஜூலை 2025 முதல் 02 ஜூலை 2025 வரை!!

மேஷம் இந்த வாரம் மேஷம் ராசியினருக்கு ராகு துணையாக செயல்படுவார்.அரசாங்க உத்தியோகஸ்தர்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்த விஷயம் நடக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறுவர். வெற்றி மீது வெற்றி வந்து சேரும். தொழிலில் பின்னடைவான நிலைமை மாறும். உயரதிகாரிகள் உதவ

By ·

மேஷம்

 

இந்த வாரம் மேஷம் ராசியினருக்கு ராகு துணையாக செயல்படுவார்.அரசாங்க உத்தியோகஸ்தர்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்த விஷயம் நடக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறுவர். வெற்றி மீது வெற்றி வந்து சேரும். தொழிலில் பின்னடைவான நிலைமை மாறும். உயரதிகாரிகள் உதவுவார்கள். தொழிலில் முன்னேற்றம் உண்டு. கஷ்டமான காரியங்கள் எளிமையாகும். உடன்பிறந்தோர் ஆதரவு கிடைக்கும். புதிய வீடு வாங்கும் முயற்சி வெற்றி பெறும். சிலர் மிகுந்த எச்சரிக்கையோடு தொழிலை அணுக வேண்டும். பிறரை நம்ப வேண்டாம். பிறரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு நஷ்டம் அடைய வேண்டாம். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

ரிஷபம்

இந்த வாரம் சுப கிரகங்கள் தன வரவை ஏற்படுத்துவார்கள். அரசு, தனியார் உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்கள் வெளிநாட்டு பணி வாய்ப்பு குறித்த தகவல் கிடைக்கப் பெறுவர். பொருளாதாரப் பிரச்னைகள் குறையும். தடைப்பட்ட சுபகாரியங்கள் நடைபெறும். இடம், வீடு வாங்குவீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் இனிமையாக நடைபெறும். முன்னேற்றத்தில் இருந்த தடைகள் அகலும். குடும்பத்தில் சுபச் செலவுகள் ஏற்படும். பெற்றோர் வழியில் பிரச்னைகள் உண்டு. பூர்வீகச் சொத்தில் மனக்கஷ்டங்கள் ஏற்படலாம். பிறர் விஷயத்தில் எக்காரணத்தை முன்னிட்டும் தலையிட வேண்டாம். அவசரப்பட்டு எவருக்கும் வாக்குறுதி எதுவும் தரவேண்டாம். வெளியிடங்களுக்குச் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்கவும்.

மிதுனம் 

இந்த வாரம் மிதுனம் ராசியினருக்கு ராசியில் உள்ள சுபகிரகங்களால் எதிர்பார்த்த பண வரவு உண்டு. தனியார் உத்தியோகஸ்தர்கள் பணியிட மாற்றம், பதவி உயர்வு பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதிய கணினி மொழி கற்றுக் கொள்வர். சுப விரயங்கள் செய்வீர்கள். எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்ற வைராக்கியமும் ஏற்படும். திருமண வயதில் உள்ள அன்பர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். வார்த்தைகளில் மிகுந்த கவனம் தேவை. எடுத்த காரியங்கள் தாமதமாகும். மனதில் குழப்பமும் அமைதியின்மையும் நிலவும். முக்கிய முடிவுகள் எடுக்கும் போது நன்கு ஆலோசித்து எடுப்பது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். 

கடகம் 

இந்த வாரம் கடகம் ராசியினருக்கு சுக்கிரன் வீட்டின் உள் அலங்கார பணிகளை செய்ய வைப்பார். அரசு உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனமாக செயல்பட வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மேற்படிப்புக்கான வழிகாட்டுதல் கிடைக்க பெறுவர். உத்தியோகம், தொழில் முன்னேற்றம் போன்ற முயற்சிகள் பலிக்கும் வாய்ப்பு உண்டு. புதிய வாகனம் வாங்குவீர்கள். இந்த வாரம் தேவையற்ற செலவுகள் வந்து கொண்டே இருக்கும். பொறுமையுடனும் கவனத்துடனும் முயற்சிகளைச் செய்யவும். சிலருக்கு நீண்ட தூர இடமாற்றங்கள் உண்டு. வேலைக்குச் செல்லும் அன்பர்கள் வேறு வேலைக்கு முயற்சி செய்யவேண்டாம். அலுவலகப் பணிகளிலும் கவனமாக இருப்பது அவசியம். உடல் நலனில் கவனம் செலுத்தவும். 

சிம்மம் 

இந்த வாரம் சிம்மம் ராசியினருக்கு லாப ஸ்தானத்தில் உள்ள சுபகிரகங்களால் பொருளாதாரம் மேம்படும். தனியார், அரசு உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் மதிப்பு பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள தயாராவர். தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றி பெறும். வருமானம் அதிகரிக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டில் இருக்கும் பிள்ளையின் மூலம் நல்ல செய்தி உண்டு. கொடுக்கல் வாங்கல்களில் ஏமாற்றங்கள் ஏற்படும். எதிர்பார்ப்புகளில் தடை உண்டு. குடும்ப பிரச்னைகளைக் கையாள்வதில் கவனம் தேவை. பழைய கடன்கள் தீருவதற்கு வாய்ப்பு உண்டு.

கன்னி 

இந்த வாரம் கன்னி ராசியினருக்கு சுக்கிரன் புதிய தொடர்புகளால் லாபம் தருவார். அரசு துறை உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனமாக இருப்பது நல்லது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொழில்நுட்ப கல்வியில் ஈடுபடுவர். அரசாங்க காரியங்களில் அனுகூலங்கள் உண்டு. போட்டித் தேர்வுகளில் வெற்றி எதிர்பார்க்கலாம். ஒரு சிலருக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கு சாத்தியமுண்டு. ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மனதில் அமைதியும் நிம்மதியும் இருக்கும். சகோதரர்கள் உறவு பாதிக்கலாம். சொத்து பிரச்னைகள் ஏற்படலாம். தேவையற்ற கோபம் வரும் என்பதால் பொறுமையும் அமைதியும் காக்கவும். வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எதையும் இப்போது எடுக்கவேண்டாம்.

துலாம் 

துலாம் ராசியினர் இவ்வாரம் பாக்கியஸ்தானத்தில் குருவோடு சேர்வதால் குடும்ப சுபநிகழ்ச்சிகளுக்கு அச்சாரம் ஏற்படுத்துவார். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் பணியிட பொறுப்புகளால், மன அழுத்தம் அதிகரிக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வுகளில் வெற்றியும், உதவித்தொகையும் கிடைக்க பெறுவர். பொருளாதார நிலை உயரும். செய்கின்ற காரியங்களில் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்வார்கள். தெய்வ அனுகூலம் உண்டு. வீடு ஒப்பந்தங்கள் செய்வதில் கவனம் தேவை. பூர்வீகச் சொத்து பிரச்னைகள் தலை தூக்கலாம். கணவன் – மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.

விருச்சிகம் 

இந்த வாரம் அஷ்டமத்தில் உள்ள சுப கிரகங்கள் வெளிநாட்டுத் தொடர்புகளில் லாபம் தருவர். உத்தியோகஸ்தர்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். சக வியாபாரிகளிடையே இணக்கமான சூழ்நிலை உண்டாகும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மாதாந்திர தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவர். புதிய முயற்சிகளை சற்று ஜாக்கிரதையோடு தொடரலாம். சில தடைகளோடு சுபகாரியங்கள் நிறைவேறும் வாய்ப்புண்டு. தாயாரின் உடல் நிலையில் கவனம் தேவை. தொழில் தடைகள் ஏற்படும். உத்தியோகத்தில் சிறுசிறு இடையூறுகள் ஏற்பட்டு உற்சாகம் குறையும். சிலருக்கு வெளியூர்ப் பயணங்களால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும்.

தனுசு 

இந்த வாரம் தொழில், உத்தியோகம் ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி, விளையாட்டில் நற்பெயர் பெறுவர். சற்று ஜாக்கிரதையோடு எல்லா விஷயங்களையும் அணுக வேண்டும். வேலையில்லாதவர்களுக்கு புது வேலை கிடைக்கும். வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.  உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். வேறு வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் அதற்கான முயற்சிகளில் இப்போது ஈடுபடலாம். சில புதிய வாய்ப்புகள் உங்களை அணுகும். முக்கியஸ்தர்களுடன் நட்பு ஏற்படும். வார்த்தைகளிலும் செயல்களிலும் கூடுதல் கவனம் தேவை. உறவினர்களோடு பகை வேண்டாம். 

மகரம் 

இந்த வாரம் அஷ்டம ஸ்தான அசுப கிரக சஞ்சாரம் காரணமாக நிதானமாக செயல்பட வேண்டும். உத்தியோகஸ்தர்கள் உரிய பணியிட அங்கீகாரம் பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதிய தொழில்நுட்ப பயிற்சி பெற வாய்ப்பு உருவாகும். வேலை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். விரும்பிய இடமாற்றம் ஊர்மாற்றம் கிடைக்கும். பணப் பிரச்னைகள் இருக்காது. பணியின் காரணமாக பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் பேசும் போது பொறுமை தேவை. சிலருக்கு மனக்குழப்பங்கள் ஏற்படும். காரணமில்லாத கவலை மனதை அரித்துக் கொண்டே இருக்கும். உங்கள் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தவும்.

கும்பம் 

இந்த வாரம் சுப கிரகங்கள் மன மகிழ்ச்சியை அதிகரிப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயர்கல்விக்கான ஆலோசனைகளை பெறுவர். அலுவலகத்தில் உற்சாகமாக உங்கள் பணிகளைச் செய்வீர்கள். இந்த வாரம் எதுவாக இருந்தாலும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விடும். நீங்கள் என்னதான் முயற்சி செய்தாலும் அவைகள் தடையும் சவால்களும் உள்ளதாகவே இருக்கும். எதுவும் எளிதாக கிடைத்து விடாது. முயற்சி ஒன்றே இப்பொழுது தேவை. அலுவலகத்தில் பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் தேவை. பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரும்.

மீனம் 

இந்த வாரம் அமைதியாக இருந்து காரியம் சாதிக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனமாக இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பிரயாணங்களால் மகிழ்ச்சியாக இருப்பர். பக்தியும் தெய்வ தரிசனமும் அதிகரிக்கும். செலவுகளில் மிக அதிக கவனம் தேவை. வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குடும்ப உறவுகள் பராமரிப்பதில் கவனம் தேவை. கடுமையான பேச்சுக்களால் கணவன் மனைவிஉறவுச் சிக்கல்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கொஞ்சம் அனுசரித்து செல்லவும். குழந்தைகளுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை.

இதனையும் படியுங்கள் : கடகத்தில் குரு பெயர்ச்சி 2025

Recipes AMP · Quick view
View full