வார ராசிபலன் – 13 ஜூலை 2025 முதல் 19 ஜூலை 2025 வரை!!
மேஷம் இந்த வாரம் 2-ல் சுக்கிரன் அமர்ந்து தனவரவை மேம்படுத்துகிறார். அரசு உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் மறைமுக எதிர்ப்பை சந்திக்க வேண்டி இருக்கும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த மகிழ்ச்சியான விஷயங்கள் நடக்கும். குடும்ப உறவுகள் சுமுகமாக இருக்கும். நண்பர
மேஷம்
இந்த வாரம் 2-ல் சுக்கிரன் அமர்ந்து தனவரவை மேம்படுத்துகிறார். அரசு உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் மறைமுக எதிர்ப்பை சந்திக்க வேண்டி இருக்கும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த மகிழ்ச்சியான விஷயங்கள் நடக்கும். குடும்ப உறவுகள் சுமுகமாக இருக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். கூட்டுத் தொழில் சிறக்கும். நீங்கள் விரும்பிய காரியங்கள் நிறைவேறும். ஆபரணப் பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. வருமானம் சிக்கல் இல்லாமல் இருக்கும். கொடுக்கல் வாங்கல்களில் பிரச்னை இருக்காது. மருத்துவ பிரச்னை உள்ளவர்களுக்கு நோயின் உபாதை சற்று தீவிரமாகும். அலட்சியம் வேண்டாம்.
ரிஷபம்
இந்த வாரம் ரிஷபம் ராசியினருக்கு ராசியில் உள்ள சுக்கிரனால் பல நல்ல விஷயங்கள் நடக்கும். தனியார்துறை உத்தியோகஸ்தர்கள் புதிய பணியிட மாற்றம் பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மாதாந்திர தேர்வைக்கூட கவனமாக எழுத வேண்டும். நிதி சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இருக்காது. பண வரவுகளும் திருப்தியாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் பிரச்னைகள் சுமுகமாகி மேலதிகாரிகளின் உற்சாகமும் ஆதரவும் உதவிகரமான நிலையில் இருக்கும். பதவி உயர்வு கிடைப்பதற்கும் சம்பள உயர்வு கிடைப்பதற்கும் சாதகமான நேரம். சிலருக்கு அலைச்சல்கள் அதிகரித்து உடல் நலம் கெடுவதற்கு வாய்ப்பு உண்டு. குறிப்பாக உணவில் கவனம் தேவை.
மிதுனம்
மிதுனம் ராசியினருக்கு தன ஸ்தானத்தில் உள்ள ராசி அதிபதியால் இந்த வாரம் மகிழ்ச்சி நிலவும். தனியார்துறை உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வு பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடந்த கால நல்ல விஷயங்களின் பலனை பெறுவார்கள். பொருளாதாரம் லாபகரமாக இருக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். மேற்படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் வெற்றி கரமாகும். எதையும் தைரியத்தோடு செய்யும் ஆற்றல் உண்டு. எதிர்பார்த்த பதவி உயர்வுக்கு வாய்ப்பு உண்டு. தேவையில்லாமல் பிறர் விஷயங்களில் தலையிட்டுப் பகையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். பேச்சில் கவனமாக இருக்கவும். வாதங்களில் ஈடுபடவேண்டாம்.
கடகம்
இந்த வாரம் லாப ஸ்தான சுக்கிரன் பல மகிழ்ச்சியான விஷயங்களை நடத்தி வைப்பார். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் மனதில் எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் விரைவில் கைவந்து சேரும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் இப்பொழுதே திட்டமிட்டு படித்தால் இறுதி தேர்வில் சிறப்பான தேர்ச்சி பெறலாம். வண்டி வாகன யோகம் உண்டு. திருமணம் சீமந்தம் முதலிய சுபகாரிய நிகழ்வுகளை முன்னெடுப்பீர்கள். பயணங்கள் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத தடங்கல்கள் வருவதற்கு வாய்ப்புண்டு. கணவன் மனைவி ஒற்றுமைக் குறைபாடு ஏற்பட வாய்ப்பு அதிகம். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
சிம்மம்
இந்த வாரம் லாப ஸ்தான குரு-சூரியன் காரணமாக புதிய நற்செய்திகளை பெறுவர். தனியார் உத்தியோகஸ்தர்கள் வேறு வேலை மாற முயற்சி செய்யும் எண்ணத்தை சிறிது காலம் தள்ளி வைக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதிய விஷயங்களை கற்று அதன் மூலம் பாடங்களில் நல்ல மதிப்பெண் பெறுவர். வருமானம் திருப்திகரமாக இருக்கும். சேமிப்புக்கும் வழி உண்டு. கலைஞர்களுக்கு நல் வாய்ப்புகள் கிடைக்கும். திருமணம் முதலிய சுபமுயற்சிகளுக்கு அனுகூலமான காலம். செலவுகள் சற்று அதிகரிக்கும். நண்பர்களுடன் மனக்கசப்புகளும் சங்கடங்களும் நேரலாம். கணவனுக்கு உடல் நலக்குறைவு ஏற்படலாம்.
கன்னி
இந்த வாரம் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்துள்ள சுக்கிரனால் புதிய உற்சாகம் ஏற்படும். தனியார், அரசு உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகள் ஆதரவை பெற்று மகிழ்ச்சி அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தனித்திறன்களை வெளிப்படுத்தி பாராட்டுப் பெறுவர். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் குறைந்து மனமகிழ்ச்சி அதிகரிக்கும். இல்லத்தில் இன்பம் ஓங்கும். அரசாங்க உதவிகள் விண்ணப்பித்தவர்களுக்கு சாதகமான அமைப்புண்டு. சிலருக்கு மனதில் குழப்பம் ஏற்படும். தைரியக் குறைவு வரும். இதை இப்படி செய்திருக்கக் கூடாதோ என்று நினைப்பீர்கள். மருத்துவச் செலவுகள் சற்று அதிகரிக்கும். உறவினர்களோடு கருத்து முரண்பாடுகள் ஏற்படும்.
துலாம்
இந்த வாரம் குரு, செவ்வாய் ஆகியவற்றின் பலம் காரணமாக திட்டமிட்ட வெற்றியை பெறுவர். அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கு பணியிட இறுக்கம் அகன்று, சுமுக போக்கு நிலவும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வியிலும், மற்ற செயல்பாடுகளிலும் வெற்றி உண்டு. தொட்டது துலங்கும். வெற்றிப்பாதை விளங்கும். வழக்குகள் வெற்றி பெறும். கூட்டுறவு முயற்சிகள் பலன் தரும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். வருமானம் உயரும். சுபகாரிய முயற்சிகள் பலம் தரும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. தொழில் போட்டிகள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அதிக கவனம் தேவை.
விருச்சிகம்
விருச்சிகம் ராசியினருக்கு இந்த வாரம் 7-ல் உள்ள சுக்கிரனால் எதிர்பாரா நன்மைகள் உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வியிலும், இதர எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டிகளிலும் திறமையாக செயல்படுவர். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த நன்மைகளை பெற்று மகிழ்வர். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. எதிர்காலத்தைக் குறித்த முயற்சிகள் பலனளிக்கும். நண்பர்களோடு இணையும் முயற்சிகள் வெற்றி பெறும். கொடுத்த பணம், பொருள் முதலியவை அதிக முயற்சி இருந்தால்தான் கிடைக்கும். அவ்வப்பொழுது ஆரோக்கியக் குறைவுகள் ஏற்படலாம்.
தனுசு
தனுசு ராசியினருக்கு இந்த வாரம் 3-மிட ராகு, 7-மிட குரு ஆகியோரால் எதிர்பார்த்த பொருளாதார வரவு உண்டு. அரசாங்க உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் பணி சம்பந்தமான விஷயங்களை மட்டுமே பேச வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வித் தடைகளை சந்தித்தாலும், இதர திறன்களை சிறப்பாக வெளிப்படுத்துவர். குடும்ப சூழ்நிலை சாதகமாக இருக்கும். நீங்கள் சொல்வதை குடும்பத்தில் உள்ளவர்கள் கேட்பார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் பலனளிக்கும். பொருளாதாரம் வந்தாலும் செலவுகளும் கட்டுக்கடங்காமல் இருக்கும். ஒரு காரியத்திற்கு பலமுறை அலைய வேண்டி இருக்கும்.
மகரம்
இந்த வாரம் பஞ்சம ஸ்தான சுக்கிரன், சப்தம ஸ்தான புதன் ஆகியோரால் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். தனியார் உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் ஏற்படும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் எதிர்கால படிப்பு குறித்த வழிகாட்டுதல் பெறுவர். வருமானம் நன்றாக இருக்கும். பதவி உயர்வு கிடைப்பதற்கும் சம்பள உயர்வு கிடைப்பதற்கும் சாதகமான நேரம். குடும்ப உறவுகள் சுமுகமாக இருக்க வாய்ப்புண்டு. திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சில சமயம் நீங்கள் பேசுவது சங்கடங்கள் ஏற்படும் என்பதால், கவனித்துப் பேசவும். தேவையில்லாமல் பேசுவதைத் தவிர்த்து விடவும். அலைச்சல்கள் அதிகரிக்கும்.
கும்பம்
கும்பம் ராசியினருக்கு இந்த வாரம் சுக ஸ்தான சுக்கிரன், பஞ்சம ஸ்தான குரு ஆகியோர் திடீர் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் அமைப்பில் இருக்கிறார்கள். தனியார் உத்தியோகஸ்தர்கள் பணியில் வழக்கத்தை விட கவனமாக இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொறுப்புடன் அனைவரும் பாராட்டும் காரியங்களில் ஈடுபடுவார்கள். பொருளாதாரப் பிரச்னைகள் வராது. கவனத்துடன் செய்யும் வேலைகள் சிக்கலைத்தராது. எந்தப் பிரச்னைகளையும் சமாளித்து விடும் ஆற்றல் கிடைக்கும். ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். கையில் இருக்கும் பணம் பத்திரம். யாருக்கும் வாக்குறுதி தரவேண்டாம். கொடுக்கல் வாங்கல்களில் கவனம் தேவை.
மீனம்
மீனம் ராசியினருக்கு இவ்வாரம் 5-ல் உள்ள புதன் எந்த சிக்கலையும் சுமுகமாக தீர்க்கும் சிந்தனை தருவார். அரசு உத்தியோகஸ்தர்கள் கூடுதல் பணிச்சுமை மூலம் மன உளைச்சல் அடைவர். புதிய திட்டங்களில் முதலீடு செய்யலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்கள் விஷயத்தில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற வாய்ப்புண்டு. சுபகாரிய முயற்சிகள் முடிவாகலாம். பூர்வீகப் பிரச்னைகள் முடிவுக்கு வரலாம். உத்தியோக வாய்ப்புகள் கைகூடி வரும். நண்பர்கள் பகைவர்களாக மாறும் வாய்ப்பு அதிகம். மேலதிகாரிகளோடு அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்.
இதனையும் படியுங்கள் : 2025ல் சிவனின் அருளைப் பெற போகும் ராசிகள்