வார ராசிபலன் 01 ஜூன் 2025 முதல் 07 ஜூன் 2025 வரை!!
மேஷம் இந்த வாரம் நன்மைகள் தேடி வரும்.ராசியில் உள்ள சுக்கிரன் நல்ல தொடர்புகளை ஏற்படுத்தித் தருவார். தனியார் மற்றும் அரசு துறை உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் மதிப்பு பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயர்கல்வி குறித்த செய்திகளை தேடிச்சென்று அறிந்து கொள்வார்கள். திருமண வயதினருக்கு வர
மேஷம்
இந்த வாரம் நன்மைகள் தேடி வரும்.ராசியில் உள்ள சுக்கிரன் நல்ல தொடர்புகளை ஏற்படுத்தித் தருவார். தனியார் மற்றும் அரசு துறை உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் மதிப்பு பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயர்கல்வி குறித்த செய்திகளை தேடிச்சென்று அறிந்து கொள்வார்கள். திருமண வயதினருக்கு வரன் வரும். தம்பதிக்குள் இணக்கம் உண்டாகும். நட்புகளால் லாபம் ஏற்படும். அரசியல் வாதிகளுக்கு பதவி வரும். இதுவரை இருந்த நெருக்கடி நீங்கும். பொருளாதார நிலை உயரும். வேலைக்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும்.
ரிஷபம்
இந்த வாரம் வண்டி வாகன, ஆபரணச் சேர்க்கை உண்டு. குரு மற்றும் சனி ஆகிய இரண்டு முக்கிய கிரகங்கள் நல்ல நிலையில் உள்ளன. தனியார் உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் மூலம் எதிர்பார்த்த ஆதாயங்களை பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு போட்டித் தேர்வுகளை எழுதும் தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வர். உழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். குழந்தைக்காக ஏங்கியவர்களின் ஏக்கம் தீரும். வருமானத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உடல்நிலையில் தோன்றிய பாதிப்பு மருத்துவத்தால் குணமாகும். வழக்குகள் முடிவிற்கு வரும்.
மிதுனம்
இந்த வாரம் பொதுக் காரியங்களில் ஈடுபட்டு பெயர் பெறுவீர்கள். ராசியில் உள்ள ராசி அதிபதியும், குருவும் மனதில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்துவார்கள். தனியார் உத்தியோகஸ்தர்கள் நல்ல மாற்றங்களை சந்திப்பார்கள். கல்லூரி மாணவர்கள் திட்டமிட்டு அரசாங்க போட்டித் தேர்வுகளில் பங்கு பெறுவர். எடுக்கும் வேலை வெற்றியாகும். தடைபட்ட செயல் நடக்கும். நினைத்தவற்றை சாதித்து முடிப்பீர். எதிர்பார்த்த பணம் வரும். செய்துவரும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் முயற்சிகள் வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும்.
கடகம்
இந்த வாரம் புதிய தொடர்புகளை பெறுவார்கள். தனம் மற்றும் அஷ்டம ஸ்தானத்தில் ராகு கேது சம்பந்தப்படுவதால் எந்த ஒரு விஷயத்திலும் நிதானமாக செயல்பட வேண்டும். அரசு உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்திருந்த ஆதாயங்களை பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்களிடம் ஆலோசனை செய்து மேல்படிப்பு குறித்து தீர்மானிப்பது நல்லது. புதிய வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். குடும்ப நலனில் அக்கறை கொள்வது அவசியம். உடல்நிலை சீராகும். வம்பு வழக்கு மாறும். லாப ஸ்தான சூரியனால் வரவு அதிகரிக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். அரசுவழி முயற்சி லாபமாகும்.
சிம்மம்
இந்த வாரம் எதிர்காலத்திற்கு தேவையான பல திட்டங்களை செயல்படுத்துவீர்கள். அஷ்டம ஸ்தானத்தில் சனி இருந்தாலும், லாப ஸ்தானத்தில் உள்ள குரு உங்களை உயர்த்தி மகிழ்வார். தனியார் உத்தியோகஸ்தர்கள் பணியிட சிக்கல் விலகி பெருமூச்சு விடுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொழில்நுட்ப விஷயங்களை தேடிச்சென்று கற்பார்கள். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். தெய்வ அனுகூலம் உண்டாகும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். புதிய முயற்சி வெற்றி அளிக்கும். நெருக்கடி நீங்கும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள்.
கன்னி
இந்த வாரம் தெய்வ வழிபாடுகளில் ஈடுபட்டு நிம்மதி பெறுவீர்கள். அஷ்டம ஸ்தானத்தில் உள்ள சுக்கிரன் திடீர் அதிர்ஷ்டங்களை உருவாக்குவார். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரி மூலம் நன்மைகள் கிடைக்கப் பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மனதில் நினைத்த பாடப்பிரிவுகளை தேர்வு செய்து அதில் இணைவார்கள். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். புதிய தொழில் தொடங்குவதற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உடல்நிலையில் உள்ள பாதிப்பு விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும்.
துலாம்
இந்த வாரம் உற்றார், உறவினர்களால் மனதில் உற்சாகம் ஏற்படும். ஐந்தாம் இடத்தில் உள்ள குரு ராசியை பார்ப்பதால் நன்மைகள் வீடு தேடி வரும். அரசு துறை உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வை பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உற்சாகமாக சுற்றுலா சென்று வருவார்கள். உத்தியோகம் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி தொல்லை விலகும். இதுவரை இருந்த நெருக்கடி விலகும். வருமானம் அதிகரிக்கும். தடைபட்ட வேலை நடக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வர வேண்டிய பணம் வரும். குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும். தொழிலில் முன்னேற்றம் அடையும். எதிர்பார்ப்பை பூர்த்தியாக்கும்.
விருச்சிகம்
இந்த வாரம் புதிய நம்பிக்கைகள் ஏற்படும். ராசி அதிபதி பத்தாம் இடத்தில் நட்பு ரீதியாக சஞ்சரிப்பது சமூகத்தில் புதிய அந்தஸ்தை பெற்றுத்தரும். காதல் உறவுகளில் தவறான புரிதல்களைத் தவிர்க்கவும். தனியார் மற்றும் அரசு துறை உத்தியோகஸ்தர்கள் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிகளை பெறுவார்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். பொருளாதார நெருக்கடி நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும்.
தனுசு
இந்த வாரம் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவர். ஏழாம் இடத்தில் உள்ள குரு மற்றும் ஐந்தாம் இடத்தில் உள்ள சுக்கிரன் ஆகிய சுப கிரகங்களால் தடைபட்ட வெற்றி கைவந்து சேரும். அரசு மற்றும் தனியார் உத்தியோகஸ்தர்கள் பணி உயர்வு பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மேல் படிப்பு குறித்த தீர்மானமான முடிவை எடுப்பார்கள். புதிய முயற்சி வெற்றியாகும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பொன் பொருள் சேரும். வெள்ளி, சனி கிழமைகளில் எதிலும் கவனம் தேவை. பணியாளர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும்.
மகரம்
இந்த வாரம் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரன் ஆடை ஆபரண சேர்க்கையை ஏற்படுத்துவார். தனியார் துறை உத்தியோகஸ்தர்கள் திறமையாக செயல்பட்டு நிர்வாகத்தில் மதிப்பு பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதிய விளையாட்டுகளை கற்றுக் கொள்வதில் உற்சாகமாக இருப்பார்கள். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் நிலையில் சிறு சிறு பாதிப்பு வரும். திங்கள் கிழமை செயல்களில் கவனம் தேவை. சிலருக்கு மன உளைச்சல் ஏற்படும். இக்காலத்தில் விவேகமாக செயல்படுவது நல்லது. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
கும்பம்
இந்த வாரம் மனதில் உறுதியுள்ள மனிதர்களாக உலா வருவார்கள். ராசியில் உள்ள ராகுவை குரு பார்ப்பதால் தடைபட்ட காரியங்கள் நல்ல விதமாக முடியும். அரசு உத்தியோகஸ்தர்கள் அனைத்துப் பணிகளிலும் நேரடியாக இறங்கி செயல்பட வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயர் கல்வி குறித்த தகவல்களை பெற வெளியூர் பிரயாணம் செல்வார்கள். செயல்களில் நிதானம் தேவை. புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை அவசியம். தம்பதிகளுக்குள் அனுசரணை தேவை. புதன்கிழமை அனைத்திலும் நிதானம் தேவை. சிலருக்கு இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் நிலை மாறும். தடைபட்ட வேலை நடக்கும். எடுக்கும் வேலை வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும்.
மீனம்
இந்த வாரம் மகிழ்வுடன் இருப்பீர்கள். தன ஸ்தானத்தில் உள்ள சுக்கிரன் குடும்பத்தில் மன மகிழ்ச்சியை ஏற்படுத்துவார். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் தொடர்பால் நன்மை பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டுகளில் வென்று கல்வி நிறுவனங்களுக்கு புகழ் சேர்ப்பர். உத்தியோகம் தொழிலில் இருந்த நெருக்கடியை நீக்கும். முடிவிற்கு வராத வேலை எளிதாக முடியும். புதிய தொழில் தொடங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி விலகும். வீண் செலவு குறையும். புதிய வீடு வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும்.
இதனையும் படியுங்கள் : 2025ல் 12 ராசிகளும் செய்ய வேண்டிய பரிகாரங்கள்