Advertisement
சைவம்

கல்யாண வீட்டு ஸ்டைல் ருசியான காரக்குழம்பு, அட்டகாசமான சுவையில் இப்படி ஒரு தரம் செஞ்சு பாருங்கள்!

Advertisement

கல்யாண வீட்டு  கார குழம்புக்கு அதிகமான ரசிகர்கள் உண்டு. கல்யாண வீட்டு பந்திகளில் அதிகமா எல்லாரும் விரும்பி சாப்பிடுவது கல்யாண வீட்டுக்காரர் குழம்பு தான். இந்த கல்யாண வீட்டுக்கு காரக்குழம்பு ரொம்ப அருமையான சுவையில் இருக்கும் கல்யாண வீட்டு சுவையில கார குழம்பு எல்லாருமே வீட்ல வைக்கணும் ரொம்பவே ஆசைப்படுவோம். அப்படியே கல்யாண வீட்டுகளில் எப்படி இந்த கார குழம்பு வைக்கிறது அப்படின்னு இந்த பதிவுல பார்க்க இருக்கிறோம்.

கல்யாண வீடுகளில் பந்திகளில் பரிமாறப்படுகின்ற சாம்பார், ரசங்களை விட கார குழம்பு எப்பவுமே எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். அந்த கார குழம்புல இருக்கிற  சுவை வேற எந்த குழம்புலையுமே இருக்காது. இப்படி சுவையான இந்த கார குழம்பு நாம் வீட்ல செய்து கொடுக்கும்போது எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். பெரியவர்களுக்கு இன்னும் அதிகமாகவே பிடிக்கும் ஏனென்றால் அவங்கதான் கல்யாண பந்திகளோட கார குழம்புகளுக்கு ரொம்பவே ஆசைப்படறவங்களா இருப்பாங்க.

Advertisement

கல்யாண வீடுகளில் வைக்கிற இந்த காரக்குழம்புகள்ல வத்தல் காய்கறி அப்படின்னு வெரைட்டியா எல்லாத்தையும் கலந்து போட்டு வைக்கும் போது ரொம்ப பெரிய ருசியா இருக்கும். கார குழம்பு அப்படிங்கிறது ரொம்பவே சுலபமா வீட்ல செய்யக்கூடிய ஒரு குழம்பு தான் இருந்தாலும் அதற்கான சில மசாலாக்கள் மட்டும் எப்படி அரைக்கிறோம் அப்படிங்கிறதுல தான் கல்யாண வீடுகளில் வைக்கிற மாதிரியான சுவை கிடைக்கும். கல்யாண வீட்டு கார குழம்பு மாதிரி எப்படி கார குழம்பு வைக்க போறோம் அப்படிங்கறது பார்க்க இருக்கோம். வாங்க கல்யாண வீடுகள்ல வைக்கிற மாதிரியான சுவையான காரக்குழம்பு எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

காரக்குழம்பு | Kaarakulambu Recipe In Tamil

Print Recipe
கல்யாண வீடுகளில் வைக்கிற இந்த காரக்குழம்புகள்ல வத்தல் காய்கறி அப்படின்னு வெரைட்டியா எல்லாத்தையும்கலந்து போட்டு வைக்கும் போது ரொம்ப பெரிய ருசியா இருக்கும். கார குழம்பு அப்படிங்கிறதுரொம்பவே சுலபமா வீட்ல செய்யக்கூடிய ஒரு குழம்பு தான் இருந்தாலும் அதற்கான சில மசாலாக்கள்மட்டும் எப்படி அரைக்கிறோம் அப்படிங்கிறதுல தான் கல்யாண
Advertisement
வீடுகளில் வைக்கிற மாதிரியானசுவை கிடைக்கும். கல்யாண வீட்டு கார குழம்பு மாதிரி எப்படி கார குழம்பு வைக்க போறோம்அப்படிங்கறது பார்க்க இருக்கோம். வாங்க கல்யாண வீடுகள்ல வைக்கிற மாதிரியான சுவையானகாரக்குழம்பு எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Kaarakulambu
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 49

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் மொச்சைபயிறு
  • 4 கத்திரிக்காய்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் வெந்தயம்
  • 1 ஸ்பூன் வடகம்
  • 10 கொத்தவரங்காய் வற்றல்
  • 2 ஸ்பூன் சுண்டைக்காய் வற்றல்
  • 20 சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • புளி எலுமிச்சைஅளவு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

மசாலா அரைக்க

  • 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 ஸ்பூன் தனியா விதைகள்
  • 1 ஸ்பூன் மிளகு
  • 10 சின்ன வெங்காயம்
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • 1/2 கப் தேங்காய்
  • 4 காய்ந்த மிளகாய்

Instructions

  • முதலில் மொச்சைபயிரை ஊற வைத்து ஒரு குக்கரில் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில்ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, தனியா சேர்த்து வதக்கவும்.
  • பிறகு அதில் சின்ன வெங்காயம், மிளகு, சீரகம் , தேங்காய் ,காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.வதக்கி வைத்துள்ள பொருட்களை ஆற வைத்து அவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக விழுதாகஅரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கத்தரிக்காய்களை காம்பை நீக்காமல்நான்காக கீறி வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு அதே எண்ணெயில் கடுகு, வெந்தயம், வடகம் , கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.பின் கொத்தவரங்காய் வற்றல் , சுண்டைக்காய் வற்றல் சேர்த்துபொரிக்கவும்.
  • வற்றல் பொரிந்த பின் அதில் சின்ன வெங்காயம், தக்காளி,  சேர்த்துநன்றாக வதக்கிக் கொள்ளவும். அதில் மிளகாய்தூள், கரைத்து வைத்துள்ள புளி சேர்த்து கலந்துவிட்டு குழம்பை கொதிக்க விடவும்.
  • பிறகு அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்றாக வதக்கி விடவும்.குழம்பிற்கு தேவையான அளவுதண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். குழம்பு நன்றாக கொதித்த பிறகு அதில் வதுக்கி வைத்துள்ளகத்தரிக்காய், வேக வைத்து எடுத்துள்ள மொச்சை பயிறு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  • நன்றாக கொதிவந்த பிறகு சூடாக சாதத்துடன் பரிமாறினால் சுவையான கல்யாண வீட்டு சுவையில் காரக்குழம்புதயார்

Nutrition

Serving: 400g | Calories: 49kcal | Carbohydrates: 3.6g | Protein: 7.8g | Fat: 0.1g | Sodium: 39mg | Potassium: 233mg | Calcium: 38mg
Advertisement
Prem Kumar

Recent Posts

எப்பவும் ஒரே மாதிரியா முட்டை குழம்பு வச்சு போர் அடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி முட்டை ஆம்லெட் கறி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

இது என்னடா முட்டைக்கறி அப்படின்னு யோசிக்கிறீங்களா? இந்த முட்டை கறி செய்றதுக்கு நம்ம முட்டையை வேக வச்சு சேர்க்காம முட்டையை…

44 நிமிடங்கள் ago

ருசியான கிராமத்து பிரண்டை ஊறுகாய் இப்படி செஞ்சி பாருங்க! மாங்காய் ஊறுகாய் போல சாப்பிட ருசியாக இருக்கும்!

ஊறுகாய் இல்லையென்றால் சிலருக்கு உணவே இறங்காது. அந்தளவுக்கு அதன் சுவைக்கு அடிமையாகியிருப்பார்கள். ஊறுகாய்க்கு தேவையான பொருட்கள் குறிப்பிட்ட பருவத்தில் கிடைக்காதவையாக…

2 மணி நேரங்கள் ago

சாக்லேட் மில்க் குளுகுளுன்னு இப்படி ஒரு தடவை செஞ்சு குடிச்சு பாருங்க!

சாக்லேட் லவ்வரா இருக்கிற எல்லாருக்குமே சாக்லேட் ஐஸ்கிரீம் சாக்லேட் கேக் சாக்லேட் ஐஸ்கிரீம் அப்படின்னு சாக்லேட் சம்மந்தமான எல்லாம் ரொம்ப…

3 மணி நேரங்கள் ago

ரிஷப ராசியில் சூரியன் மற்றும் குருவின் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெற போகும் சிலர் ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரியன் மற்றும் குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரிஷப ராசியில் சேர்கிறார்கள். 2024 வது…

5 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு தக்காளி அவல் உப்புமா இப்படி செஞ்சி பாருங்க! அப்புறம் அடிக்கடி செய்வீங்க!

காலை வேளையில் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் உப்புமா செய்து சாப்பிடுங்கள். உப்புமா என்றதும் வெள்ளை ரவை அல்லது…

6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 11மே 2024!

மேஷம் இன்று உங்களுக்கு சாதகமான பலன் தரக்கூடிய நாள். பயணங்கள் மூலம் சில அனுகூல பலன்களை பெறுவீர்கள். ஒட்டிய பக்தர்கள்…

9 மணி நேரங்கள் ago