Advertisement
சைவம்

மதிய உணவுக்கு ஏற்ற காராமணி சாதம் இப்படி செஞ்சி பாருங்க! ஒரு பருக்கை சாதம் கூட மிஞ்சாது!

Advertisement

எத்தனை பேருக்கு சமைக்க வேண்டுமானாலும் அந்த வேலையை ஈசியாக செய்து விடலாம். ஆனால் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் பொழுது தான் அது பெரிய வேலையாகத் தெரியும். குழந்தைகள் சாப்பிட கொடுக்கும் உணவை விருப்பமாக சாப்பிடுவது கிடையாது. அவர்கள் அடம்பிடிப்பது தான் அதிகமாக இருக்கும். எனவே அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்துக் கொடுக்க மிகவும் யோசிக்க வேண்டியிருக்கும்.

அதேசமயம் ஆரோக்கியமான உணவுகளையும் சமையலில் சேர்த்துக் கொடுக்க இவ்வாறு காராமணி சேர்த்து வெரைட்டி சாதம் செய்து கொடுத்துப் பாருங்கள். காராமணியில் உள்ள ஆன்டிஆக்ஸிடேன்டுகள், விட்டமின் சி, புரதம் ஆகியவை சருமம் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகின்றன. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடேன்டுகள் சருமம் முதிர்ச்சி அடைவதை தடை செய்து வயதான தோற்றம் ஏற்படாமல் சருமத்தை பாதுகாக்கிறது. காராமணியில் உள்ள கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு போன்றவை எலும்புகளின் பாதுகாப்பில் உதவுகிறது.

Advertisement

காராமணி சாதம், குழந்தைகள் நிச்சயம் தட்டாமல் சாப்பிட்டு முடிப்பார்கள். இதில் காரம் குறைவாக குழந்தைகளுக்கு ஏற்றது போல் சமைத்து கொடுக்க முடியும். வாருங்கள் இந்த சுவையான காராமணி சாதத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

கலந்த சாதம் என்றாலே லெமன் சாதம் , புலி சாத அல்லது பிரிஞ்சி சாத தான் செய்யவேண்டும். ஆனால் இந்த சாதம் உடலுக்கு மிகவும் சத்து தரக்கூடிய தானியத்தை வைத்து, புதுவிதமான சுவையான காராமணி சாதத்தை இப்போது எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இது சுவையானது என்று சொல்லுவதை விட உடலுக்கு மிக மிக ஆரோக்கியமானது.

காராமணி சாதம் | Kaaramani Rice Recipe In Tamil

Print Recipe
ஆரோக்கியமான உணவுகளையும் சமையலில் சேர்த்துக் கொடுக்க இவ்வாறு காராமணி சேர்த்து வெரைட்டி சாதம் செய்து கொடுத்துப் பாருங்கள். காராமணியில் உள்ள ஆன்டிஆக்ஸிடேன்டுகள், விட்டமின் சி, புரதம் ஆகியவை சருமம் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகின்றன. காராமணி சாதம், குழந்தைகள் நிச்சயம் தட்டாமல்சாப்பிட்டு முடிப்பார்கள். இதில் காரம் குறைவாக குழந்தைகளுக்கு ஏற்றது போல் சமைத்துகொடுக்க முடியும். வாருங்கள் இந்த சுவையான காராமணி சாதத்தை எவ்வாறு செய்ய வேண்டும்என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Advertisement
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Kaaramani Rice
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 250

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 1/2 கப் அரிசி
  • 1/2 கப் காராமணி
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1/2 ஸ்பூன் சாம்பார் பொடி
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 ஸ்பூன் கடுகு
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • 3 ஸ்பூன் எண்ணெய்
  • 1/2 ஸ்பூன் உப்பு
  • 2 வர மிளகாய்
  • 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 1/2 ஸ்பூன் எலுமிச்சைச் சாறு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 கொத்து கொத்தமல்லித்தழை

Instructions

  • முதல் நாள் இரவே
    Advertisement
    அரை கப் காராமணியை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனுடன் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்கவேண்டும்.
  • பிறகு மறுநாள் காராமணியை குக்கரில் சேர்த்து,அதனுடன் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, கால் ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்துவிட்டு, அடுப்பின் மீது வைத்து, 2 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
  • பிறகு ஒன்றரை கப் அரிசியை கழுவி பாத்திரத்தில் வைத்து, உதிரியாக சாதம் வடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பின் மீது ஒரு கடாயைவைத்து, 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன்கடுகு, அரை ஸ்பூன் சீரகம் மற்றும் ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, வர மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
  • பின்னர் இதனுடன் ஒரு வெங்காயத்தை நறுக்கி சேர்த்து, கறிவேப்பிலையையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளியையும் இதனுடன் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கி விட வேண்டும்.
  • பிறகு இவற்றுடன் மஞ்சள் தூள், சாம்பார் பொடி,மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து லேசாக கலந்துவிட வேண்டும். இவை அனைத்தும் நன்றாகவதங்கியதும் வேகவைத்த காராமணியை சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். சிறிது நேரத்தில் இவை சிவந்து வந்ததும் இறுதியாக கொத்தமல்லித்தழை மற்றும் வடித்து வைத்த சாதம் சேர்த்து கலந்து விட்டால் போதும். சுவையான காராமணி சாதம் தயாராகி விடும்.

Nutrition

Serving: 500g | Calories: 250kcal | Carbohydrates: 12g | Protein: 5g | Fat: 0.4g | Saturated Fat: 0.1g | Sodium: 62mg | Potassium: 294mg | Fiber: 5.9g | Calcium: 66mg | Iron: 15mg

Advertisement
Prem Kumar

Recent Posts

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

9 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

20 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

1 நாள் ago