Advertisement
அசைவம்

இந்த வாரம் இறுதியில் ஸ்பெஷலாக செட்டிநாடு காடை குழம்பு ஒரு வாட்டி இப்படி செய்து கொடுத்து பாருங்க!

Advertisement

காடை வெரைட்டிஸ் எல்லாருக்குமே ரொம்ப பிடிச்சது தான். காடை சைடிஷ்க்கு அப்படின்னு சொல்லி தனியா ஒரு பேன் பேஸ் இருக்கு. அப்படி எந்த ஒரு சாப்பாடோடையும் காடை சைடிஷா வச்சு சாப்பிடுற பழக்கம் நம்ம எல்லாருக்குமே இருக்கும். ஆனால் இன்றைக்கு நாம காடையில் செட்டிநாடு குழம்பு வைக்க போறோம்.

நிறைய காடை சைடிஸ்கள் இருந்தாலும் 65 , வறுவல், தந்தூரிகள் எப்படி பல வகைகளில் காடை இருந்தாலும் மசாலாக்கள் இருந்தாலும் இந்த காடை செட்டிநாடு குழம்பு ஒரு டைம் நீங்க ட்ரை பண்ணி பார்த்தீங்கனா உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். சுவையான இந்த காடை செட்டிநாடு குழம்பு நீங்க செய்து கொடுக்கும்போது உங்க வீட்ல இருக்கிற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். அதுவும் இந்த காடை செட்டிநாடு குழம்பு பண்ணும்போது எல்லாரும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க.

Advertisement

வீட்ல இருக்கிற குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே காடை ரொம்பவே பிடிச்சமான ஒரு உணவா மாறிடும். அதுலயும் நீங்க இந்த மாதிரி கிரேவியா செட்டிநாடு ஸ்டைலில் பண்ணி கொடுக்கும் போது ரொம்பவே சுவையா இருக்கும் நல்லா ருசிச்சு சாப்பிடுவாங்க. அடிக்கடி காடை செட்டிநாடு குழம்பு பண்ணி கொடுக்க சொல்லியும் உங்களை கேட்டுட்டு இருப்பாங்க. சுவையான இந்த செட்டிநாடு காடை குழம்பு எப்படி சமைக்கிறது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க

செட்டிநாடு காடை குழம்பு | Chettinad kadai gravy recipe in tamil

Print Recipe
வீட்ல இருக்கிற குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே காடை ரொம்பவே பிடிச்சமான ஒரு உணவா மாறிடும். அதுலயும் நீங்க இந்த மாதிரி கிரேவியா செட்டிநாடு ஸ்டைலில் பண்ணி கொடுக்கும் போது ரொம்பவே சுவையா இருக்கும் நல்லா ருசிச்சு சாப்பிடுவாங்க. அடிக்கடி காடை செட்டிநாடு குழம்பு பண்ணி கொடுக்க சொல்லியும் உங்களை கேட்டுட்டு இருப்பாங்க. சுவையான இந்த செட்டிநாடு காடை குழம்பு எப்படி சமைக்கிறது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க
Course Gravy, LUNCH
Cuisine chettinad
Keyword chettinad chicken Gravy, Chettinad Masala, Chettinad sorakkai kulambu, chettinad therakkal, Chettinad Therakkal Kulambu, Chettinadu Aatukal Soup, chettinadu bitter gourd curry
Prep Time 15 minutes
Cook Time 20 minutes
Total Time 35 minutes
Servings 9 people
Calories 296
Cost 250

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 கரண்டி
    Advertisement

Ingredients

  • 5 காடை
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 வெங்காயம்
  • 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 தக்காளி
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 2 ஸ்பூன் மல்லித் தூள்
  • 1 ஸ்பூன் 1 ஸ்பூன் மிளகு
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 5 காஷ்மீரி மிளகாய்
  • 1 கப் துருவிய தேங்காய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • தேவையான அளவு உப்பு                             
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில்
    Advertisement
    காடையை சுத்தம் செய்து நறுக்கி தனியாக வைக்க வேண்டும்.அதன் பிறகு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து ஒரு கடாயை வைக்கவும். கடாய் சூடானதும் அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
  • எண்ணெய் சூடானதும் சீரகம், சோம்பு போட்டு தாளிக்க வேண்டும். அதன் பிறகு துருவிய தேங்காய் மற்றும் வரமிளகாயை, மிளகு போன்றவற்றை வறுத்து கொள்ளவும்.வறுத்த பொருட்களை ஆறவைக்க வேண்டும். ஆறவைத்த பிறகு அதை மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
  • பின்பு அதே கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சுத்தம் செய்து வைத்துள்ழ காடையை சிறிது நேரம் அதில் வதக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
  • பின்பு கடாயில் எண்ணெய் சேர்த்து சீரகம், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
  • பிறகு தக்காளியை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். பின் அரைத்து வைத்துள்ள தக்காளியை கடாயில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
  • அதன் பிறகு அதில் மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும். பிறகு அரைத்து வைத்த மசாலாவை அதில் சேர்த்து கலந்து விட வேண்டும். குழம்புக்கு தேவையான அளவு நீர் சேர்த்து கலந்து விட வேண்டும். கலந்த பிறகு மூடியை போட்டு மூட வேண்டும்.
  • மசாலா நன்றாக வெந்த பிறகு வதக்கி வைத்துள்ள காடையை குழம்பில் வைக்க வேண்டும்.உங்களுக்கு குழம்பு கெட்டியாக வேண்டும் என்றால் கெட்டி பதம் வரும் வரை குழம்பை கொதிக்க விட வேண்டும்.
  • குழம்பு நன்றாக கொதித்த பிறகு எலுமிச்சை சாறை பிழிந்து விட வேண்டும். இப்பொழுது சுவையான காடை செட்டிநாடு குழம்பு தயார்.

Nutrition

Calories: 296kcal | Carbohydrates: 12g | Protein: 15g | Fat: 26g
Advertisement
Prem Kumar

Share
Published by
Prem Kumar

Recent Posts

டிபனுக்கு வழக்கம் போல் இல்லாமல் தக்காளி மசாலா பூரி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பூரி இந்தியாவின் புகழ் பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும்…

28 நிமிடங்கள் ago

திருச்செந்தூர் முருகனுக்கும் வைகாசி விசாகத்திற்கும் இருக்கும் தொடர்!

புதமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பலவிதமான விழாக்கள் இருந்தாலும் உலக மக்களை காத்தருள்வதற்காக முருகப்பெருமான் அவதரித்த திருநாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது.…

2 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் தித்திக்கும் சுவையில் கேரட் கீர் இப்படி செய்து பாருங்க!

கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த…

3 மணி நேரங்கள் ago

மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான முட்டை கோலா உருண்டை ஒரு தடவை இப்படி செய்து பாருங்க!

பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது…

7 மணி நேரங்கள் ago

ஆட்டி படைக்கும் அக்னி நட்சத்திரம் இன்னும் 2 வாரம் ரொம்ப ஜாக்கிரதையாக இருங்கள்

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

7 மணி நேரங்கள் ago

மாம்பழ மாதுளை மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக,மாதுளை சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

7 மணி நேரங்கள் ago