கால பைரவருக்குரிய வாகனம்!!

சிவபெருமானுடைய விக்ரமான வடிவங்களில் காலபைரவரும் ஒன்று இவர் காலச்சக்கரத்தை தன்னகத்தை கொண்டவர். காலபைரவருக்குரிய வாகனமாக நாய் எப்படி வந்தது? இருவருக்கும் என்ன தொடர்பு? மக்கள் ஏன் நாயை அடிக்கக்கூடாது ?என்பதையெல்லாம் பற்றி ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம். பிரம்மா விஷ்ணு சண்டை ஒர

By Prem Kumar · 23/7/2025

சிவபெருமானுடைய விக்ரமான வடிவங்களில் காலபைரவரும் ஒன்று இவர் காலச்சக்கரத்தை தன்னகத்தை கொண்டவர். காலபைரவருக்குரிய வாகனமாக நாய் எப்படி வந்தது? இருவருக்கும் என்ன தொடர்பு? மக்கள் ஏன் நாயை அடிக்கக்கூடாது ?என்பதையெல்லாம் பற்றி ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

பிரம்மா விஷ்ணு சண்டை

ஒருமுறை விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் இடையே யார் பெரியவர் என்ற கேள்வி எழுந்து அப்பொழுது சிவபெருமான் அக்னி ஸ்தம்பமாக தோன்றினார். அதன் அடி அல்லது முடியை யாரால் காண முடியுமோ அவரை பெரியவர் என்று சிவபெருமான் சவால் விடுத்தார். உடனே பிரம்மா அன்னப்பறவையாக மாறி ஸ்தம்பத்தின் முடியை காண முயன்றார். விஷ்ணு பகவான் வராக ரூபம் எடுத்து அடியை காண முயன்றார். அவர்கள் இருவராலும் சிவபெருமானுடைய முழு வடிவத்தையும் காண முடியவில்லை. ஆனால் பிரம்மா முடியை கண்டுவிட்டதாக பொய் சொன்னார் அப்பொழுது சிவபெருமான் உக்கிரமான காலபைரவராக தோன்றிய பிரம்மாவின் அகந்தையை அடக்க அவருடைய ஐந்தாவது தலையை துண்டித்து விட்டார். இதனால் காலபைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டுவிட்டது.

பிரம்மஹத்தி தோஷம்

இந்த தோஷத்தால் கால பைரவர் பாதிக்கப்பட்டதால் பிரம்மாவின் தலையை ஒரு பிச்சைப் பாத்திரமாக ஏந்தி பிச்சை எடுக்கும் கோலத்தில் உலகம் முழுவதும் சுற்றித்திரிந்தார். அப்பொழுது ஒரு நாய் அவரை தொடர்ந்து வந்து அவருடனே விசுவாசமாக பயணித்தது. எங்கு சென்றாலும் நாய் அவரை பிரியாமல் தொடர்ந்தது. காலபைரவர் காசிக்கு சென்ற போது பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. கபாலம் கீழே விழுந்து மறைந்து விட்டது. அதுவரை தன்னை தொடர்ந்து வந்த நாயின் விசுவாசத்தை தன்னலமற்ற சேவையை காலபைரவர் கண்டு மகிழ்ந்தார்.

நாயின் விசுவாசம்

அந்த நாயின் விசுவாசத்தையும் ஆபத்துகளில் இருந்து தன்னை காப்பாற்றிய வல்லிகையும் காலபைரவர் உணர்ந்து அந்த நாயை அவருடைய வாகனமாக ஏற்றுக்கொண்டார். அதிலிருந்து நாய் கால பைரவருடைய வாகனம் என்றும் விசுவாசம் மற்றும் பாதுகாப்பின் சின்னமாக போற்றப்படுகிறது. விலங்குகளாக இருந்தாலும் எந்த உயிரினமாக இருந்தாலும் பக்திக்கு நிகர் இல்லை என்பதை சிந்திக்க வைக்கிறது இந்த கதை. பைரவரை வழிபட்டு வருபவர்கள் நாய்களுக்கும் உணவிட்டு பாதுகாப்பது சிறந்தது பைரவரின் அம்சமாக கருதப்படக் கூடிய நாயை கிரகஸ்த பைரவர் என்றும் அழைப்பர். இது வீட்டை பாதுகாக்க கூடிய அம்சத்தை குறிக்கிறது. தீய சக்திகளை அழிக்கும் கடவுள் பைரவர் என்பதால் நாய் அவருடைய அழிக்கும் சக்தியும் அடையாளமாகவும் கருதப்படுகிறது. அனைத்து கோவில்களிலும் கால பைரவரும் நாயும் இணைந்தே காணப்படுபவர். பிரம்மஹஸ்தி தோஷம் ஏற்பட்ட போது காலபைரவரை பாதுகாத்த நாயே கல்லை கொண்டு அடிப்பதும் துன்புறுத்துவதும் பெரிய பாவமாக கருதப்படுகிறது.

இதனையும் படியுங்கள் : எம ‌பயம் போக்கும் காலபைரவர் வழிபாடு

Recipes AMP · Quick view
View full