Advertisement
அசைவம்

கறிக்குழம்பையும் மிஞ்சும் சுவையில் காரைக்குடி முட்டை குழம்பு இப்படி செய்து பாருங்க!

Advertisement

காரைக்குடியில் சமைக்கப்படும் முட்டை குழம்பு சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். முட்டை குழம்பு உணவு பிரியர்களின் விருப்பமான செய்முறையாக இருக்கும். காரைக்குடியின் தனித்துவமான சமையல் பாணியும், விதவிதமான முறையில் தயாரிக்கப்படும் உணவு வகைகளும் அனைவரையும் ஈர்க்கின்றன. முட்டையை வைத்து எந்த உணவு செய்தாலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தட்டாமல் சாப்பிட்டு முடிப்பார்கள். சாம்பார், காரக்குழம்பு, மோர்க்குழம்பு இப்படி செய்வதை விட ஒரு முறை முட்டை உடைத்து ஊற்றி குழம்பு செய்து கொடுத்தால் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் இதை எப்படி செய்வது என்பதை இங்கு பார்ப்போம்.

காரைக்குடி முட்டை குழம்பு | Karaikudi Egg curry

Print Recipe
காரைக்குடியில் சமைக்கப்படும் முட்டை குழம்பு சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். முட்டை குழம்பு உணவு பிரியர்களின் விருப்பமான செய்முறையாக இருக்கும். காரைக்குடியின் தனித்துவமான சமையல் பாணியும், விதவிதமான முறையில் தயாரிக்கப்படும் உணவு வகைகளும் அனைவரையும் ஈர்க்கின்றன. முட்டையை வைத்து எந்த உணவு செய்தாலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தட்டாமல் சாப்பிட்டு முடிப்பார்கள். சாம்பார், காரக்குழம்பு, மோர்க்குழம்பு இப்படி செய்வதை விட ஒரு முறை முட்டை உடைத்து ஊற்றி குழம்பு செய்து கொடுத்தால் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் இதை எப்படி செய்வது என்பதை இங்கு பார்ப்போம்.
Course LUNCH
Cuisine Karaikudi, tamilnadu
Keyword Karaikudi Egg Curry
Prep Time
Advertisement
5 minutes
Cook Time 10 minutes
Servings 4 people
Calories 211

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 5 முட்டை
  • 200 கிராம் சின்ன வெங்காயம் தோலுரித்து நறுக்கியது
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 1 தக்காளி நறுக்கியது
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • கறிவேப்பிலை சிறிது
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் சிக்கன் தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு
    Advertisement
    தேவையானஅளவு
  • எண்ணெய்   தேவையானஅளவு

Instructions

  • முதலில்முட்டையை நீரில் போட்டு நன்கு வேக வைத்து இறக்கி, முட்டை ஓட்டை நீக்கிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர்ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு மணம் வரும் வரை வதக்கி விட வேண்டும்
  •  பிறகுஅதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, மிளகாய் தூள், மல்லித் தூள், சிக்கன் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கிளறி விட வேண்டும்.
  • பின்அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு, இறுதியில் முட்டையை  சேர்த்துசிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கினால், காரைக்குடி முட்டைக் குழம்பு ரெடி!!!

Nutrition

Serving: 100g | Calories: 211kcal | Carbohydrates: 14g | Protein: 10g | Fat: 13g | Cholesterol: 197mg | Sodium: 74mg | Potassium: 373.1mg | Fiber: 3.6g | Sugar: 6.1g
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

காரசாரமான ருசியில் சிக்கன் சப்பாத்தி ரோல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட!

எல்லாருக்குமே சிக்கன் என்றாலும் புடிக்கும் சப்பாத்தி என்றாலும் ரொம்ப பிடிக்கும். இப்படி சிக்கனையும் சப்பாத்தியும் தனித்தனியா சாப்பிட்டு கவலைப்படாம சிக்கன்…

2 மணி நேரங்கள் ago

மே மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒரு சில குணங்கள் இருக்கும். ஒரு சில நபர்களுக்கு அவர்களுடைய குணங்கள் ராசி நட்சத்திரத்தை பொருத்தும்…

3 மணி நேரங்கள் ago

ஸ்நாக்ஸாக சாப்பிட கேழ்வரகு மாவு வைத்து ராகி மெது பக்கோடா இப்படி செய்து பாருங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன் கடலை…

4 மணி நேரங்கள் ago

குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா?…

7 மணி நேரங்கள் ago

மணக்க மணக்க ருசியான தட்டை பயறு சாதம் இனி இப்படி செய்து கொடுங்கள்!

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து…

8 மணி நேரங்கள் ago

கருவாட்டு தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

ஒரு சிலருக்கு கருவாடு மீன் அப்படின்னு சொன்னாலே ரொம்ப பிடிக்கும். கருவாடு மீன் எல்லாமே விரும்பி சாப்பிடுறவங்களும் இருக்காங்க. ஒவ்வொருத்தரும்…

8 மணி நேரங்கள் ago