சுட சுட சாதத்துடன் சாப்பிட ருசியான காராமணி தேங்காய்பால் காரக்குழம்பு இப்படி ஒரு முறை செய்து பாருங்க!

பயறு வகைகள் உடலுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் அதில் உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன. ஆகவே அவற்றை வைத்து, மதிய வேளையில் ஒரு குழம்பு செய்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். அதிலும் காராமணியை குழம்பு வைத்தால், அதன் சுவையே தனி தான். கிராமங்களில் அடிக்கடி செய்யப்ப

By Prem Kumar · 4/1/2024

பயறு வகைகள் உடலுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் அதில் உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன. ஆகவே அவற்றை வைத்து, மதிய வேளையில் ஒரு குழம்பு செய்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். அதிலும் காராமணியை குழம்பு வைத்தால், அதன் சுவையே தனி தான். கிராமங்களில் அடிக்கடி செய்யப்படும் இந்த காராமணி குழம்பு மணமும், ருசியும், மருத்துவ குணமும் நிறைந்த உணவு வகையாகும். காராமணியை தட்டப்பயிர் என்றும் கூறலாம். உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும், வயிற்றுப் புற்றுநோயை தடுக்கும், வளரும் குழந்தைகளுக்கு மிகவும் உகந்தது, உடல் எடையைக் குறைக்கவும், மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கவும், உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்கவும், சிறுநீரக பிரச்சனை மற்றும் வயிற்று உபாதைகளை போக்கவும், இதயம் சம்பந்தமான நோய்களை குணமாக்கவும் காராமணி உதவுகிறது.

காராமணி குழம்பு மதிய உணவுக்கு ஏற்ற ஒரு சத்தான குழம்பு வகை. பயிறு வகைகளை வாரம் 1 முறை அல்லது 2 முறை இதுபோன்று குழம்பு அல்லது சுண்டல் ஆகியவற்றை செய்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு ஏற்றது. காராமணி குழம்பு ஊற வைத்து வேக வைத்த காராமணி, புளி, தேங்காய் பால், பூண்டு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றைக் கொண்டு திக்காக செய்யப்படும் குழம்பு வகை. காராமணியை தனியாக வேக வைத்து சாப்பிடுவதைக் காட்டிலும் இப்படி குழம்பு செய்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். இது சூடான சாதத்துடன் நெய் கலந்து அப்பளம் அல்லது உருளைக்கிழங்கு பொரியல் உடன் பரிமாறினால் சுவையாக இருக்கும். அது தவிர இட்லி அல்லது தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். சுவையான காராமணி குழம்பு நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

இதனையும் படியுங்கள் : மதிய உணவுக்கு ஏற்ற காராமணி சாதம் இப்படி செஞ்சி பாருங்க! ஒரு பருக்கை சாதம் கூட மிஞ்சாது!

Recipes AMP · Quick view
View full