பணவரவு அதிகரிக்க கார்த்திகை மாதத்தில் செய்ய வேண்டிய பரிகாரம்!!

அனைவரும் கடினமாக உழைத்து சம்பாதிப்பது நல்ல வாழ்க்கையை வசதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்காகத்தான். சுகமான வாழ்க்கையை அனுபவிப்பதற்கு பணம் கண்டிப்பாக தேவைப்படும் எனவே இன்றைய காலகட்டத்தில் யாராக இருந்தாலும் வேலைக்கு சென்றால் தான் பணத்தை சம்பாதிக்க முடியும். ஆனால் பணத்தை சம்பாதி

By Prem Kumar · 22/11/2024

அனைவரும் கடினமாக உழைத்து சம்பாதிப்பது நல்ல வாழ்க்கையை வசதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்காகத்தான். சுகமான வாழ்க்கையை அனுபவிப்பதற்கு பணம் கண்டிப்பாக தேவைப்படும் எனவே இன்றைய காலகட்டத்தில் யாராக இருந்தாலும் வேலைக்கு சென்றால் தான் பணத்தை சம்பாதிக்க முடியும். ஆனால் பணத்தை சம்பாதித்தாலும் அதனை எப்படி சம்பாதித்து சேர்த்து வைப்பது என்பது நிறைய பிரச்சனை வரும் சேமிப்பதற்கு பணம் கையில் தங்கவே தங்காது. அப்படி இருக்கும் சூழ்நிலையில் கார்த்திகை மாதத்தில் செய்ய வேண்டிய ஒரு பணவரவுக்கான பரிகாரத்தை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

வழிபட வேண்டிய தெய்வங்கள்

கார்த்திகை மாதம் என்பது ஒரு தெய்வீகமாக இந்த மாதத்தில் விரதம் இருந்து விளக்கு ஏற்றி வந்தால் நம் வாழ்க்கையில் நல்லது நடக்கும். சிறப்பு வாய்ந்த கார்த்திகை மாதத்தில் ஒரு சில தெய்வங்களை வழிபடுவதால் பணத்திற்கு பஞ்சமே இருக்காது. குலதெய்வம் இஷ்ட தெய்வம் சிவபெருமான் விநாயகர் முருகர் ஐயப்பன் பெருமாள் என்று பல தெய்வங்களை வழிபடுவதற்கு சிறந்த மாதம். மேலும் இவர்களோடு சேர்த்து லட்சுமி குபேரையும் வழிபாடு செய்தால் பணத்திற்கு பஞ்சமே இருக்காது.

மகாலட்சுமிக்கு உகந்த பொருட்கள்

லட்சுமி குபேரருடைய அருளை முழுவதுமாக பெறுவதற்கு ஒரு சில பரிகாரங்கள் இருக்கின்றது. அந்த பரிகாரத்தை கார்த்திகை மாதம் முடிவதற்குள் செய்துவிட வேண்டும் இதற்கு ஒரு ஸ்பூன் அளவிற்கு நமக்கு வெந்தயம் தேவைப்படும். மகாலட்சுமி தேவி நிறைய பொருட்களில் வீற்றிருக்கிறாள் மொத்தம் 108 பொருட்களில் வீற்றிருப்பாள். அஞ்சறைப்பெட்டியில் வைத்திருக்கக்கூடிய மிக முக்கியமான ஒரு சில பொருட்களில் மகாலட்சுமி தாயார் குடியிருப்பாள் அந்த வகையில் வெந்தயமும் ஒன்று.

பரிகாரம் செய்ய வேண்டிய முறை

இந்த பரிகாரத்தை செய்வதற்கு மாலை 6 மணிக்கு வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்ற வேண்டும் அதற்கு முன்பாக ஒரு தட்டில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை பரப்பி அதன் மேல் ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும் விநாயகப் பெருமானே வழிபட்டுவிட்டு பிறகு சிவபெருமான் முருகப்பெருமான் குலதெய்வம் லட்சுமி குபேரர் அனைவரையும் வழிபாடு செய்ய வேண்டும். எட்டு மணி வரையில் வெந்தயத்தை அங்கேயே வைத்துவிட்டு எட்டு மணிக்கு மேல் ஒரு மஞ்சள் நிற துணியில் வெந்தயத்தை போட்டு நாணயத்தையும் போட்டு மூட்டையாக கட்டி பணம் எடுத்து செலவு செய்யக்கூடிய இடத்தில் வைக்க வேண்டும் இப்படி செய்வதன் மூலம் லட்சுமி குபேரருடைய அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

சாம்பிராணி தூபம்

செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் பூஜை செய்யும் போது இந்த மூட்டைக்கும் சேர்த்து சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும் மார்கழி மாதம் ஒன்றாம் தேதி என்று அந்த மூட்டையை எடுத்து நாணயத்தை எடுத்துக்கொண்டு வெந்தயத்தை ஓடுகின்ற தண்ணீரில் அல்லது கால் தடம் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். முழு மனதோடு இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு நிச்சயமாக பணவரவு அதிகமாகவே சேரும்.

இதனையும் படியுங்கள் : கை நிறைய பணம் கிடைக்க செய்ய வேண்டிய தீப வழிபாடு!

Recipes AMP · Quick view
View full