கார்த்திகை மாதத்திற்கான ராசி பலன்கள், மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!
சூரிய பகவான் முப்பது நாட்களுக்கு ஒரு முறை ராசி மாற்றம் அடைவார். சூரிய பகவான் ராசி மாற்றம் அடையும்போது தமிழ் மாதம் ஆரம்பிக்கும். அந்த வகையில் துலாம் ராசி இருந்து விருச்சிக ராசிக்கு சூரிய பகவான் பெயர்ச்சியாக கூடிய காலம் தான் கார்த்திகை மாதம். நவம்பர் 16ஆம் தேதி அன்று காலை 7 .16 மணி
சூரிய பகவான் முப்பது நாட்களுக்கு ஒரு முறை ராசி மாற்றம் அடைவார். சூரிய பகவான் ராசி மாற்றம் அடையும்போது தமிழ் மாதம் ஆரம்பிக்கும். அந்த வகையில் துலாம் ராசி இருந்து விருச்சிக ராசிக்கு சூரிய பகவான் பெயர்ச்சியாக கூடிய காலம் தான் கார்த்திகை மாதம். நவம்பர் 16ஆம் தேதி அன்று காலை 7 .16 மணிக்கு சூரிய பகவான் விருச்சிக ராசிக்கு மாற்றமடைய போகிறார் எனவே ஒரு சில ராசிகள் சற்று கவனமாகவே இருக்க வேண்டும் அந்த ராசிகளை பற்றி பார்க்கலாம்.
மேஷ ராசி
மேஷ ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அதிபதியான சூரிய பகவான் எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் சம்பாதிக்க உள்ளார் எனவே இந்த மாதத்தில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றிகள் உங்களுக்கு கிடைக்காது. குழந்தைகள் சம்பந்தமாக சில மனக் கவலைகள் ஏற்படும் மனம் அழுத்தமான சூழலில் இருக்கும். வெளி பார்க்கும் இடத்தில் பணிச்சுமை அதிகரித்து குடும்ப பொறுப்புகளும் அதிகரித்து மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படுவீர்கள். வியாபாரத்திலும் தொழிலிலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் இருக்கும். கடின உழைப்பிற்கு ஏற்ற பாராட்டுக்கள் கிடைக்காமல் கூட போகலாம். திருமண வாழ்க்கையும் கருத்து வேறுபாடுகள் மனவருத்தங்களோடு போகும். உடல் நலத்திலும் சற்று அதிகமான கவனம் தேவை.
கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் விரையஸ்தான அதிபதியான சூரிய பகவான் தைரிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யப் போகிறார். எனவே கார்த்திகை மாதத்தில் உங்களுடைய வேலையில் மனதிருப்தி கிடைக்காது. வியாபாரம் தொடர்பாக திட்டமிட்டு பட்ட காரியங்கள் சரியாக முடியாமல் வருத்தம் அடைவீர்கள். மனக்கசப்புகள் உறவில் நீங்கும். உடல்நல பாதிப்புகளும் ஏற்படலாம் வெகு தூர பயணங்கள் அமையும். தொழிலில் போட்டியில் அதிகரிக்கும் ஒப்பந்தங்கள் கிடைக்க தாமதமாகும். காதல் உறவில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். ஒரு சிலருக்கு தசை பிடிப்பு மூட்டு வலி செரிமான பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் அதிகமாக தேவை தனுசு ராசிக்காரர்களுக்கு பாக்கியஸ்தான அதிபதியான சூரிய பகவான் 12ஆம் வீடான விரைவு ஸ்தானத்தில் சஞ்சரிக்க போவதால் பயணங்கள் அதிகமாகும் அலைச்சல் அதிகமாகும். வீட்டில் செலவுகள் அதிகரிக்கும் இந்த மாதத்தில் செலவுகளை கட்டுப்படுத்தினால் பணவரவை அதிகரிக்கலாம் தேவையற்ற மன கசப்புகளும் குடும்பத்தில் அவ்வப்போது ஏற்படும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் சாதகமான சூழலுக்காக காத்திருக்க வேண்டும். காதல் வாழ்க்கையிலும் திருமண வாழ்க்கையிலும் கொஞ்சம் கவனம் தேவை. உங்கள் வேலையை முடிப்பதில் உடல்நலத்தில் கவனம் செலுத்தாமல் விட்டு விடக்கூடாது. மேலும் குலதெய்வத்தை விநாயகரை வழிபடுவதை பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இதனையும் படியுங்கள் : குரு மற்றும் சனி பகவானின் பெயர்ச்சியால் 2025 இல் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ஐந்து ராசிகள்!