சுட சுட சாதத்துடன் சாப்பிட ருசியான கருணைக்கிழங்கு கார குழம்பு இப்படி செஞ்சி கொடுங்க! அசத்தலான ருசியில் இருக்கும்!
தென்னிந்திய சமையல்களில் குழும்புகளுக்கு முக்கிய இடம் உண்டு. ஏனென்றால், ஒரு குழம்பில் பல வகைகள் உள்ளன. உதாரணமாக சாம்பாரில் பருப்பு சாம்பார், முருங்கை சாம்பார், முள்ளங்கி சாம்பார் என பல வகைகள் உள்ளன. இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால் இவை ஒவ்வொன்றிற்கும் தனித்துவமான சுவையும், ருச
தென்னிந்திய சமையல்களில் குழும்புகளுக்கு முக்கிய இடம் உண்டு. ஏனென்றால், ஒரு குழம்பில் பல வகைகள் உள்ளன. உதாரணமாக சாம்பாரில் பருப்பு சாம்பார், முருங்கை சாம்பார், முள்ளங்கி சாம்பார் என பல வகைகள் உள்ளன. இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால் இவை ஒவ்வொன்றிற்கும் தனித்துவமான சுவையும், ருசியும் உண்டு. நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்று இந்த கார குழம்பு. இதை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு. மிகவும் எளிதாக இருக்கிற பொருட்களை வைத்து அட்டகாசமாக இந்த குழம்பு செய்து அசத்தலாம். அவற்றை தயார் செய்வது சில சமயத்தில் கடினம் போன்று தோன்றும். ஆனால் அது ரொம்பவும் ஈஸி ஆகும். அந்த வகையில், சுவையான கருணைக்கிழங்கு கார குழம்பு செய்வதற்கான சுலபமான செய்முறையை இங்கு பார்க்கலாம்.
ஒவ்வொரு நாளும் மதிய சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஒவ்வொரு விதமான குழம்பு வைக்கப்படுகிறது. பெரும்பாலும் ரசம், சாம்பார், கீரை, புளி குழம்பு, குருமா இதுபோன்ற குழம்பு வகைகள் தான் மாறிமாறி செய்யப்படுகிறது. இவற்றை சற்று வித்தியாசமான சுவையில் செய்ய வேண்டும் என்றால் கார குழம்பு செய்து கொடுக்கலாம். சிலருக்கு கருணைக்கிழங்கு மிகவும் பிடிக்கும். அதிலும் அதனை புளிக்குழம்பு வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் சிலருக்கு கருணைக்கிழங்கில் எப்படி காரக்குழம்பு சமைப்பதென்று தெரியாது. அத்தகையவர்களுக்கு இந்த காரக்குழம்பு ரெசிபி. கருணைக்கிழங்கில் பொரியல், வறுவல் செய்து இருப்போம். இன்று கருணைக்கிழங்கை வைத்து காரசாரமான காரக்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
கருணைக்கிழங்கு மருத்துவ குணம் நிறைந்தது. இது மூல நோய்க்கு மருந்தாக உள்ளது. இதனை குழம்பு செய்து சாப்பிடுவதன் மூலம் மூலநோய் விரைவில் குணமாகும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் இதனை சமைத்துக் கொடுக்கலாம். புளிப்பு சுவையில் கருணைக்கிழங்கை கொண்டு காரக்குழம்பு வைத்து செய்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். இப்படி உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இதை செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
இதனையும் படியுங்கள் : ருசியான கருணைகிழங்கு தவா வறுவல்! இது தெரிஞ்சா இனி கருணைக்கிழங்கு வாங்கினாலே இப்படித்தான் செய்வீங்க!