தீராத பிரச்சினைகளைக் கூட தீர்த்து வைக்கும் சேலம் காட்டு முனியப்பன் கோவில்!!
பெரும்பாலான மனிதர்கள் தான் மட்டுமல்லாது, தனக்கு பிறகு வரும் தனது சந்ததியினரும் பயன்பெற்று அனுபவிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு தான் கஷ்டப்பட்டு பொருள் சேர்கின்றனர். அப்படி கையில் சேர்கின்ற செல்வத்தைக் கொண்டு பெரும்பாலானோர் வீடு, வீட்டுமனை அல்லது பண்ணைத் தோட்டம் போன்ற அசையா சொத்த
பெரும்பாலான மனிதர்கள் தான் மட்டுமல்லாது, தனக்கு பிறகு வரும் தனது சந்ததியினரும் பயன்பெற்று அனுபவிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு தான் கஷ்டப்பட்டு பொருள் சேர்கின்றனர். அப்படி கையில் சேர்கின்ற செல்வத்தைக் கொண்டு பெரும்பாலானோர் வீடு, வீட்டுமனை அல்லது பண்ணைத் தோட்டம் போன்ற அசையா சொத்துக்களை சேர்ப்பதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இத்தகைய அசையா சொத்துக்களை விற்கும் பொழுது, ஒரு சிலர் தங்களின் உறவுகள் மூலமாகவும் அல்லது சட்டரீதியாகவும் பல சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. அப்படிப்பட்டவர்கள் தங்களின் பூர்வீக சொத்தை தாங்களே முறையாக அனுபவிக்க இந்த முனியப்பன் கோவிலுக்குச் சென்று வேண்டிக் கொண்டாலே போதுமாம்! அது என்ன கோவில், எப்படி வழிபாடு செய்வது என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
யார் இந்த முனியப்பன்?
முனீஸ்வரர் அல்லது முனீஸ்வரன் என்று அழைக்கப்படும் இவர் இந்து மதத்தின் தெய்வங்களுள் ஒருவராக வழிபடப்படுகிறார். மேலும் இந்தியா மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிஜி மற்றும் பல நாடுகளில் இவரை வழிபடும் வழக்கம் உள்ளது. அவர் சில சமயங்களில் முனியாண்டி, முனியப்பன், முனி அய்யா, அய்யா போன்ற பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறார். இவர் மும்மூர்த்திகளில் முக்கிய தெய்வமான சிவபெருமானுக்கு இணையாகக் கருதப்படுகிறார்.
புராணத்தில், சிவபெருமானின் மாமனாரான தட்சனால் நடத்தப்பட்ட ஒரு வேள்விக்கு சிவபெருமானுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. சிவபெருமான் இதனால் கோபமடைந்தார், இதனால் பல தெய்வங்கள் உருவாயின. அதில் முனீஸ்வரனும் ஒருவர் என நம்பப்படுகிறது. ஆனால் மற்றொரு புராணக்கதையில், முனீஸ்வரன் நீண்ட காலத்திற்கு முன்பு வாழ்ந்த சிவபெருமானின் சிறந்த பக்தர் எனவும், தனது பக்தியின் மூலம் சிவபெருமானை மகிழ்வித்தார், இதனால் பிந்தையவர் அவருக்கு “ஈஸ்வரன்” என்ற பட்டத்தை வழங்கினார் மற்றும் அவரைக் காவல் தெய்வமாக வழிபட்டனர் எனவும் நம்பப்படுகிறது.
சேலம் முனியப்பன் வழிபாடு
சேலம் மாவட்டத்தின் குகை என்ற பகுதியில் காட்டு முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாக திகழ்கிறது. இந்த கோவிலின் சிறப்பு என்னவென்றால் 11 ரூபாயை மஞ்சள் துணியில் கட்டி முனியப்பனிடம் வேண்டுதல் வைத்துச் சென்றால் நினைத்த காரியம் பலிக்கும் என நம்பப்படுகிறது. அதன்படி வேண்டுதல் வைத்துச் சென்ற 40 நாட்களில் நினைத்த காரியங்கள் நிறைவேறுகின்றது என மக்கள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.
காட்டு முனியப்பன் கோவில் எங்குள்ளது?
சேலம் மாநகரின் மையப்பகுதியில் திருமணிமுத்தாற்றின் தென் பகுதியில், குகை கல்யாணப்பேட்டையில் இந்த காட்டு முனியப்பன் அமைந்துள்ளது. நீண்ட நாட்களாக நில பிரச்சினை, நீதிமன்ற வழக்கு, குடும்ப பிரச்சினை, திருமண பிரச்சனை உள்ளவர்கள் இந்த காட்டு முனியப்பன் கோவிலுக்கு வந்து மனதார வேண்டிச் சென்ற 40 நாட்களுக்குள் அவர்களது பிரச்சினைகள் முற்றிலுமாக தீர்ந்து விடும். ஆதலால் இங்கு வந்து முனியப்பனை வழிபட்டு உங்கள் பிரச்சினைகளிலிருந்து விடுபட்டுக் கொள்ளுங்கள்.
இதனையும் படியுங்கள் : வரலட்சுமி வீட்டிற்கு வர செய்ய வேண்டிய சில வழிமுறைகள்