புஸ் புஸ்னு ருசியான கேரளா ஸ்டைல் அப்பள பஜ்ஜி இப்படி செய்து தேங்காய் சட்னியுன் சாப்பிட்டு பாருங்க அருமையாக இருக்கும்!

ஸ்நாக்ஸ் என்றால் போதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வேண்டாம் என்று யாருமே சொல்லமாட்டோம். திடீரென வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தால், என்ன செய்து கொடுக்கலாம் என யோசிக்கிறீர்களா? இதோடு மட்டுமில்லாமல் கொஞ்சம் தூரல் மழை விழுந்தால் போதும் குளிருக்கு இதமாக ஏதாவது சூடாக செய்து சாப்ப

By Prem Kumar · 4/2/2024

ஸ்நாக்ஸ் என்றால் போதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வேண்டாம் என்று யாருமே சொல்லமாட்டோம். திடீரென வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தால், என்ன செய்து கொடுக்கலாம் என யோசிக்கிறீர்களா? இதோடு மட்டுமில்லாமல் கொஞ்சம் தூரல் மழை விழுந்தால் போதும் குளிருக்கு இதமாக ஏதாவது சூடாக செய்து சாப்பிட வேண்டும் என்ற நினைப்பு வரும். ஆனால் மழை நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது என்பதால் நம்மிடம் உள்ள பொருள்களை வைத்து சுவையான ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட முயல்வோம். இதற்கு வீட்டில் அப்பளம் இருந்தால் போதும். பஜ்ஜி என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது வாழைக்காய் பஜ்ஜி தான். எவ்வளவு காய்கறிகள் வைத்து பஜ்ஜி செய்தாலும், வாழைக்காய் பஜ்ஜிக்கு நிகர் இல்லை என்றே சொல்லலாம். வீட்டில் பஜ்ஜி சாப்பிட தோணும் நேரத்தில் வாழைக்காய் இல்லை என்றால் சட்டுன்னு அப்பத்தை வைத்து அதே போல ஒரு பஜ்ஜியை செஞ்சு அசத்தலாம்.

பொதுவாக பஜ்ஜி என்பது தென்னிந்தியாவில் புகழ்பெற்ற ஸ்நாக்ஸ் வகை ஆகும். எல்லா பண்டிகை மற்றும் பார்ட்டிகளின் போது இது முக்கிய ஸ்நாக்ஸ் ஆக இடம் பெறும். இதே மாதிரி நீங்கள் உருளைக்கிழங்கு பஜ்ஜி மற்றும் மிளகாய் பஜ்ஜி போன்ற வெவ்வேறு வகையான பஜ்ஜிகளை அறிந்திருப்பீர்கள். நீங்கள் உங்கள் குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்தவுடன் மாலை நேரங்களில் டீ காபி கொடுக்கும் பொழுது இது போன்ற அப்பள பஜ்ஜி செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அதே நேரம் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் சுட சுட கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு மெறுகலாக அசத்தலான சுவையில் இருக்கும். இந்த பஜ்ஜி தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

இதனையும் படியுங்கள் : மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட பரங்கிக்காய் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இவ்வளவு டேஸ்டா இருக்குமான்னு நீங்களே ஆச்சரியப்படுவீங்க!!!

Recipes AMP · Quick view
View full