சுவையான கேரளா ஸ்பெஷல் பீட்ரூட் பச்சடி செஞ்சி பாருங்க, அற்புதமான சுவையில் இருக்கும்!
கேரளாவில் பரவலாகவும், தென்னிந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை நெருங்கி வருகிறது. ஓண கொண்டாட்டங்கள் களை கட்டி வருகிறது. ஓணத்துக்கு சிறப்பான முறையில் பரிமாறப்படும் சத்ய விருந்தில் பச்சடி என்பது மிக முக்கியமான ஒன்று. இந்த ஓணத்துக்கு பீட்டுரூட் பச்சடி செய்து உங்களின் அன்பா
கேரளாவில் பரவலாகவும், தென்னிந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை நெருங்கி வருகிறது. ஓண கொண்டாட்டங்கள் களை கட்டி வருகிறது. ஓணத்துக்கு சிறப்பான முறையில் பரிமாறப்படும் சத்ய விருந்தில் பச்சடி என்பது மிக முக்கியமான ஒன்று. இந்த ஓணத்துக்கு பீட்டுரூட் பச்சடி செய்து உங்களின் அன்பானவர்களை உபசரிக்க வேண்டும் என்று விரும்பினால், இதோ ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பீட்ரூட் மற்றும் மூலிகைகளின் நன்மைகள் அடங்கியுள்ளன.
இது மசாலக்கள், தயிர், பீட்ரூட் ஆகியவை சேர்த்து செய்யப்படுகிறது. இது சுவை, மணம், நிறம் அனைத்தும் நிறைந்த ஒரு சைட் டிஷ். இதை நீங்கள் சாதம், சப்பாத்தி என மெயின் டிஷ்களுடன் சேர்த்து சாப்பிடலாம். நலம் தரும் காய்கறிகளில் பீட்ரூட்க்கு என தனி இடம் உண்டு. இவற்றில் இரும்புச் சத்து, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிரம்பி காணப்படுகின்றன. இரும்புச்சத்து அதிகம் கொண்ட ஓர் காய்கறி தான் பீட்ரூட். இது இனிப்புச் சுவை கொண்டது. பலருக்கு இதை பச்சையாக சாப்பிட பிடிக்கும்.
பீட்ரூட்டைக் கொண்டு பொரியல், சாம்பார் என்று சமைக்கலாம். இது தவிர, பீட்ரூட்டைக் கொண்டு பச்சடியும் செய்யலாம். கேரளாவில் பீட்ரூட் பச்சடி மிகவும் பிரபலமானது. இந்த பச்சடி கண்களைப் பறிக்கும் அளவில் பிங்க் நிறத்தில் சுவையாக இருக்கும். கேரள உணவில் பச்சடி மிகவும் ஃபேமஸ். அந்த வகையில் பீட்ரூட்டில் எப்படி பச்சடி செய்வது என்று பார்க்கலாம். இந்த கேரளா ஸ்டைல் பீட்ரூட் பச்சடி சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.