Advertisement
சைவம்

ருசியான கேரளா பனங்கிழங்கு கார புட்டு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

Advertisement

புட்டு கேரளாவின் பாரம்பரிய காலை உணவுகளில் ஒன்று. புட்டு வழக்கமாக வாழைப்பழம், அப்பளம் அல்லது கடலை கறியுடன் பரிமாறப்படுகிறது. வீட்டில் புட்டு செய்வது மிகவும் எளிதானது. இப்போதெல்லாம் எல்லா கடைகளிலும் புட்டு மாவு பயன்படுத்த தயாராக வாங்கலாம். பொதுவாக ஆவியில் வேக வைத்த உணவுகள் உடலுக்கு நல்லது. இட்லி, கொழுக்கட்டை, புட்டு என செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

இதனையும் படியுங்கள் : காலை உணவுக்கு ஏற்ற ருசியான அவல் புட்டு இப்படி செய்து பாருங்க! யாரும் வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க!

Advertisement

ராகி புட்டு, அரிசி புட்டு, கோதுமை புட்டு, சிகப்பரிசி புட்டு, திணை மாவு புட்டு என புட்டுவகைகள் ஏராளம். வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தினமும் ஒரே உணவை சாப்பிட்டு அலுத்து போய் இருக்கும். பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதனால் காலை உணவு வித்தியாசமான வகையில் இருக்க பனங்கிழங்கு புட்டு செய்து கொடுங்கள்.

கேரளா பனங்கிழங்கு கார புட்டு | Kerala Pangilangu Kara Puttu

Print Recipe
புட்டு கேரளாவின் பாரம்பரிய காலை உணவுகளில் ஒன்று. புட்டு வழக்கமாக வாழைப்பழம், அப்பளம் அல்லது கடலை கறியுடன் பரிமாறப்படுகிறது. வீட்டில் புட்டு செய்வது மிகவும் எளிதானது. பொதுவாக ஆவியில் வேக வைத்த உணவுகள் உடலுக்கு நல்லது. இட்லி, கொழுக்கட்டை, புட்டு என செய்து குழந்தைகளுக்கு
Advertisement
கொடுக்கலாம். வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தினமும் ஒரே உணவை சாப்பிட்டு அலுத்து போய் இருக்கும். பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதனால் காலை உணவு வித்தியாசமான வகையில் இருக்க பனங்கிழங்கு புட்டு செய்து கொடுங்கள்.
Course Breakfast, snacks
Cuisine Indian
Keyword puttu
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 3 People
Calories 354

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 கரண்டி
  • 1 இட்லி பாத்திரம்

Ingredients

  • 6 பனங்கிழங்கு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 6 பல் பூண்டு
  • 4 வர மிளகாய்
  • உப்பு தேவையானஅளவு

Instructions

  • முதலில் கிழங்கை நார் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  • பனங்கிழங்கு இன்னும் கொஞ்சம் காய்ந்ததாக இருந்தால் புட்டு நன்கு உதிரியாக இருக்கும்.
  • பின் நறுக்கிய துண்டுகளுடன் சீரகம், மிளகாய், பூண்டு, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து பின் இந்த அரைத்த கிழங்கை புட்டாக பிடித்து இட்லி தட்டில் வைத்து வேக வைக்கவும்.
  • ஒரு 5 நிமிடங்கள் கழித்து பார்த்தால் மிகவும் சுவையான பனங்கிழங்கு கார புட்டு தயார்.
  • இது காபியுடன் அல்லது சாதத்திற்கு கூட்டாக பூண்டு குழம்பு போன்ற மசாலா குழம்புகளுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 354kcal | Carbohydrates: 8.02g | Protein: 4.12g | Fat: 1.06g | Sodium: 22mg | Calcium: 9.86mg | Iron: 0.32mg

Advertisement
Prem Kumar

Recent Posts

குளு குளுனு பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம், வீட்டிலேயும் சுலபமாக இப்படி செய்ய அசத்துங்க!

ஐஸ்கிரீம் என்றால் அனைவருக்கும் ரொம்பவே பிடித்தமான ஒரு விஷயம் தான். குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை ஐஸ்கிரீம் விரும்பாதவர்கள்…

1 மணி நேரம் ago

எல்லா வெரைட்டி சாதத்துக்கும் சாப்பிடுற மாதிரி ஒரு சூப்பரான முட்டை தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

வீட்ல நான்வெஜ் எடுக்க முடியல அப்படின்னா நம்ம எல்லோருக்கும் மைண்டுக்கு வருவது முட்டை தான். முட்டையை வைத்து குழம்பு முட்டை…

2 மணி நேரங்கள் ago

வீட்டில் மகிழ்ச்சி பொங்க செய்ய வேண்டிய மூன்று விஷயங்கள் இதோ!

ஜோதிட ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் நம்மை சுற்றிலும் நம்பிக்கை சுற்றிலும் நமக்குள் இருக்கும் எதிர்மறையா ஆற்றல்களையும் எண்ணங்களையும் விரட்டுவதற்கு நிறைய…

3 மணி நேரங்கள் ago

இட்லி, தோசைக்கு ஏற்ற நெல்லை ஸ்பெஷல் கார சட்னி இப்படி ஓரு தரம் செய்து பாருங்க!

எப்பொழுதும் இட்லி, தோசைக்கு சாம்பார், சட்னி, போன்று செய்து சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? உங்களுக்கு காரசாரமாக சாப்பிடனுனு…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 01 மே 2024!

மேஷம் நண்பர்கள் ஆதரவு அளித்து உங்களை மகிழ்விப்பார்கள். நீங்கள் கடன் வாங்கப் போகிறீர்கள் மற்றும் நீண்ட காலமாக இந்த வேலையில்…

8 மணி நேரங்கள் ago

அடுத்தமுறை இப்படி பாலமேடு ஸ்பெஷல் ஆனியன் ரவா தோசை இப்படி செய்து பாருங்க!

அனைவரும் விரும்பி உண்ணும் இந்த உணவு, மேலும் ஈஸியான ரெசிபியும் கூட. இப்பொது ஆனியன் ரவா தோசையை எப்படி செய்வதென்று…

16 மணி நேரங்கள் ago