- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 22 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, evening
குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் இது போன்று ஒரு முறை அவள் புட்டு செய்து கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. அதுமட்டும் அல்லாமல் மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Ingredients
Method
முதலில் கடாயில் நெய் விட்டு அவலை போட்டு வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.
வறுத்த அவலை மிக்சியில் போட்டு ரவை போன்று பொடித்துக்கொள்ளவும்.
அடுத்து பொடித்த அவலை ஒரு பௌலில் சேர்த்து அத்துடன் உப்பு, பால் தெளித்து 5 நிமிடம் மூடி வைத்து ஊற விடவும்.
அடுத்து புட்டு குழலில் அவல் மற்றும், தேங்காய் துருவல் என மாரி மாரி குழலில் போட்டு குக்கரில் வேக விடவும்.
வெந்ததும் புட்டை உதிர்த்து அதில் சர்க்கரை மற்றும் சிறிதளவு நெய் சேர்த்து கிளறி சாப்பிடவும்.






