- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 3
- Cuisine
- Indian
- Course
- Breakfast, snacks
புட்டு கேரளாவின் பாரம்பரிய காலை உணவுகளில் ஒன்று. புட்டு வழக்கமாக வாழைப்பழம், அப்பளம் அல்லது கடலை கறியுடன் பரிமாறப்படுகிறது. வீட்டில் புட்டு செய்வது மிகவும் எளிதானது. இப்போதெல்லாம் எல்லா கடைகளிலும் புட்டு மாவு பயன்படுத்த தயாராக வாங்கலாம். பொதுவாக ஆவியில் வேக வைத்த உணவுகள் உடலுக்கு நல்லது. இட்லி, கொழுக்கட்டை, புட்டு என செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
இதனையும் படியுங்கள் : காலை உணவுக்கு ஏற்ற ருசியான அவல் புட்டு இப்படி செய்து பாருங்க! யாரும் வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க!
ராகி புட்டு, அரிசி புட்டு, கோதுமை புட்டு, சிகப்பரிசி புட்டு, திணை மாவு புட்டு என புட்டுவகைகள் ஏராளம். வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தினமும் ஒரே உணவை சாப்பிட்டு அலுத்து போய் இருக்கும். பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதனால் காலை உணவு வித்தியாசமான வகையில் இருக்க பனங்கிழங்கு புட்டு செய்து கொடுங்கள்.
Ingredients
Method
முதலில் கிழங்கை நார் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பனங்கிழங்கு இன்னும் கொஞ்சம் காய்ந்ததாக இருந்தால் புட்டு நன்கு உதிரியாக இருக்கும்.
பின் நறுக்கிய துண்டுகளுடன் சீரகம், மிளகாய், பூண்டு, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து பின் இந்த அரைத்த கிழங்கை புட்டாக பிடித்து இட்லி தட்டில் வைத்து வேக வைக்கவும்.
ஒரு 5 நிமிடங்கள் கழித்து பார்த்தால் மிகவும் சுவையான பனங்கிழங்கு கார புட்டு தயார்.
இது காபியுடன் அல்லது சாதத்திற்கு கூட்டாக பூண்டு குழம்பு போன்ற மசாலா குழம்புகளுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.





