ஆரோக்கியமான கொள்ளுப்பொடி சாதம் வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!
மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதுவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலான ஒரு சமையலை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் கொள்ளு இருந்தால் அதை வைத்து கொள்ளுப்பொடி சாதம் செய்யுங்கள். பொதுவாக வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும
மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதுவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலான ஒரு சமையலை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் கொள்ளு இருந்தால் அதை வைத்து கொள்ளுப்பொடி சாதம் செய்யுங்கள். பொதுவாக வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா.
அதனால் அவ்வப்போது நம் பிள்ளைகளுக்கு வழக்கமாக நாம் செய்து கொடுக்கும் லஞ்ச் பாக்ஸ் ரெசிபிகளுக்கு மாற்று உணவுக்கான நமது தேடல் தீராதது. அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான மற்றும் மிகவும் சுவையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி. தினமும் நாம் விதவிதமான உணவுகளை செய்வோம். ஆனால் ஆரோக்கியமான உணவு செய்கிறோமா என கேட்டல் அது கேள்வியாக இருக்கும். இதற்கு ஒரு பதில் உணவாகத்தான் இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது கொள்ளுப்பொடி சாதம். கொள்ளு ஒருவகை பயறு வகையாகும்.
இதற்கு கொள், காணம், முதிரை என்று வேறு பல பெயர்களும் உண்டு. இது தட்டையாக பழுப்பு மற்றும் செம்மண் நிறத்திலும் காணப்படும். இதற்கு ஆங்கிலத்தில் ‘ஆர்ஸ் கிராம்’ என்று பெயர். கொள்ளில் அதிக அளவு உடலிற்கு தேவையான புரத சத்து நிறைந்துள்ளது. தினமும் சிறுதளவு கொள்ளினை ஊறவைத்து வெறும் வயிற்றில் உண்டு வந்தால் உங்களின் உடல் எடை விரைவில் குறியும் மேலும் உங்களுக்கு கட்டுடல் கிடைக்கும். உடல் இளைக்க வேண்டும் என விரும்புவார்கள் தினமும் உணவில் கொள்ளினை சேர்த்து வந்தால் விரைவில் நல்ல மாற்றம் காண முடியும்.
இவ்வளவு பயன் கிடைக்கும் கொள்ளில் எப்படி கொள்ளுப்பொடி சாதம் செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த ரெசிபியை ஒரே ஒரு தடவை செய்து பார்த்துவிட்டால் அதுக்கப்புறம் அடிக்கடி இந்த ரெசிபியை தான் செய்வீர்கள். இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள். குழந்தைகள் மட்டுமில்லாமல் வீட்டில் இருக்கக்கூடிய பெரியவர்களும் இந்த ரெசிபியை ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள். இப்ப வாருங்கள் சுவையான கொள்ளுப்பொடி சாதம் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : உருளை கிழங்கு சாதம் செய்வது எப்படி