Advertisement
சட்னி

கொத்த மல்லி நிலக்கடலை சட்னி செய்வது எப்படி ?

Advertisement

நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, ஒரு சட்னி, என மாற்றி மாற்றி இந்த இரு சட்னிகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த நிலக்கடலை சட்னியை செய்து பாருங்கள் மேலும் நிலக்கடையில் பரிப்டோபான் என்ற அமினா அமிலம் நிறைந்து காணப்படுகிறது.

இதையும் படியுங்கள் : நாவை சுண்டி இழுக்கும் கோவைக்காய் சட்னி செய்வது எப்படி?

Advertisement

இந்த பரிப்டோபான் என்ற அமினா அமிலம் செரட் டோனின் என்ற மூளை பகுதியை உற்சாகப்படுத்துகிறது. மேலும் நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கும் ஞாபகம் சக்தியே வளர்ப்பதற்கும் உதவியாக இருப்பதால் உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு இந்த சட்னியை செய்து குடுங்கள் மேலும் ருசி என்று எடுத்துக் கொண்டால கண்டிப்பாக இந்த சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் மிகவும் பிடித்த சட்னியாக மாறி போகும். இந்த நிலக்கடலை சட்னியை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

கொத்தமல்லி நிலக்கடலை சட்னி | Kothamalli Nilakadalai Chutney Recipe in Tamil

Print Recipe
நிலக்கடலையில் பரிப்டோபான் என்ற அமினா அமிலம் செரட் டோனின் என்ற மூளை பகுதியை உற்சாகப்படுத்துகிறது. மேலும் நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கும் ஞாபகம் சக்தியே வளர்ப்பதற்கும் உதவியாக இருப்பதால் உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு இந்த சட்னியை செய்து குடுங்கள் மேலும் ருசி என்று எடுத்துக் கொண்டால கண்டிப்பாக இந்த சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் மிகவும் பிடித்த சட்னியாக மாறி போகும். இந்த நிலக்கடலை சட்னியை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்.
Advertisement
Course chutney
Cuisine Indian, TAMIL
Keyword kothamalie Nilakadalai chutney, கொத்தமல்லி நிலக்கடலை சட்னி
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 people

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 1 கப் நிலைக்கடலை
  • 10 பல் பூண்டு
  • 2 துண்டு இஞ்சி
  • 5 பச்சை மிளகாய்
  • புளி நெல்லிக்காய் அளவு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 2 கொத்து கொத்தமல்லி
  • உப்பு தேவையான அளவு

தாளிக்க

  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 tbsp கடுகு
  • ½ tbsp உளுந்தம் பருப்பு
  • கருவேப்பிலை சிறிது
  • 2 வர மிளகாய்

Instructions

  • முதலில் கடாயை அடுப்பில் வைத்து நாம் எடுத்து வைத்துள்ள நிலக்கடலையை கடாயில் போட்டு நன்கு வறுக்கவும். நிலக்கடையில் நன்றாக மணம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
    Advertisement
  • பின் ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டு பற்கள், இஞ்சி துண்டுகள், பச்சை மிளகாய், புளி கொத்தமல்லி, கருவேப்பிலை, மற்றும் வறுத்த நிலக்கடலை போன்ற பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின்பு சட்னி நன்கு அரைபட்டதும் இதனுடன் உப்பு சேர்த்து அதன் பின் சிறிது தண்ணீர் சேர்த்து மறுபடியும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின் நாம் அரைத்த பொருட்களை மிக்ஸி ஜாரில் இருந்து வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். பின் மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
  • அதன் பின் எண்ணெய் நான்கு காய்ந்ததும் எண்ணெயில் கடுகை சேர்த்துக் கொள்ளவும். கடுகு பொரிந்தும், உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை மற்றும் வரமிளகாய் பொருட்களை போட்டு நன்றாக தாளிக்கவும்.
  • பின் இந்த தாளிப்பை சட்னியுடன் ஊற்றி கலக்கி கொள்ளவும் அவ்வளவுதான் சுவையான ருசியான கொத்தமல்லி நிலக்கடலை சட்னி தயாராகிவிட்டது.

Nutrition

Carbohydrates: 3.7g | Protein: 2.1g | Fat: 0.5g | Sodium: 46mg | Potassium: 521mg | Fiber: 2.8g | Sugar: 0.9g | Calcium: 67mg | Iron: 1.77mg

English Overview: kothamalli nilakadalai chutney is one of the most important dishes in south india. kothamalli nilakadalai chutney recipe or kothamallu nilakadalai chutney seivathu eppadi or kothamalli nilakadalai chutney recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil.

Advertisement
Prem Kumar

Recent Posts

வீட்ல இட்லி தோசை மாவு இல்லனா இந்த மாதிரி தக்காளி தோசை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

பொதுவாக எல்லாரோட வீட்லயும் இட்லி தோசைக்கு மாவு இருந்து கிட்டு தான் இருக்கும். அப்படி மாவு தீர்ந்து போயிட்டா கூட…

15 seconds ago

இன்றைய ராசிபலன் – 16 மே 2024!

மேஷம் தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். உங்கள் சோம்பேறி மனப்பான்மையால் வேலை…

1 மணி நேரம் ago

மீந்து போன சப்பாத்தியை வீணாக்காமல் அதில், சூப்பரான சப்பாத்தி நூடுல்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…

11 மணி நேரங்கள் ago

வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்கு ஒரு எளிமையான பரிகாரம்

இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…

13 மணி நேரங்கள் ago

மலாய் கோஃப்தா  ஒரு முறை இப்படி ட்ரை பன்னி பாருங்க சட்டி நிறைய செய்தாலும் காலியாகும்!

சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…

14 மணி நேரங்கள் ago

கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்து! இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

17 மணி நேரங்கள் ago