Advertisement
அசைவம்

ரூசியான கொத்து சப்பாத்தி செய்வது எப்படி ?

Advertisement

இன்று நாம் பார்க்க இருக்கிற உணவு கொத்து சப்பாத்தி ஆம் நாம் ஹோட்டல்களில் சாப்பிடும் கொத்து பரோட்டாவிற்கு பதிலாக நாம் வீட்டிலேயே இந்த கொத்து சப்பாத்தியை செய்து சாப்பிடலாம். நாம் புரோட்டாவை தவிர்த்து விட்டு இதை சாப்பிடுவதன் மூலம் நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். ஏனென்றால் புரோட்டா என்பது முழுக்க முழுக்க மைதாவினால் தயார் செய்யப்படுவது நம் உடலுக்கு உபாதைகளை ஏற்படுத்தக்கூடிய பொருட்களில் மைதாவும் ஒன்று தான்.

இதையும் படியுங்கள் : மென்மையான மற்றும் மிருதுவான சப்பாத்தி எப்படி செய்வது ?

Advertisement

ஆகையால் இனி கொத்து பரோட்டா சாப்பிடுவதற்கு பதிலாக இந்த கொத்து சப்பாத்தி ஒரு முறை உங்கள் வீட்டில் சமைத்து பாருங்கள் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் போதும் என்று சொல்ல மாட்டார்கள் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு ஒரு தரமான உணவு. இன்று இந்த கொத்து சப்பாத்தி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்து தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

கொத்து சப்பாத்தி | Kothu Chapathi Recipe in Tamil

Print Recipe
நாம் பரோட்டாவை தவிர்த்து விட்டு இதை சாப்பிடுவதன் மூலம் நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். ஏனென்றால் புரோட்டா என்பது முழுக்க முழுக்க மைதாவினால் தயார் செய்யப்படுவது நம் உடலுக்கு உபாதைகளை ஏற்படுத்தக்கூடிய பொருட்களில் மைதாவும் ஒன்று தான். ஆகையால் இனி கொத்து பரோட்டா சாப்பிடுவதற்கு பதிலாக இந்த கொத்து சப்பாத்தி ஒரு முறை உங்கள் வீட்டில் சமைத்து பாருங்கள் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் போதும் என்று சொல்ல மாட்டார்கள் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு ஒரு தரமான உணவு. இன்று இந்த கொத்து சப்பாத்தி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்து தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Course dinner
Cuisine Indian, TAMIL
Keyword Chapathi, சப்பாத்தி
Prep Time 20 minutes
Cook Time 30 minutes
Total Time 50 minutes
Servings 3 Person
Calories 120

Equipment

  • 1 கடாய்
  • 2 பவுள்

Ingredients

  • 4 சப்பாத்தி
  • 3 tbsp எண்ணெய்
  • ¼ கடுகு                            
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 2 பச்சை மிளகாய்
  • 2 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • 1 tbsp மிளகாய் தூள்
  • ½ tbsp கரம் மசாலா
  • ½ tbsp சீரகத்தூள்
  • 2 தக்காளி நறுக்கியது
  • 3 முட்டை
  • ½ tbsp மிளகுத்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • கொத்த மல்லி சிறிது

Instructions

  • முதலில் மென்மையான சப்பாத்தி தயார் செய்து கொண்டு. அதன் பின் அதில் நான்கு சப்பாத்திகளை சிறிது சிறிதாக வெட்டி கொள்ளுங்கள். பின்பு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்..
  • எண்ணெய் நன்கு காய்ந்தவுடன் அதில் சிறிது கடுகு சேர்த்து கொள்ளவும்,
    Advertisement
    கடுகு நன்கு பொரிந்தவுடன் அதில் பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து ஐந்து வினாடிகள் தாளித்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு இதனுடன் இரண்டு சீரிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி பின் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள். வெங்காயம் பொன்னிறமாக வரம் வரை வதக்கி கொள்ளுங்கள்.
  • அதன் பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறிவிட்டு வதக்கி கொள்ளுங்கள். அதன் பின்பு பொடியாக நறுக்கிய தக்காளி பழங்களையும் இதனோடு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  • தக்காளி மென்மையாக மசிந்து வந்ததும் அடிபிடிக்காமல் இருக்க சிறிய அளவு தண்ணீர் ஊற்றி வதக்கிக் கொள்ளவும். அதன் பின் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி முட்டைக்கு தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு பிரட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
  • முட்டை நன்கு வெந்ததும் இதனுடன் நாம் வெட்டி வைத்திருக்கும் சப்பாத்தி மற்றும் சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து ஒரு இரண்டு நிமிடங்கள் நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள் அவ்வளவு தான் கொத்து சப்பாத்தி இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 3person | Calories: 120kcal | Carbohydrates: 36g | Protein: 41g | Fat: 8.8g | Cholesterol: 4mg | Sodium: 30mg | Potassium: 243mg | Fiber: 2.4g | Sugar: 6.2g | Calcium: 22mg

English Overview: kothu chapathi is one of the most important dishes in india. kothu chapathi recipe or kothu chapathi seivathu eppadi or kothu chapathi in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Advertisement
Prem Kumar

Recent Posts

கடாய் சிக்கன் சாப்பிட இனிமேல் கடைக்கு போகணும் என்ற அவசியம் இல்லை வீட்டில் சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்!

சிக்கன்ல நம்ம என்ன வெரைட்டி செஞ்சு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கிற…

46 நிமிடங்கள் ago

வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய…

3 மணி நேரங்கள் ago

அருமையான பிரயாணி சாப்பிட ருசியான மலபார் சிக்கன் பிரியாணி இப்படி வீட்டில் ஈஸியாக செய்து பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா…

8 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த…

11 மணி நேரங்கள் ago

சேமியா பொங்கல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க சேமியா பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க!

சேமியா உப்புமாவா?? என்று அலறி அடித்து ஓடுபவர்களுக்கு சேமியாவில் இது போல ஒருமுறை நீங்கள் பொங்கல் செய்து கொடுத்தால் ரொம்பவே…

12 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு ருசியான டர்கிஷ் ப்ரெட் இப்படி செய்து கொடுங்க! டக்குனு காலை டிபன் ரெடி செஞ்சிடலாம்!!

டர்கிஷ் பிரட் டோஸ்ட் வழக்கமான டிபன் வகைகளில் இருந்து சற்றே வேறுபட்டது. இதனை மிகவும் சுலபமாக 10 முதல் 15…

12 மணி நேரங்கள் ago