கோவைக்காய் வைச்சி இப்படி கூட சாதம் செய்யலாமா ? அடுத்தமுறை கோவைக்காய் வாங்கினால் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

கோவைக்காய் சாதம் தென்னிந்தியாவில் ஒரு மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரியமான உணவு. மக்கள் அன்றாடம் செய்து உண்ணும் உணவுகளில் கோவைக்காய் சாதம் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. நாம் இன்று இங்கு காண இருப்பது கோவைக்காய் சாதம். கோவைக்காயில் பல விதமான சத்துக்கள் இருப்பதால் இவை உடம்ப

By Prem Kumar · 26/9/2023

கோவைக்காய் சாதம் தென்னிந்தியாவில் ஒரு மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரியமான உணவு. மக்கள் அன்றாடம் செய்து உண்ணும் உணவுகளில் கோவைக்காய் சாதம் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. நாம் இன்று இங்கு காண இருப்பது கோவைக்காய் சாதம். கோவைக்காயில் பல விதமான சத்துக்கள் இருப்பதால் இவை உடம்பிற்கு மிகவும் நல்லது.

குறிப்பாக இதில் உடம்பிற்கு மிகவும் அவசியமான இரும்பு சத்து, புரத சத்து, மற்றும் கால்சியம் அதிகம் இருக்கிறது. இதில் நாம் வேர்க்கடலையை சேர்த்து செய்வதால் உடம்பிற்கு புரத சத்து நன்கு கிடைக்கும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும், வேலைக்கு செல்பவர்களுக்கு மதியம் என்ன மாதிரியான உணவுகளை செய்ய வேண்டும் என்ற யோசனை இல்லத்தரசிகளுக்கு அதிகம் இருக்கும். இந்த பதிவு பெண்களுக்கு மட்டுமல்ல, வெளியூருக்கு சென்று வேலை பார்க்கும் ஆண்களுக்கும் உதவியாக இருக்கும்.

இதை செய்வதற்கு சிறிது நேரம் பிடித்தாலும் இதனின் செய்முறை மிகவும் எளிமையானவை தான். இதில் பல விதமான சத்துக்கள் இருப்பதால் இதை நாம் வாரத்திற்கு ஒரு முறை என்று நம் உணவு பழக்கத்தில் சேர்த்து கொள்ளலாம். நம் குழந்தைகளுக்கும் கோவைக்காய் சாதம் மிகவும் பிடிக்கும் மேலும் அவர்களின் உடம்பிற்க்கும் இவை தெம்பூட்டும்.

Recipes AMP · Quick view
View full