குடும்பத்தில் ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சி ஏற்பட செய்ய வேண்டிய வழிபாடு!!
ஒருவர் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் அவருக்கு கடன் பிரச்சினைகள் பணப்பிரச்சனைகள் இல்லாமல் இருக்க வேண்டும். அதேபோல் குடும்பத்திலும் எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் இருக்க வேண்டும். பண பிரச்சினைகள் இருந்தால் கூட வீட்டில் எந்த பிரச்சனைகளும் இல்லை என்றால் நம்மால் நிம்மதியாக வாழ முடிய
ஒருவர் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் அவருக்கு கடன் பிரச்சினைகள் பணப்பிரச்சனைகள் இல்லாமல் இருக்க வேண்டும். அதேபோல் குடும்பத்திலும் எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் இருக்க வேண்டும். பண பிரச்சினைகள் இருந்தால் கூட வீட்டில் எந்த பிரச்சனைகளும் இல்லை என்றால் நம்மால் நிம்மதியாக வாழ முடியும் இல்லையென்றால் நிம்மதியும் முற்றிலும் போய்விடும். கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனைகள் ஏற்பட்டாலும் சரி பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டாலும் சரி இதே நிலைதான் தொடரும். அப்படிப்பட்ட குடும்பம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர்வதற்கு செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி பார்க்கலாம்.
குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள்
கணவன் மனைவிக்கு இடையே உள்ள பிரச்சனைகளை சரி செய்வதற்கு இருவருக்கும் இடையே நல்ல புரிதல் வேண்டும். நல்ல ஒற்றுமை இருவருக்கும் இடையே இருந்தால் எந்தவித சண்டை சச்சரவுகளும் ஏற்படாது. குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்படுபவர்களும் பிறந்த குழந்தை சொல் பேச்சு கேட்காமல் இஷ்டத்திற்கு இருந்தாலும் குடும்பத்தில் பிரச்சனைகள் உண்டாகத்தான் செய்யும். அது மட்டுமில்லாமல் உடன்பிறப்புகளுடன் சண்டை சச்சரவுகள் பெற்றோர்களுடன் சண்டை சச்சரவுகள் என நிறைய பிரச்சனைகள் உள்ளது இந்த அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்வதற்கு தான் இந்த பரிகாரம்.
பரிகாரம் செய்ய வேண்டிய முறை
இந்த பரிகாரம் செய்வதற்கு நமக்கு பச்சை கற்பூரம் மற்றும் பெயர் சொல்லாதது என்று அழைக்கப்படக்கூடிய வசம்பு தேவைப்படும். இரண்டையும் தனித்தனியாக எடுத்து பொடி செய்து தனித்தனியாக டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இந்த இரண்டு பொருட்களையும் கண்டிப்பாக பூஜை அறையில் தான் வைக்க வேண்டும். இந்த பரிகாரத்தை திங்கட்கிழமை என்று காலை நேரத்தில் சூரியன் உதிக்கும் நேரத்தில் செய்ய வேண்டும். ஒரு சுத்தமான டம்ளரை எடுத்து அதில் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும் தயார் செய்து வைத்துள்ள ஒரு சிட்டிகை பச்சை கற்பூரத்தூளையும் ஒரு சிட்டிகை வசம்பு பொடியையும் சேர்த்து படுக்கையறையில் யாருடைய காலும் படாத இடத்தில் வைக்க வேண்டும் ஒரு வாரம் முழுவதும் அது அங்கேயே இருக்க வேண்டும். காலையில் இந்த தண்ணீரை கால் படாத இடத்தில் ஊற்றி விட்டு அந்த டம்ளரை சுத்தம் செய்து மறுபடியும் புதிதாக தண்ணீர் ஊற்றி இரண்டு கொடியையும் போட்டு வைக்க வேண்டும்.
பரிகாரத்தின் நன்மைகள்
இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வர கணவன் மனைவிக்கு இடையே அன்பு பாசம் ஒற்றுமை அதிகரிக்கும். அவர்களுக்கு இடையே இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் முற்றிலும் நீங்கும். குழந்தைகளின் பிடிவாத குணம் படிப்படியாக விலகி தாய் தந்தையின் மீது பாசம் அதிகரிக்கும். குழந்தை வாக்கியம் இல்லாதவர்களுக்கு சீக்கிரத்திலேயே குழந்தை பாக்கியம் ஏற்படும். பலவிதமான ஆன்மீக குணங்கள் நிறைந்த இந்த இரண்டு பொருட்களையும் படுக்கை அறையில் வைப்பதன் மூலம் கண்டிப்பான முறையில் குடும்பத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான மனக்கசப்புகளும் விலகும்.
இதனையும் படியுங்கள் : குடும்பத்தில் உள்ள சண்டைகள் நீங்கி ஒற்றுமையுடன் வாழ பரிகாரம்