குலதெய்வத்தின் சாபம் நீங்கி அருளை பெறுவதற்கு ஏற்ற வேண்டிய தீபம்
குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகமாக வந்து கொண்டே இருந்தால் குலதெய்வத்தின் ஆசிர்வாதம் முழுமையாக அந்த வீட்டிற்கு இல்லை என்று தான் அர்த்தம் நம் வீட்டில் உள்ளவர்களோ அல்லது நம் குடும்பமோ, குலதெய்வத்தின் சாபத்திற்கு ஆளாகியுள்ளதா குலதெய்வம் நம் வீட்டில் வசிக்கின்றதா தொடர்ந்து ஏன் கஷ்டங்கள
குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகமாக வந்து கொண்டே இருந்தால் குலதெய்வத்தின் ஆசிர்வாதம் முழுமையாக அந்த வீட்டிற்கு இல்லை என்று தான் அர்த்தம் நம் வீட்டில் உள்ளவர்களோ அல்லது நம் குடும்பமோ, குலதெய்வத்தின் சாபத்திற்கு ஆளாகியுள்ளதா குலதெய்வம் நம் வீட்டில் வசிக்கின்றதா தொடர்ந்து ஏன் கஷ்டங்கள் வருகிறது என்று சந்தேகம் உங்களுக்கு இருந்தால் இந்த குறிப்பிட்ட வழிபாட்டை தினமும் செய்து வர உங்களுக்கு அதற்கான பலன்கள் கிடைக்கும்
குலதெய்வம்
நாம் மற்ற தெய்வங்களை என்னதான் வணங்கினாலும் நம்முடைய குலதெய்வத்தை வணங்கினால் தான் நம் வீட்டிற்கு மகிழ்ச்சியும் செல்வமும் நிறையும் என்று ஒரு ஐதீகம் உள்ளது வருடத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வ கோவிலுக்கு போய் வழிபாடு செய்து வர வேண்டும் இல்லை என்றால் குலதெய்வத்தின் சாபத்திற்கு நாம் ஆளாகி விடுவோம் குலதெய்வத்தை நாம் மறந்து விட்டால் அதுவே நமக்கு ஒரு பெரிய சாபம்தான் குலதெய்வ வழிபாட்டை மறந்து இருந்தால் கூட அது சாபமாக மாறும். எனவே குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும் எனவே வருடத்திற்கு ஒருமுறையாவது நாம் குலதெய்வ கோவிலுக்கு போய் வழிபாடு செய்ய வேண்டும்.
குலதெய்வ வழிபாட்டு முறை
வீட்டில் சந்தோஷம் நிலைத்திருக்க வேண்டும் என்றால் உங்கள் வீட்டுக்கு குல தெய்வத்தின் திருவுருவப்படத்திற்கு முன்பாக ஒரு சிறிய மண் அகல்பானையில் தண்ணீர் ஊற்றி வைத்து மண் அகல் தீபத்தில் தினந்தோறும் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊத்தி தீபம் ஏற்ற வேண்டும் குலதெய்வத்தின் பெயரை உச்சரித்து குலதெய்வத்தை நன்றாக வழிபாடு செய்ய வேண்டும் தினமும் அந்த பாணியில் இருக்கக்கூடிய தண்ணீரை மாற்றி தான் வழிபாடு செய்ய வேண்டும்.
மங்கள காரியங்கள் நடக்க குலதெய்வ வழிபாடு
உங்களுடைய வீட்டில் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது மங்கள காரியங்கள் தடைபட்டுக் கொண்டே இருக்கிறது என்றால் ஒரு சிறிய தாம்பூல தட்டு சிறிய அளவிலான மண் குடுவை அதனை மூடும் அளவிற்கு ஒரு சிறிய தட்டு பச்சரிசி பசு நெய் தீபம் ஏற்ற திதி மன்னர்கள் தீபம் வாசனையான பூக்கள் நெய்வேதியம் என அனைத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டின் பூஜை அறையில் தாம்பூல தட்டு வன்கொடுவை அகல் விளக்கு அனைத்திற்கும் மஞ்சள் கொங்குமம் வைத்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் முதலில் தமிழை தட்டை கீழே வைத்து அதன் மேல் மண்கொடுமையை வைத்து மண் குடுவை முழுவதுமாக பச்சரிசியை வைத்து நிரப்ப வேண்டும் அந்த பச்சரிசிகள் ஐந்து ரூபாய் நாணயத்தை போட்டு விட வேண்டும் நாணயத்தின் மேல் ஒரு பூவை வைத்து அதன் மேல் மண்ணினால் செய்யப்பட்ட தட்டை வைத்து மூடி விட வேண்டும். அதன் மேல் ஒரு அகல் விளக்கு வைத்து அதில் நெய் ஊற்றி திரி போட்டு கீழே வைத்திருக்கும் தாம்பூல தட்டில் பூக்கள் வைத்து அலங்காரம் செய்து கொள்ளலாம்.
குலதெய்வத்திடம் மன்னிப்பு
உங்களால் முடிந்த நெய்வேத்தியத்தை குலதெய்வத்திற்கு படைத்து ஒரு மஞ்சள் துணியில் 1 ரூபாய் நாணயத்தை வைத்து முடிந்து உங்களுடைய வேண்டுதல் நடக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு குலதெய்வத்திடம் மன்னிப்பு கேட்டு அதனை அந்த தாம்பூல தட்டில் வைத்து விட வேண்டும். குலதெய்வத்தை நன்றாக மனதார வேண்டிக் கொண்டு தீபத்தை ஏற்றி தீப தூப ஆராதனை காட்டி வீட்டில் இருக்கக் கூடிய பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள் முடிந்து வைத்துள்ள அந்த ஒரு ரூபாய் நாணயத்தை குலதெய்வ உண்டியலில் போட வேண்டும். வருடத்திற்கு ஒரு முறை இந்த வழிபாட்டை நீங்கள் செய்தால் போதும் குலதெய்வம் நிச்சயமாக உங்களை காத்து அருளும். பூசிக்காக பயன்படுத்திய அனைத்து பொருட்களையும் மற்ற பூஜைக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் குடுவையில் இருக்கக்கூடிய பச்சரிசியை நன்றாக அரைத்து எறும்புகளுக்கு தானமாக போடலாம் இல்லையென்றால் பச்சரிசியை மாவாக அரைத்து கோலம் போடும்போது அதனையும் சேர்த்துக் கொள்ளலாம்.
குலதெய்வத்தின் பெயர் தெரியாதவர்கள் செய்ய வேண்டியவை
ஒரு சிலருக்கு குலதெய்வம் என்ன என்றே தெரியாமல் இருக்கும் அப்படி இருப்பவர்கள் உங்கள் வீட்டில் நீங்கள் மிகவும் உருகி வழிபட்டுக் கொண்டிருக்கின்ற தெய்வம் யாராக இருந்தாலும் அவர்களை உங்களுடைய குலதெய்வமாக ஏற்று அந்த தெய்வத்தை உங்கள் தலம் உரையிலிருந்து குலதெய்வமாக வழிபட்டு வரலாம். முருகரை மிகவும் பிடிக்கும் ஆனால் அவரை உங்கள் குல தெய்வமாக ஏற்றுக் கொள்ளலாம் பெண் தெய்வத்தை அதிகமாக வழிபடுவதாக இருந்தால் பராசக்தி சமயபுர மாரியம்மன் மீனாட்சி அம்மன் போன்ற அம்மன்களை உங்களுடைய குலதெய்வமாக ஏற்று வழிபடலாம். உங்கள் பரம்பரையிலிருந்து இந்த தெய்வங்களை குலதெய்வமாக ஏற்று வழிபாடு செய்யலாம்.