ஆடி மாதத்தில் சிம்மத்திற்கு பெயர்ச்சியாகும் சுக்கிரனால் உருவாகும் லக்ஷ்மி நாராயண யோகம் இனி இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் தான்!

ஜோதிட சாஸ்திரத்தில் லட்சுமி நாராயண யோகம் என்பது அனைத்து யோகங்களிலும் விட மங்களகரமானதாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, சுக்கிரன் லக்ஷ்மியின் வடிவமாக கருதப்படுகிறது. புதன் நாராயணனின் வடிவமாக கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த இரண்டு கிர

By Prem Kumar · 30/7/2024

ஜோதிட சாஸ்திரத்தில் லட்சுமி நாராயண யோகம் என்பது அனைத்து யோகங்களிலும் விட மங்களகரமானதாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, சுக்கிரன் லக்ஷ்மியின் வடிவமாக கருதப்படுகிறது. புதன் நாராயணனின் வடிவமாக கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றிணைந்தால், லக்ஷ்மி-நாராயண யோகம் உருவாகிறது. இது மிகவும் மங்களகரமானது. இதன் காரணத்தால் 4 ராசிக்காரர்களின் தொழில் மற்றும் வாழ்வில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது.

4 ராசிக்காரர்களுக்கு பெரிய அளவில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஜூலை மாதத்தில் சுக்கிரன் இரண்டு முறை தனது சஞ்சாரத்தை மாற்றுகிறார். கடந்த 7 ஆம் தேதி கடக ராசிக்கு மாறிய சுக்கிரன், கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு 31 ஜூலை 2024 அன்று மீண்டும் பெயர்ச்சியாகிறார். பணவரவை அதிகரிக்கும் சுக்கிரன், தொழில், வியாபாரத்தையும் சிறப்பாக மாற்றுவார். எதிர்பாராத பண வரவு ஏற்படும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும்! இதெல்லாம் யாருக்கு வாய்க்கும் என இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

எதிர்பாராத பணவரவால் மகிழ்ச்சியடையப்போகும் ராசிகளில் ரிஷப ராசிக்காரர்கள் முதலிடத்தில் இருப்பார்கள். எதிர்பாராத வெற்றி, முன்னேற்றத்திற்கான பொன்னான வாய்ப்பு என மகிழ்ச்சி கூடும் காலம் இது. நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். மேலும் நிறைய பணத்தை சம்பாதிக்கவும் முடிவும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு இருப்பதால், அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். இந்த ராசிக்காரர்கள் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.

துலாம்

சுக்கிரனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் வெவ்வேறுவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்றால் துலா ராசிக்காரர்களின் வாழ்க்கையில் குதூகலம் கொப்பளிக்கும். முதலீடுகளை செய்தால், எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வரப்போகும் ஆண்டில் நீங்கள் சில குறுகிய மற்றும் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இருப்பினும், இந்த பயணங்கள் உங்களுக்கு சில பெரிய நன்மைகளைத் தரும்.

சிம்மம்

சுக்கிர பகவானின் அருளாசி, சிம்ம் ராசிக்காரர்களுக்கு எப்போதும் உண்டு என்றாலும், ஆடி மாதத்தில் சிம்மத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரன் அழியாத செல்வத்தைத் தந்து மனதில் மகிழ்ச்சியை அதிகரிப்பார். சமூகத்தில் செல்வாக்குமிக்க ஒருவரின் நட்பு கிடைக்கும். இது எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். புத்திசாலித்தனத்தால், பணியிடத்தில் கொடுக்கப்பட்ட வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இந்த காலகட்டத்தில் மாணவர்கள் எந்த தேர்விலும் பெரும் வெற்றியை அடைய முடியும். உங்களுக்குள் ஒரு வித்தியாசமான நம்பிக்கை உருவாகுவதை நீங்கள் காண்பீர்கள்.

மேஷம்

மேஷத்திற்கு, ஜூலை 31 சுக்கிரப் பெயர்ச்சி அற்புதமான பலன்களைக் கொடுக்கும். இதுவரை இல்லாத பல மாற்றங்கள் நடைபெறும். இந்த நேரத்தில் உங்கள் கவலைகள் அனைத்தும் முடிவடையும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தருவதாக இருக்கும். தொழிலதிபராக இருந்தால், நல்ல நிதி லாபத்தைப் பெறக்கூடும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.

இதனையும் படியுங்கள் : சூரியன் பெயர்ச்சியால் ஆடி மாதம் அட்டகாசமான அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்!

Recipes AMP · Quick view
View full