பணவரவை அதிகரிக்க செய்ய வேண்டிய மகாலட்சுமி பூஜை!
வீட்டு செல்வம் பெருக மகிழ்ச்சி பொங்க வீட்டில் உள்ள பண பிரச்சனைகள் தீர்ந்து கடன் பிரச்சினைகள் தீர வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்க நமக்கு மகாலட்சுமி தாயார் உடைய அருள் மிகவும் முக்கியம். மகாலட்சுமி தாயாருக்கு செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டின் மூலம் வீட்டில் பண வரவை பெருக்க முட
வீட்டு செல்வம் பெருக மகிழ்ச்சி பொங்க வீட்டில் உள்ள பண பிரச்சனைகள் தீர்ந்து கடன் பிரச்சினைகள் தீர வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்க நமக்கு மகாலட்சுமி தாயார் உடைய அருள் மிகவும் முக்கியம். மகாலட்சுமி தாயாருக்கு செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டின் மூலம் வீட்டில் பண வரவை பெருக்க முடியும். இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் செய்வதால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் பலன்களும் இரட்டிப்பாகும். மகாலட்சுமி தாயார் நம்முடைய வீட்டில் தங்குவதற்கு நாம் இந்த எளிமையான சில வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்.
பண வரவு அதிகரிக்க செய்ய வேண்டிய பூஜை
இந்த குறிப்பிட்ட வழிபாட்டை பிரம்ம முகூர்த்த நேரத்தில் சுக்கிர ஹோரையான 6 மணியிலிருந்து ஏழு மணிக்குள் செய்வது நல்லது. மகாலட்சுமி தாயாருக்கு வெள்ளை நிறத்தால் ஆன பூக்களை வைத்து நெய்வேத்தியமாக கல்கண்டு பொங்கல் அல்லது வெண்பொங்கல் செய்து வைக்கலாம். தழும்பு குங்குமத்தை வைத்து மகாலட்சுமி தாயாருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் இந்த அர்ச்சனை செய்த குங்குமத்தை வெள்ளி குங்குமச்சி முறையில் போட்டு வைத்த தினம் நம்முடைய நெற்றியில் வைத்து வந்தால் நம்முடைய மனதில் உள்ள குழப்பங்கள் தீர்ந்து மனம் தெளிவு பெறும் வீட்டில் பண வரவும் அதிகரிக்கும்.
மகாலட்சுமி தாயாரின் அஷ்டோத்திரம்
மகாலட்சுமி தாயாரின் அஷ்டோத்திரத்தை படிக்க முடியாதவர்கள் மகாலட்சுமி தேவியாரின் பாடலை தொலைபேசியில் ஒலிக்கச் செய்தும் மகாலட்சுமி தாயாருக்கு அர்ச்சனை செய்யலாம். வெள்ளை நிறத்தாலான பிரசாதங்களையும் மலர்களையும் வைப்பதன் மூலம் சுக்கிர பகவானுடைய அருள் நமக்கு முழுவதுமாக கிடைக்கும் மகாலட்சுமி தாயார் உடைய அருளை நாம் பெற்றாலே வாழ்க்கையில் நமக்கு இருக்கக்கூடிய அனைத்து தேவைகளும் பூர்த்தியாகி பணவரவு அதிகரிக்கும். மகாலட்சுமி தாயார் யும் சுக்கிர பகவானையும் முழு மனதோடு வழிபட்டு வந்தால் வாழ்க்கையில் பல விதமான நன்மைகள் நடக்கும்.
இதனையும் படியுங்கள் : பணம் வசியம் ஏற்பட புரட்டாசி முதல் சனிக்கிழமை அன்று செய்ய வேண்டியவை